அன்பின் மகளே
அன்பின் மகளே..
தப்பிப் பிறந்த
தேவதை நீயே...
அம்மையும்
அப்பனும்
கருவிகள்
மட்டும்...
சேயெனப்பிறந்து
தாயெனச்
சிறந்தவள்..
வான் மகள் நீயே..
எமை
காத்திடுவாயே..
கருவறை
வளர்ந்த
கண்ணின் மணியே...
என்
இல்லத்தில்
பூத்த
புதுமலர் தாயே...
சிறுகை அளாவிய
அன்னம்
இனிக்கும்...
உன்னைத்
தூக்கிச் சுமந்ததால்
நெஞ்சம்
குதிக்கும்.
அம்பாரி
வேளையில்
யானையாய்
தவழ்ந்தேன்...
அப்பா
என்கையில்
மறுபடிப்
பிறந்தேன்...
உன்
சிறுநடை
வேளையில்
நான்
களிநடம்
புரிந்தேன்...
உன்
சிற்றாடை
அசைய
நான்
சில்லெனப்
பூத்தேன்..
பெற்றவர்க்கே
நீ
பெற்றவள்
ஆனாய்...
பற்றில்லா
வாழ்வின்
உற்றவள்
ஆனாய்..
அம்மையே..
தாயே...
அருமைப்
பிள்ளையே..
பிறந்த நாள்
உனக்கு..