ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

கதம்பம்...

22.04.2018
த.மு.எ.ச.க
புதுக்கோட்டை மாவட்ட மாநாட்டில்
தோழமைக்கவிஞனாக வாசித்த சில நறுக்குகள்....

××××××××××××××××××

தமிழ்த்தாய் வாழ்த்து..
மட மனிதர்கள்
எழ
வேண்டியதில்லை...
#########

நிர்மலாக்களின்
தேசம்
ஆசிபாக்கள்
நாசம்
######

புதிய கல்விமுறையில்
புத்தாக்கப்பயிற்சிமுடித்த
பேராசிரியை
வகுப்பெடுத்தார்
வாட்ஸ் அப்பில்...
#######

பாஸ் போடுறேன்னு
சொன்னவளுக்கு
பெயிலும்
கிடைக்க வில்லை
##########

பட்டங்கள்..
நூல்களின்
கையில்
######

இரவுநேரக்கல்வி
ஆரம்பிக்கலாம்
பல்கலைக்கழகம்
#######
ஆடியோ ஆபத்தாகிறது...
சைகை மொழி
படிப்பார்கள்
######

கேட்டால் தான்
தெரிகிறது..
கெட்டால் தான்
மேன் மக்கள்
#######

காவேரி
வந்துவிடும்
கர்நாடகாவில்
மழை
பெய்தால்
######

அமோக விளைச்சல்
லாரிகளில்...
காவேரி...
#######

மாநிலம்
வாழ்ந்த
வாழ்க்கைக்கு..
எத்தனையோ
மந்திரிகள்
########

ஆட்சியின்
லட்சணத்தை
அளந்து
காட்டியது
தெர்மாகோல்
#######

ஆய்வுக்குப்போனவர்
குப்பையை
அள்ளி
கோட்டுக்குள்
போட்டுக்கொண்டார்
#########

கன்னம்
குழி விழும் இடம்
######

உலக அமைதிக்காய்
ரதம் வந்த நாளில்
ஊரடங்கு
உத்தரவு
அமலிலிருந்தது
#########

கேரள
கோமாதா
ஈன்ற
கன்று
காவிநிறம்
#######

நசுக்கிய
மட்டையில்
முக்கியும்
அடிக்கலாம்
காவி
###########

நம்
முன்னோர்
ஒன்றும்
முட்டாளில்லை
நம்பமுடியாத
வித்தையை
மோடி
என்றார்கள்.
#######

மகாபாரத
காலத்தில்
இணையம்
இருந்ததாம்..
வீடியோக்கள்
வெளிவந்த
விவரமில்லை
சிஸ்டம்
அப்பவே
பெய்லியராயிடுச்சுடா..
##########

மைய்யத்தில்
ஸ்ரீ கிருஸ்ண
குமாரனுக்கு
ஓரத்தில் தான்
ஓரிடம்.
######

நீதி மன்றங்கள்
விசாரிக்கப்படவேண்டிய
இடம்
நீதிபதிகளை...
#######

கர்நாடக
இசை
புரிவதில்லை...
தமிழிசை
பிடிக்கவில்லை.
######

மந்திரி கலந்துகொண்ட
மரம் நடுவிழாவில்
மைல் நீள
தடுப்புக்கட்டைகள்
######

பிடிக்கவே
முடியவேயில்லை
மந்திரி...
மாட்டை
#######
பரிணாம வளர்ச்சி...
மனிதனிலிருந்து
மாடு...
நூற்றாண்டு
விழாக்கள்
முடிந்து
ஜல்லிக்கட்டு
#########

சேரிகள்
நிறைந்த ஊர்...
விலகிப்போனது
புறவழிச்சாலை
######

ஆகா
பாலங்கள்
என்றோம்...
மலைகள்
பள்ளமானது
##########

உள்ளூர்
உண்டியல்
உடைத்தவன்
திருப்பதிக்கு
வேண்டிக்கொள்கிறான்..
##########

சிலை
கடத்தப்படும் போது
தெய்வத்தின்
மதிப்பு
தெரிந்து போகிறது
######

வேம்பில்
பால் வழிந்தது..
பிள்ளையார்
பால் குடித்தார்..
அய்யனார்
குதிரையில்
போனார்..
அம்மன்
மாராப்பை
இழுத்து
மூடிக்கொண்டாள்.
#########

சிலைகள்
உலகம்
சுற்றும்
போட்டியில்
இரண்டாமிடம்
பெற்றன.
############

உதைப்பது
போல
நிற்கிறார்
கடவுள்
அடுத்த
அறையில்
அம்மனுக்கு
அபிஷேகம் நடக்கிறது.
#########

கோவணத்துடன்
இருப்பதால்
அவன்
தமிழ்க்கடவுள்
###########

பொதுவெளியில்
கழிக்காதீர்கள்..
ஏற்கனவே
நாறிக்கிடக்கிறது..
###########

சோப்புபோட்டு
கை கழுவுங்கள்...
மைக் கறைகள்
######

தூய்மை
பாரதம்
வேண்டுமெனில்
துடைப்பம்
எடுக்க வேண்டும்
#######

அடுத்த தேர்தலில்
கவனமாய்
இருங்கள்
கள்ள நோட்டுகள்
########

புதுப்பாட்டி
கதை சொல்கிறாள்..
ஒரு ஊர்ல
ஒரு
ராஜா
இருந்தானாம்
அவனுக்கு
ஒரு
அட்மின்
இருந்தாராம்..
########

என்ன தொழில்
செய்யலாம்
என்ற
நண்பனுக்கு
செருப்புக்கடை
என்றேன்..
நடக்கவும்
உதவும்..
#########

மையாய் இருந்தாலும்
தவறுகளை
அடிக்கும்
..சிவப்பு..
############

கலை இரவுகள்
விடியும் வேளை
சிவப்பாய் இருக்கும்
#######

















8 கருத்துகள்:

  1. //நம்
    முன்னோர்
    ஒன்றும்
    முட்டாளில்லை
    நம்பமுடியாத
    வித்தையை
    மோடி //

    நன்றாகவிருக்கிறது.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. இண்றைய நாட்டு நடப்பை நறுக்கு தெறித்தமைக்கு பாராட்டுகள்.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. சில வரிகளில் நாட்டு நடப்பு. நன்று. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. தூய்மை பாரதம் வேண்டுமெனில் துடைப்பம் எடுக்கவேண்டும்...

    உண்மை தான்..

    பதிலளிநீக்கு
  5. அனைத்தையுமே ரசித்தேன். அருமை.

    பதிலளிநீக்கு
  6. சின்ன சின்ன செய்திகள் நறுக்கென்று இருக்கிறது

    பதிலளிநீக்கு
  7. நிர்மலாக்களின்
    தேசம்
    ஆசிபாக்கள்
    நாசம் (அபாரம்)
    நாட்டு நடப்பு சிறு சிறு கவிதைகளாய்...

    பதிலளிநீக்கு