அன்பின் சக்திக்கு,
உன் சமீப பதிவுகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்தை சுற்றியே சுழல்வதை பார்க்கிறேன்.
வட்டத்தை தாண்டி சமூக உணர்வோடு எழுதும் எழுத்துக்கள் உன்னை இன்னும் உயிர்ப்போடு இருக்கச்செய்யும் என்பது என் கருத்து.
சக்தி...
இன்று ஒரு மனிதனின் பிறந்தநாள்.
வாழும்நாளெல்லாமிந்த சமூகத்திற்காய் போராடி,போராடி மெருகேறி ஒளிவீசும் ஒரு கருப்புவைரம் வந்துதித்த நாள்.
எதிரிகளாலும் மதிக்கப்படும் ஒரு ஏழைத்தோழரின் பிறந்தநாள்.
ஆனால் சக்தி,
கடந்த நாட்களில் ஊடகங்களில் தோழரை ஏன் முதல்வராக முன்மொழியக்கூடாதெனஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.
ஏன் வந்தது இந்த ஞானோதயம்?
அரைநூற்றாண்டுக்கும் மேலாய்களப்பணி,
மரணதண்டனைக்கைதியாய் சிறைக்கோட்டத்தில்,
இழந்த உறவுகள் எத்தனை?
தேர்ந்தவாசிப்பாளர்,
மிகச்சிறந்த ஜனநாயகவாதி.
இத்தனை நாட்களாய் எங்கே போயிருந்தீர்கள் ஊடகங்களே?கட்டுரையாளர்களே?
உங்கள் ஊடகங்களில் இவரை நல்லவர்,வாழும் காமராஜர் என்று எழுதினீர்களே அன்றி...முதல்வராக ஒருபோதும் முணுமுணுத்ததுகூட இல்லையே முன்பெல்லாம்.
கம்யூனிச இயக்கம் ஒன்றும் உங்கள் உரசிப்பார்த்தலில் மயங்கிப்போகாது.
இயக்கத்தின் களப்பணிகளில்,சில தோழர்களின் செயல்பாடுகளில் கருத்துவேறுபாடு இருக்கலாம்.
ஆனால் இயக்கம் காக்கும் விதிகளிலும்,கட்டுப்பாடுகளிலும் எந்த மாச்சர்யங்களும் இருக்க முடியாது.
தோழரை இயக்கம் கண்ணுக்குள் வைத்து காக்கிறது..தோழரும் இயக்கத்தை கண்ணாகவே பார்க்கிறார்.
இத்தனை வயதிலும் ஒரு முழுமையான இயக்கவாதியாக இருப்பவர்..
வெள்ளகாலங்களில் எல்லாரையும் காப்பாற்றிவிட்டு என்னைக்காப்பாறுங்கள் என்றதாய் எழுதி ஈரம் வரவைக்கப்பார்க்கின்றீர்கள்..
ஒற்றைவேட்டியுடன் வாழ்ந்த பேராசான் ஜீவாவின் இயக்கத்தில் வந்தவர் அப்படித்தான் இருப்பார்.
போதும்.. உங்கள் ஊடக
அரசியலை சிம்புவுடனும்,இளையராஜாவுடனும் நிறுத்திக்கொள்ளுங்கள்.
எங்கள் தோழர் முதல்வராக வந்துதான் மக்கள்பணி ஆற்றவேண்டுமென்பதில்லை.
எப்போதும் இயங்குபவர்...
கால்களே சக்கரம்...சக்கர நாற்காலி எப்போதும் வேண்டாம்.
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி..
கம்யூனிச இயக்கம் ஒன்றும் குடும்பக்கட்சியல்ல..
என்ன,எப்போது செய்யவேண்டும் என்பதை அவர்கள் தீர்க்கமாகச் செய்வார்கள்.
மக்களோடு மக்களாய் பயணிப்பவரை முதல்வர் என்ற மாயக்கோடிழுத்து இடைவெளி ஏற்படுத்தப்பார்க்காதீர்கள்.
அவர் எங்கள் தோழர்..
எங்களுடன் இருக்கட்டும்.
நீங்கள் வேறு ஆளைப்பாருங்கள்.
இன்னும் பல்லாண்டு வாழட்டும் எங்கள் தோழர்.
அன்புடன்,
செல்வக்குமார்.
அவர் எங்கள் தோழர்...
பதிலளிநீக்குஎங்களுடன் இருக்கட்டும்...
நீங்கள் வேற ஆளைப் பாருங்கள்....
அது...
அருமை... அருமை...
இப்படிப்பட்ட அருமைத் தோழர்தானே நாட்டுக்கும் வேண்டும். நல்லவர்களை எல்லாம் இயக்கத்தோடு சுருக்கி விடாதீர்கள் தோழரே! இனியாவது நாடு நலம் பெறட்டும்!
பதிலளிநீக்குஒரு ஆதங்கம் தான் ...91 வயது நண்பரே....
நீக்குஇவ்வளவு நாள் விட்டுவிட்டு...
நல்ல கருத்து.
பதிலளிநீக்குநல்லதொரு ஆக்கம் நண்பரே...
பதிலளிநீக்குஅவர் எங்கள் தோழர்..
பதிலளிநீக்குஎங்களுடன் இருக்கட்டும்.
நீங்கள் வேறு ஆளைப்பாருங்கள்.
இன்னும் பல்லாண்டு வாழட்டும் எங்கள் தோழர்.// சரியாகச் சொன்னீர்கள். நல்ல மனிதர்தான் ஆனால் இதுவரை சொல்லாமல் இப்போது இந்த வயதான காலத்தில் பெரிய பொறுப்பைத் தோளில் ஏற்றல் என்பது மிகவும் ...என்ன சொல்ல நல்ல கருத்து நண்பரே
அறுமை தோழா... பொது வெளியில் செத்தபிறகு சிலைவைத்து சாமிகும்பிடும் சமுக பொது புத்தியில்... நீண்ட இடைவேளைக்கு பிறகு முழித்துக்கொடார்களே ஆகாச்சிறந்த வியாபார நுணுக்கம்தான் இடது சாரிகளின் சார்பு இல்லாமல் எந்த ஊடக விவாதக்களமும், சாகித்திய அக்கடமிகளும் முழுமையாடாது... இடது சாரிகள்தான் நுால்களை அதிகமாகவும் தொடர்சியாகவும் நுகர்கிறார்கள் ஆகவேதான் வியாபரத்திற்கு வேசம் கட்டுகிறார்கள் வவேற்போம்... கவனத்தோடு களமாடுவோம்....
பதிலளிநீக்குதோழர் நல்லக் கண்ணு அவர்களை வாழ்த்துவோம்
பதிலளிநீக்குஇப்பொழுதாவது புத்தி வந்ததே என்று சந்தோசப் படுவீர்களா?
பதிலளிநீக்கு