வியாழன், 14 ஜனவரி, 2016

வருகிறேன்....

வீடெனக்கு
புதுக்கோட்டை.

அவளிருப்பாள்
சென்னைப்
பேட்டை..

தொழில்
இருவர்க்கு
இருந்தால்
தான்
தொல்லையில்லை
வாடகைக்கு.

வருந்தி
உழைத்ததெல்லாம்
வாங்குகிறார்
பஸ்காரர்.

பிள்ளைக்கு
பரிட்சை என்றால்
அலைபேசி
அறிவுரைகள்.

யாருக்கும்
காய்ச்சலென்றால்
வாட்ஸ் அப்பில்
மாத்திரைகள்.

சென்னையில்
மழைபெய்தால்
குளிரெடுக்கும்
உள்ளுக்குள்.

வெளிநாட்டு
வேலை தரும்
வேதனைக்கும்
குறைச்சலில்லை
வெளியூர்
வேலை.

கூடி
இரையெடுத்தலின்றி
கூடுதலாய்
ஆசையில்லை.

பொங்கல்
விடுப்பெனக்கு..

நீயோ
புதுக்கோட்டை
கிளம்பிவிட்டாய்.

விசும்பாதே..
என் வீட்டம்மா..
விதியிருந்தால்
விழுப்புரத்து
மோட்டல் ஒன்றில்
சந்தித்து
வாழ்த்திக்கொள்வோம்.




13 கருத்துகள்:

  1. அடடா!இன்னும் போய் சேரவில்லையா? மன ஆதங்கம் அருமை. சீக்கிரமாக பாதுகாப்பாக போய் சேர்ந்து பொங்கல் கொண்டாட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பொங்கல் விடுமுறையிலாவது சிக்கல் தீராதோ.......???

    பதிலளிநீக்கு
  3. சிறப்பாக குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
  4. தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
    மகிழ்வோடு நவில்கின்றேன்
    கனிவோடு ஏற்றருள்வீர்

    பதிலளிநீக்கு
  5. என்னாச்சு செல்வா? நீங்களும் பயணத்திலா....விழுப்புரச் சந்திப்பு ஏனோ?!!!சென்னை நோக்கி நீங்கள் புதுக்கோட்டை நோக்கி சுவாதி??!!

    பொங்கல் நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் தங்களின் அன்பு நண்பர்களுக்கும் தமிழ்புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!! நண்பரே........

    பதிலளிநீக்கு
  8. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  9. சிலர் அழுது கொண்டே சிரிப்பார். இது சோகமான நகைச்சுவையா? அல்ல நகைச்சுவையான சோகமா? ரசித்து படித்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    நகைச்சுவையாய் கவிதை என்றாலும் பலரின் சோகம் இதற்குள்..

    பதிலளிநீக்கு
  11. வருகின்றேன் என புறப்பட்டவரை காணவே இல்லையாம்? யாரோ தேடிகிட்டிருக்கின்றார்களாம்!செல்வா சார் பழயன கழிதலும் புதியவை புகுதலுமான தைத்திருந்தாள் புதிதாய் பிறந்திடுமாம்,புதிவவைகளுக்கு வழி காட்டுமாம். வார்த்தைகளிலிருக்கும் சோகம் தவிர்த்துவாழ்க்கை சோலையாகிடட்டும். பொங்கல் சாப்பிடவாவது கிடைத்தது தானே?

    பதிலளிநீக்கு
  12. Ungal niyaayamana yekkangal engal kangalil kanneeraay!!!! Eppadi ivvaru ezhudha mudiguradhu ungalaal mattum!! Appappa asandhu Ponom ungal varthaigalai kandu. Seekiram ungaluku idaipatta dhooram neengi motelil illai, veetiley vazhthikolla vazhthugirom.

    பதிலளிநீக்கு