புதன், 2 மார்ச், 2016

இதுவும் வேணும் ....

என்ன ஒரு ஆணவம்..?
பொது அரங்கில் தம்மை எத்தனை பேர் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உணர்வு கொஞ்சமும் இன்றி  ,
ஒரு முதியவரை லூசு  என அழைத்து தன்னையும் வெளிப்படுத்திக்கொண்ட ஒரு மனிதனுக்கு முதலில் என் கண்டனங்கள்...

அரசியலில் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் இருக்கட்டும்.
இது தான் தமிழன் பண்பாடா..?
இவர்தான் நாளைய தமிழகத்துக்கு தலைமை தாங்கப்போகிறவரா?

எனக்கு பயமாய் இருக்கிறது..

மக்கள் நலக்கூட்டணியை விட ஒரு ஓட்டு குறைந்தாலும் ..கட்சியை கலைத்துவிட்டு  கம்யுனிஸ்ட்  கட்சியில் சேர்ந்துவிடுவாராம்.

அட லூசு ,
அந்த கட்சியில அப்படியெல்லாம் சேர்த்துக்க மாட்டாங்க..


ஐயா. கூட்டணியே...
இதுக்காக வேணும்  மனசுவச்சு வேலை பாருங்க..


தோழர்கள்  இனி கவனமாக இருக்கவேண்டும்.

முதலில் இதுபோன்ற விவாதங்களுக்கு போவதற்கு முன்னால் ..எதிரில் யாருடன் விவாதிக்கப்போகிறோம் என்பதை பார்க்க வேண்டும்.
முன்பு ஒருமுறை சி.மகேந்திரன் அவர்களுக்கும் இதைபோன்று நடந்தது.


கூப்பிட்டு பேசவச்சவன் .. பெட்டியை கட்டி போய்விடுகிறான்..
பேச வந்தவர்களை மோதவிட்டு  வேடிக்கை காட்டி காசுபார்க்கும் இவர்களை முதலில் கவனியுங்கள்...

முதலில் இந்த ஊடகங்களின் பின்புலத்தை பாருங்கள்..

நீங்கள் டி.வி  யில் பேசித்தான் மக்களுக்கு விளக்கவேண்டியதில்லை...

ஏதோ கூப்பிட்டான் போனோம் னு ..பேச போனால்..

இப்படித்தான் கேட்கவேண்டிவரும்..

11 கருத்துகள்:

  1. எவன் ஒருவன் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படுகிறானோ அவனால் தான் தலைமை பொறுப்பை அடைய முடியும் ஐயா.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா....

    பதிலளிநீக்கு
  3. நாவடக்கம், அவையடக்கம் இல்லாதோர் எல்லாம் நமது தலைவர்களாக வரத் துடிக்கின்றார்கள். மக்களாகிய நாமும் இவர்களின் பின்னால்...அசிங்கம்

    பதிலளிநீக்கு
  4. அட லூசு ,
    அந்த கட்சியில அப்படியெல்லாம் சேர்த்துக்க மாட்டாங்க..////////

    நீங்க மட்டும் பதிவில் லூசு சொல்லலாமா செல்வா சார்?

    பதிலளிநீக்கு
  5. நானும் அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியை முகப்புத்தகத்தில் பார்த்தேன். வருத்தம் தான் மிஞ்சியது - இவர்களெல்லாம் தலைவர்கள்..... ம்ம்ம்ம்..

    என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், வயதில் மூத்தவரை அப்படிச் சொல்லி இருக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு

  6. தமிழர்களுக்கு ஏற்ற தலைவர் சீமான். இவரையும் ஒரு ஆளுன்னு மதிச்சு ஒரு கூட்டம் கூடுது பாருங்க. அதனால சீமான் இதுவும் பேசுவார் இதுக்கு மேலேயும் பேசுவார். சீமான் பேச்சை குறை கூறுபவர்கள் பேசாம பாகிஸ்தான் பக்கம் போயிடுங்க

    பதிலளிநீக்கு
  7. கேவலப்படுத்துகிறேன் என்று ஆணவமாய் பேசி, சீமான்தான் கேவலப் பட்டு போனார் :)
    த ம 7

    பதிலளிநீக்கு
  8. தாங்கள் சொல்வதுதான் சரி.....ஏதோ கூப்பிட்டான் போனோம் னு ..பேச போனால்..இப்படித்தான் பேச்சு வாங்க வேண்டிவரும்

    பதிலளிநீக்கு
  9. தாங்கள் சொல்வதுதான் சரி.....ஏதோ கூப்பிட்டான் போனோம் னு ..பேச போனால்..இப்படித்தான் பேச்சு வாங்க வேண்டிவரும்

    பதிலளிநீக்கு