பஞ்சு தின்ற
பொம்மையொன்றின்
நூல்
பிரிந்து
பறக்கிறது.
பிடுங்கிப்
படிக்கும்
வார
இதழொன்று
வளர்கிறது
வாசிக்காமலே..
தரவிரக்கிய
விளையாட்டொன்று
அவள்
வென்ற
புள்ளிகளோடு
நின்றுபோனது..
சீனக்களி
உருவமொன்று
தலைசிதைந்து
படுத்திருக்கிறது.
டேய்
எனும்
எதிரொலி
இப்போதும்
கேட்கிறது.
ஒலிம்பிக்கின்
பதக்கமென
காற்றாடிக்
கொண்டிருக்கின்றன..
அவள்
பள்ளிகளின்
அடையாள
அட்டைகள்.
தெர்மாகோல்
சித்திரங்கள்..
பிதுக்கிக்
கோடிழுத்த
பற்பசை
ரேகைகள்..
ஒருநாள்
ஓட்டிய
மிதிவண்டி.
ஒற்றை ரொட்டி
மீதம் வைத்த
நீல உறை..
நள்ளிரவு
விளக்கெரித்து
ஓடவிடுகின்றேன்
ஞாபகப்படங்களை..
எல்லாம்
படித்தவள்
எங்கிருந்து
சினம்
கற்றாள்?
பொல்லாக்
கோபம்
என் மேல்...
குரல்
மறைத்து
ஓடுகிறாள்..
அடுத்தடுத்த
அலைபேசி
மணியடித்தும்
எடுத்தாளில்லை..
நாங்கள்
பேசிக்கொள்வதில்லை
என
சட்டென
முடிவெடுக்காதீர்கள்..
அலைபேசி
வழிதான்
பேசவேண்டும்
என்பதில்லை..
என்னாச்சு செல்வா? சின்னவளுக்கு என்ன கோபம்?
பதிலளிநீக்கு//நாங்கள்
பேசிக்கொள்வதில்லை
என
சட்டென
முடிவெடுக்காதீர்கள்..
அலைபேசி
வழிதான்
பேசவேண்டும்
என்பதில்லை..//
அதானே!!!
மனங்கள் நினைவலைகளின் வழி அதிர்வெழுப்பிப் பேசிக் கொண்டிருக்கும் போது அலைபேசிதான் வேண்டுமா என்ன...ரசித்தோம்...
அலைபேசி
பதிலளிநீக்குவழிதான்
பேசவேண்டும்
என்பதில்லை..
அருமை நண்பரே....
மனங்கள் பேசிக்கொண்டால்
அலைப்பேசி தேவையில்லைதான்....
முடிவின் வரிகள் கவிதையின் சிறப்பு கவிஞரே... வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் நண்பரே
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
சிறப்பான கவிதை செல்லா சார்.
பதிலளிநீக்கு