பால்கார
வீடென அறியப்படும்..
மத்துகள் சுழல
மாடுகள்
உரச
குழலூதும்
கண்ணன்
பானையுருட்டி
படத்திலிருப்பான்
ஊதுபத்தி புகையில்.
சீம்பால்
கிடைக்குமென
சிறுவர்கள்
கூட்டமே
காத்திருக்கும்.
எப்போதும்
நெய்யுருக்கும்
முறுகலில்
காற்றும்
கனிந்திருக்கும்..
தலைமுறைகள்
மாற்றத்தில்
மாடுகளும்
மனிதர்களும்
வெளியேறிப்போனார்கள்.
இழுத்துக்கிடந்த
கிழவி
புதைத்து
இரண்டாம் நாள்..
பத்திரமாய்
எடுத்து
வைக்கிறார்கள்
பாக்கெட் பால்.
நன்று....நன்று...நன்று
பதிலளிநீக்குஇழப்புகள் எவ்வளவு.... மீண்டும் வருமா... ?
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குபாலுக்கு பாலூற்றிவிட்டோம். வேதனையே.
பதிலளிநீக்குஅருமையான கவிதை!
பதிலளிநீக்குஅருமை. இழந்தவைகள் ஏராளம்..
பதிலளிநீக்குஉண்மையைச் சொல்லும் கவிதை...
பதிலளிநீக்கு