அன்பின் சக்திக்கு,
நீர்மூழ்கி ரகசியங்கள் கசிந்ததாய் வதந்திகள்.
இந்த தேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
மாட்டுக்கு மகத்தான ஆதரவு அளிக்கும் அரசு
மனிதர்களை மறந்தே போனது.
மனிதர்களை மறந்தே போனது.
2020ல் வல்லரசாகிவிடும் என்ற மயக்கத்தில் இருக்கிறோம்..
கடவுளே அழுத கதையொன்று தான் நினைவுக்கு வருகிறது.
தினம் ஒரு ஏவுகணை விண்ணில் பறக்கிறது..
நாளுக்கொரு தேசத்துக்கு தலைவர்கள் பறக்கிறார்கள்..
நிலவுதாண்டி அயல் கிரகங்களை ஆராயப்போகிறார்கள்.
இந்தியா வல்லரசாக போதுமா இவையெல்லாம்.?
மருத்துவர்களில் பாதி போலி.
மலையெனத் தேங்கிக்கிடக்கும் வழக்குகள்.
மதங்களின் பால் மயக்கங்கள்.
அரங்கேறும் ஆணவக்கொலைகள்.
அரங்கேறும் ஆணவக்கொலைகள்.
எல்லாம் தள்ளிவைத்தாலும்....
இந்திய ராணுவத்தின் விமானமொன்று காணாமல் போய் மாதங்கள் கடந்துவிட்டது.
29 பேர்களுடன் கடல்மீது காணாமல் போனதன் சின்னத் துரும்பைக்கூட இன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை.
காணாமல் போனவர்களின் குடும்பங்கள் என்ன பாடுபடும் சக்தி?
இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை..
21 ம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பதாய் சொல்லிக்கொள்கிறோம்..
கண்ணுக்கெதிரே காணாமல் போக்கிவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருப்பதுதான் அறிவியலின் வளர்ச்சியா?
கண்ணுக்கெதிரே காணாமல் போக்கிவிட்டு இன்னும் தேடிக்கொண்டிருப்பதுதான் அறிவியலின் வளர்ச்சியா?
அதிகாரவர்க்கத்தின் அலைபேசி தொலைந்ததற்கு போடும் முயற்சியும் காணாமல் போன உயிர்களுக்கு இல்லையா?
ஒரு துணைக்கண்டத்தின் ஒப்பற்ற ராணுவ விமானம் காணாமல் போயிருக்கிறது...
கண்டுபிடிக்கப்பட
வேண்டியது விமானமல்ல.
தேசத்தின் மானம்.
வேண்டியது விமானமல்ல.
தேசத்தின் மானம்.
ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையும் இங்கே கவனிக்கத்தக்கது.
கடந்த நாள்களில் பரபரப்பாய் எழுதிய ஊடகங்கள் ஒரு முன்னால் கதாநாயகியின் கள்ளக்காதலை ஆராயப்போய் விட்டன.
யார் செய்வது சக்தி?
இதற்கான தூண்டுதல்களை?
இதற்கான தூண்டுதல்களை?
மேசைகள் தட்டுமிடமாகவும்,உள்ளும் வெளியும் நடக்குமிடமாகவும்,
பரஸ்பரம் குற்றங்கள் சொல்லுமிடமாகவும் மாறிவிட்ட மையங்கள் பேசவேண்டாமா இதை?
பரஸ்பரம் குற்றங்கள் சொல்லுமிடமாகவும் மாறிவிட்ட மையங்கள் பேசவேண்டாமா இதை?
அறிவியலின் அத்தனை துணையும் கொண்டு கண்டுபிடித்திருக்க வேண்டாமா இத்தனை நாட்களில்?
எத்தனை கப்பல் கொண்டு தேடினால் என்ன ..
இன்னும் கண்டுபிடிக்க முடியாத அளவில்தான் இருக்கிறதா உங்கள் முன்னேற்றம்?
இன்னும் கண்டுபிடிக்க முடியாத அளவில்தான் இருக்கிறதா உங்கள் முன்னேற்றம்?
29 உயிர்கள் இருக்கட்டும்.
நாட்டைக்காக்கும் இன்னும் பல பணிகளில் இன்னும் எத்தனை விமானங்களை தொலைக்கப்போகிறீர்கள்?
நாட்டைக்காக்கும் இன்னும் பல பணிகளில் இன்னும் எத்தனை விமானங்களை தொலைக்கப்போகிறீர்கள்?
அனுமன் சிந்திய சஞ்சீவி மூலிகையை தேடிப்போவதாய் சொல்லிக்கொள்கின்றீர்கள்.
அநாதையாகி நிற்கும் காணாமல் போனவர்களின் நிம்மதியை எங்கு தேடிக்கொடுப்பீர்கள்..
அநாதையாகி நிற்கும் காணாமல் போனவர்களின் நிம்மதியை எங்கு தேடிக்கொடுப்பீர்கள்..
வல்லரசாகிவிடுவோம் என்பதெல்லாம் எனக்கு கனவாகத்தான் தெரிகிறது சக்தி...
ஒரு நாடு வல்லரசு ஆகும் முன்
மக்கள் நலம் பேணும் நல்லரசு ஆவது அவசியம்.
மக்கள் நலம் பேணும் நல்லரசு ஆவது அவசியம்.
அன்புடன்.
செல்வக்குமார்.
செல்வக்குமார்.
'Kandupidikkap pada vendiyadhu vimaanam alla; naatin maanam' Arumaiyana savukkadi varthaigal Ayya. Oodagam seyyum magathana sevaiku thangalin varthaigal innum kadinamaagiyirundhalum magizhchi dhan. Aazhmanadhin vedhanaiyai azhagaay eduthuraitha vidham unmaiyileye arumai Meera.Selvakumar ayya. Ungal ennathaipol Vallarasaagum Munn nallarasaavadhu avasiyam.
பதிலளிநீக்குநெத்தி அடி,,, என்னமா எழுதி இருக்கீங்க,..
பதிலளிநீக்குஉங்கள் ஆதங்கம் நிறைவேறட்டும்
பதிலளிநீக்குஉண்மை
பதிலளிநீக்குஉண்மை
முதலில் நம் நாடு நல்லரசாகட்டும்
கருப்பெழுத்தில் இருப்பது
பதிலளிநீக்குகசந்தாலும்
அதுதானே உண்மை
பகிர்ந்த விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அடுத்த பிரச்னை வரும்வரை தேடுதல் இருக்கும். பின்னர் நாம் அடுத்ததைப் பற்றி பேச ஆரம்பித்து, இதனை மறந்துவிடுவோம்.
பதிலளிநீக்குஉண்மை அண்ணா...
பதிலளிநீக்குஎவ்வளவு கேவலம்... இருபத்தி ஒன்பது உயிர்...
எதைப்பற்றியும் கவலை கொள்ளாத அரசு...
அந்தளவுக்கு வசதி நம்மிடம் இல்லையென்று சொல்வது எத்தனை அபத்தம்...
உங்கள் வேதனை வரிகளாய்...