நாம பாட்டுக்கு என்னமோ எழுதிட்டுப்போனா என்ன வந்துச்சு.... ?
இந்தா மறுபடியும் தடம் புஸ்தகத்துல ஆரம்பிட்டாய்ங்களே..
கி.ரா வோட பேட்டி தடத்துல வந்துருக்கு..
மனுஷன் 91 வயசுல என்ன வேகம்..
ஒரு பாட்டுல சொல்லுவாங்க...
ஒரு பொண்ணு அத்தையா,அக்காவா,பாட்டியா, பொண்டாட்டியா எப்படிப்பட்ட பாதகியாவும் இருப்பாளாம்..ஆனா அம்மான்னு வரும்போது மட்டும் அம்மாவாவே இருப்பாளாம்...
என்னன்னா ஒருத்தன் எத்தனை பேருக்கு விரோதியா இருந்தாலும் யாரோ ஒருத்தனுக்காச்சும் நல்லவனாத்தான் இருப்பான்..
ஆனா அவர் ஒரே போடா போட்டாரு..
கவிதை சர்வவிரோதின்னு..
சர்வநாடியும் ஆடி இன்னும் அடங்காம இருக்கு...எனக்கு..
பெரியவர் சொன்னா பெருமாள் சொன்ன மாரி தான்...
ஆனா கவிதை எழுதுறவனெல்லாம் உலகத்துக்கா எழுதுறான்.?
எல்லாமே திருவள்ளுவராகனும்னா ?
ஏதோ கைல புடிச்சுக்கிற மாதிரி ஒரு போட்டாவோட புத்தகம் இருந்தா கெத்து தானே?
சொந்தக்காதல்,நொந்தகாதல் எல்லாம் எப்படித்தான் சொல்லி அழுகுறது..?
உழத்தெரிஞ்சவன் உழுறான்,
அடிக்கத்தெரிஞ்சவன் அடிக்கிறான்...
எல்லாருமா உங்கள ப்போல எழுதிரமுடியும்.
கரிசக்காட்ல விளையுறது அங்கதான் வெளையும்.
கோயில்பட்டில ஆப்பிளப்போட்டா அரை அடிகூட வளருமான்னு தெரியாது..
பள்ளிக்கூடத்தை தாண்டி நாலு எழுத்த எப்படித்தான் எழுதுறது?
அடேய்...
கவிதன்னு எழுதுனா தீட்டுன்னா..
என்னத்தை செய்றது..?
என்ன சொல்லிக்கொடுத்தீங்க பள்ளிக்கூடத்துல..
பாடம் தாண்டி ஒரு இழவும் கிடையாது..
மனப்பாடப்பாட்டுக்கு படிச்சது தவிர செய்யுள் ஞானம் செங்கல் தான்.
முகநூல்ல வந்து பார்க்கச்சொல்லனும்
அய்யாவே,
தமிழ்ன்னு ஒன்னு ஏதோ இழுத்துக்கிட்டு கிடக்குன்னா கவிதைங்கிற உயிர்க்கஞ்சி ஊத்திக்கிட்டே இருக்குறதுலதானே..
இவியள..கவிதை எழுதாதடான்னா போட்டாவா புடிச்சு காலை,மாலை,நல்லிரவு வணக்கம்னு போடுவாகளே..
அதுக்கு இது எம்புட்டோ மேலன்னு அண்ணாச்சிக்கு தெரியாமப்போச்சே..
இளவட்டம் மட்டும் இல்ல அண்ணாச்சி..
வயசாளிகளுக்கே இது தான் இப்ப பென்சன் மாதிரி டென்சனைக்குறைக்குது..
சக்கர இருக்கவனை இப்படியே உக்காருன்னா..அவன் உக்காருவான்..அது நிக்கிமா..கவிதைகூட அப்படித்தான் அண்ணாச்சி..
எனக்கு ஒரு கூட்டாளி இருக்காரு..
கையெழுத்து கால்மணிநேரம் போடுவாரு..( அவர் கையெழுத்து தாங்க)
கவிதை ராத்திரி கேட்டமுன்னா காலைல வாக்கிங் போகும்போது ஒரு குயர் நாட்ல ஓம்..லாபமெல்லாம் போட்டு வீட்டுக்கதவைத்தட்டி டெலிவரி செஞ்சுட்டு போவாரு..
அவரை எழுதாதடான்னா என்ன பண்ணுவாரு..பாவமில்லையா?
பலபேரு இப்படி இருக்காக..
இன்னொரு சேக்காளி.. யாரோ சொன்னாங்கன்னு தாடிவளத்தாத்தான் கவிதை வருமுன்னு ...
ரொம்பத்தீவிரமா முயற்சிபண்ணி இப்பத்தான் கொஞ்சூண்டு ஆட்டுத்தாடி மாதிரி வளர்ந்துருக்கு..இனி அது தாகூர் மாதிரி வளர்ந்து ..கவிதை எழுதனுமா வேணாமா?
வருசத்துக்கு ஒருத்தர் ரெண்டு புத்தகம் போடுறாங்க...
ஒன்னு கவிதைப்புத்தகம்..
இன்னொன்னு சமையல் குறிப்பு...
சில நாள் சமைக்கலாம்னா அவுங்க புத்தகத்தத்தான் எடுத்துக்குறது..
ஒரு நாளு..
சமையல் புத்தகத்துக்குப் பதிலா கவிதைப்புத்தகத்தை வாசிச்சுட்டே சமைச்சுட்டேன்..
உப்பப் போட மறந்துட்டேன்..
சாப்பிட்டா உப்பு அதிகமாவே இருக்கு..
இதென்னடா ...
மோடிமஸ்தான் வேலையா இருக்குண்ணு யோசிச்சா...
கவிதை படிச்சதுல அத்தனை கண்ணீரு..
சொல்லுங்க அந்தக் கவிதை யாரும் வாசிக்கலன்னாலும் அழுகாதா?
போற போக்குல சொல்லிட்டு சொத்து முதுகில அடிச்சுட்டுப்போனா பரவாயில்ல..
மூலத்துல குத்திட்டுப்போனா?
ஒரு வீட்டுக்கு சாமிரூம் இருக்கோ இல்லையோ சாக்கடை போற வழியில்லன்னா எப்படி..
யாருக்கு எப்படியோ எனக்கெல்லாம் கவிதைங்கிறது சுயஇன்பம் மாதிரித்தான் நடக்குது...
என்ன சிரமம்னா கொஞ்சம் வெளிய தெரிஞ்சு தொலைச்சுடுது..
ஆச்சி...மாடு வந்துருச்சு..கட்னா கட்டுங்க..கட்டாட்டிப் போங்கங்குற மாதிரி..
தோனுனதை சொல்லிட்டுப்போறேன்.
வயசாளிகள் திண்ணையில உக்காந்து பேசிக்கிட்டேதான் இருக்காங்க..
ஏன் பேசுற ..
ஒரு காசுக்கு புண்ணியமில்லன்னா..
அது பாவமா இல்லையா...
கவிதையோ கழுதையோ..
எழுதுறவனுக்கும் வாய்க்கிறது தான்..
சில சீதேவியா சிரிக்கும்..சில சீலப்பேனா அரிக்கும்...
சிரிச்சா ரசிங்க,அரிச்சா சொரிங்க..
அப்டித்தான் வருது..
பஸ்சப்புடிச்சு பாண்டிச்சேரி போய் கேட்டுட்டே வரலாம்னு..
சரி..இங்கன இருந்தே கேட்டுப்புடுவம்னுதான் கொட்டிப்புட்டேன் .
எல்லாத்துக்கும் மேல..
அண்ணாச்சி..
நீங்க கரிசக்காட்டு எழுத்துச்சீவன்..
சென்னைல எழுதுறாக, மருதைல எழுதுறாக,தஞ்சாவூர்ல எழுதுறாக..
படிக்கும் போதே புரிஞ்சுக்குற மாதிரி இக்கு வச்சுத்தான் எழுதுறாக..
கவிதை எழுதுறவன அப்படில்லாம் கண்டுபிடிக்க முடியுதா?
வெள்ளைக்காரன் எழுதுனாலும் அப்படித்தான்,
வெள்ளக்கோயில் காரன் எழுதுனாலும் அப்படித்தான்..
குத்துமதிப்பா நாலு வரி எழுதி ஒரு வெள்ளைக்காரன் பேர கீழ போடுங்க படிச்சுட்டு போறாகலா இல்லையா?
சொல்லப்போனா நம்மூர்ல நல்லாத்தான் எழுதுறாங்க அண்ணாச்சி கவிதையெல்லாம்..
வெளிநாட்டுக்காரன் கவிதையெல்லாம் நம்ம மொழியில படிச்சுப்பார்த்தா.. பேஸ்புக்குல நம்மூர்ப்பய எழுதுறதவிட சீண்டமாட்டாமத்தான் கிடக்கு..
எல்லாத்துக்கும் சரி...மொழிய திட்டாதீக அண்ணாச்சி... தமிழ் இல்லன்னா வேற மொழில எழுதிருப்பேங்கிறீக...
சரிதான் உங்களுக்கு தெலுங்கும் தெரியும்..
எங்களுக்குத்தான் வேற நாதியில்லையே?
விட்டுட்டுப்போங்க அண்ணாச்சி..
ஏதோ எழுதிட்டுப்போறோம்..
எழுதாத எழுதாத கவிதைன்னா..
இந்தா இப்ப நான் எழுதுற மாதிரிதான் எழுதனும்..
எங்களுக்கு ஒன்னும் பிரச்சன இல்ல அண்ணாச்சி..
மறுபடியும் தடத்துல பேட்டி எடுத்தான் நீங்கதான் திட்டுவீக...

Arumai
பதிலளிநீக்குஅருமை.
பதிலளிநீக்குநல்ல அலசலுக்கும் தெளிவான பார்வைக்கும் நன்றி.
பதிலளிநீக்குஉங்க கவிதைகளை படிச்சு இருந்தால் அவர் அப்படி சொல்லி இருக்கமாட்டருஙக எவனோ கவிதை என்று எழுதி அவரிடம் கொடுத்து படிக்க சொல்லி இருப்பாருங் அதனால்தான் மனுசன் அப்படி சொல்லி இருக்கிறாரு போல
பதிலளிநீக்குசெய்யுள் தான் செங்கல். அருமை..

பதிலளிநீக்கு“சிரிச்சா ரசிங்க,அரிச்சா சொரிங்க”..இஇது கரிசல்காட்டு பெருசுக்கத்தானே...ன்னு நிணைக்கிறேன்...
பதிலளிநீக்குஅப்படிச் சொல்லுங்க . நாமெல்லாம் கஞ்சி குடிக்கிறோமோ இல்லையோ கவிதைன்னு எதோ கிறுக்காட்டி , பைத்தியம் பிடிச்சு இல்ல அலைவோம்.
பதிலளிநீக்குThadam ennatha solla varudhu? Oruthar ennanna kadhaigaluku Naattin uyariya virudhugal Avar ok sonna than kodupargalaam, indha Ayya matravargalai kavidhaiye ezhudha vendam nu solrar. Thadam satru idam parthu kadam vaasikalam. Ki.Raa.ayya thamadhu aatramaiyin velipadaaga Thamizhaiye kuri vaithar endral, kavignargale ini than neengal adhigam ezhudha vendum.
பதிலளிநீக்குEndha makkal ivargaluku angeegaram koduthargalo,kodukkiraargalo andha makkale dhan matra padaipaaliyin ezhuthukalai virumbugirargal. Ivargalai pondravargal irundhadhal dhan Karnataka sangeethathil niraiya raagangal azhindhu poyy vittadhu endru solvargal. Adipadaiyai periyavaa jaldhi irangi vandhu purinjukonum paarungo.
ஆத்தாடி என்ன ஆவேசமான தாக்குதல்...தேவையானது தான்
பதிலளிநீக்குஆத்தாடி என்ன ஆவேசமான தாக்குதல்...தேவையானது தான்
பதிலளிநீக்கு