நாலுவயசு..
அக்காக்கள்,அண்ணன்கள் எல்லாம் காலையில் பைகளை எடுத்துக்கொண்டு பட்டாம்பூச்சிகள் போல போகும்போது பள்ளிக்கூடம்னா ஏதோ அதிசயஉலகம் போல..
நாமளும் போகனும்னு ஒரு அக்காவின் விரல்களை பிடித்துக்கொண்டு ஒருநாள் போயேவிட்டேன்..
தரையில் போடப்பட்ட வரிசைப்பலகை..
வகுப்புகளைப்பிரிக்கும் தடுப்புகள் ஆசிரியர்கள் வகுப்பில் இல்லாத போது சலசலவென பேசி சிரித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள்..
வீட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் பள்ளிக்கூடம் பூமியிலிருந்து சந்திரனுக்கு போய்வந்த ஆனந்தம்...
அடுத்தவருடத்தின் தொடக்கத்திலேயே அப்பா என்னை கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடம் சேர்க்க வந்துவிட்டார்...
முத்துக்கருப்பன் என்னும் தலைமை ஆசிரியர் அறையில் பதிவு நடக்கிறது..
வண்ணங்களில் இருந்த சாக்பீஸ் பெட்டிகள், வரைபடம்,வரிசையான தலைவர்கள் படங்கள், உலக உருண்டை என சுற்றிசுற்றி வருகிறேன்..
அப்பா கிளம்பிவிட்டார்.
அப்பா அத்துடன் சேர்த்து மூன்றுமுறை மட்டுமே எனக்காக பள்ளிக்கூடம் வந்திருக்கிறார்..
உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கவும் மறுபடியும் சான்றிதழ் வாங்கவும் என.
மற்றபடி எனக்கு துளி அறிவேனும் இருப்பதாய் நானும் நீங்களும் நினைத்தால் அதற்கான முழுக்காரணமும் என் ஆசிரியப்பெருமக்களன்றி யாராலும் இல்லை..
இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள் அவர்களின் ஆசிரியர்களோடு சகஜமாக பேசுவதைப்பார்க்கும் போது அப்படி ஒரு ஆச்சர்யம் எனக்கு வரும்.
எங்கள் காலங்களில் அப்படியெல்லாம் எங்களால் நினைத்தும் பார்க்க முடியாது..
நகரிலிருந்து வரும் ஒரு ஆசிரியை பேருந்துவிட்டு இறங்கும் போது காத்துக்கிடந்து அவரின் வயர்கூடையை வாங்கி வருவதில் அத்தனை சந்தோசமாக இருக்கும்.
விரல்களைப்பிடித்து "அ" சொல்லித்தந்த அனந்தர் சார்..
தலைப்பாகை கட்டிய தெய்வம் என்றால்..
பொறுமையான பெருமாள் சாரின் இரண்டாம் வகுப்பு அச்சரங்கள் தெரிந்த ஆர்ப்பாட்டம்..
வகுப்புகள் பிடிக்க ஆரம்பித்தது மூன்றாம் வகுப்பின் சம்பூர்ணம் டீச்சர் வகுப்பில்தான்..
அப்பாவின் சக ஆலைய்த்தொழிலாளியின் மனைவி..
உயரம் குறைவு என்றாலும் வானத்து தேவதையாய் தெரிவார் ஆங்கிலத்தின் எழுத்துகள் சொல்லும் போது..
A for Apple எனச்சொல்லி ஆப்பிள் படத்தைக்காட்டும் போது ஒரு தெய்வம் வந்து ஆப்பிளை எனக்கு ஊட்டுவது போலவே இருக்கும்.
ஜெயலட்சுமி டீச்சர் தன்னை அறியாமல் சொல்லிவிடும் சில அசைவ ஜோக்குகள் அர்த்தங்கள் புரியாவிட்டாலும் சிரிக்க வைக்கும்.
சோலைமுத்து ஆசிரியரிடம் அடிவாங்காத பையன்களே இல்லையென்றிருக்கும் பள்ளியில் எனக்கும் அவரே வாய்த்தார்.
பயத்துடன் தொடங்கிய நாலாம் வகுப்பு அவரிடம் அடியே வாங்கவில்லை என்ற கின்னஸ் சாதனையுடன் முடிந்தது என் வாழ்நாள் சாதனை.
ஐந்தாம் வகுப்பு மேரிஜான் என்னும் இன்னொரு அம்மா..
அப்பாவின் மேலாளர் மனைவி..
ஒரு ஆசிரியை எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற பிம்பத்தை என்னை யோசிக்க சொன்னால் இவரே வருவார்..
எத்தனை காலங்கள் கடந்தாலும் இணையங்களில் சில சங்கேதக்குறிகளுக்காக உன் ஆசிரியர் பெயரை எழுதென்றால் கை என்னையறியாமல் அவரின் பெயரை எழுதிவிடும்..
பனிரெண்டாம் வகுப்போடு எனக்கும் படிப்புக்குமான பந்தம் முடிந்துபோனது..
திரைப்படங்களில் வருவது போல் எப்போதேனும் பள்ளியின் வழியே போகும் போது..
அந்த வாதாமரங்களும்,குல்மொஹர் மரங்களும் சூழ்ந்த பள்ளிவளாகம் என்னை ஆவிசேர்த்து வாடா மகனே என அணைத்துக்கொள்கிறது..
கருவையில் வேலியிருந்த பள்ளியின் சுற்றில் சுவர் வைத்துவிட்டார்கள்..
காலை வணக்கக்கூட்டத்திற்காகவும்,
சுதந்திரதின கொடியேற்றத்துக்காகவும் கூடிய முகப்பு மைதானம் இப்போதும் கொடியசைத்து அழைத்துக்கொண்டே இருக்கிறது..
பள்ளியில் போட்ட தோட்டம், அழைத்துப்போன பக்கத்து ஊர்ச்சுற்றுலா..
எனக்கு எழுதித்தந்து பேசவைத்த தரைமேடை..
காய்ச்சலில் பரிட்சைக்கு போகமுடியாத போதும் பாஸ் செய்த பர பிரம்மாக்கள்..
ஆசிரியர்களின் மீது அப்படி ஒரு பிரியம் ஆழப்பதிந்ததனால் தான் ஆசிரியர் சகவாசம் இப்போதும் தொடர்வதாக நினைப்பதுண்டு.
நகரத்தின் கடைவீதிப் பரபரப்புகளில் சில வேளைகளில் என் ஆசிரியையை பார்த்துவிடுவதுண்டு...
காலில் விழுந்துவிடுவோமா என நினைத்து கரங்களை பிடித்துக்கொள்வேன் ஒரு பச்சப்பிள்ளைபோல்.
அறிமுகப்படுத்தும் போது முதலில் யாரெனப்புரியாத கண்களின் சுருக்கம் தாண்டி புரியும் போது தலையைத்தடவிக்கொடுப்பார்கள்.
கடவுளின் கைக்கும் அந்த கனிவு இருக்குமாவெனத்தெரியாது..
விசாரித்துவிட்டு அவர்கள் நம்மை விலகி நடக்கும்போது..
சொல்ல முடியாத ஒரு நன்றி உணர்வும்..பாசமும் அலைக்கழிக்கும்..
அய்யோ..என் தேவதை அம்மாவே..
என்னை உங்களுக்கு முதலில் அடையாளம் தெரியாத அளவிற்கு போய்விட்டதே என அழத்தொடங்கும் அவர்களின் முதுமை பற்றிய பயம்..
அட...நமக்கு அவர்கள் இன்னொரு அம்மா தான்...
ஆனால் நாம் ஒருவருக்கு மட்டும் அவர் அம்மா இல்லையே...எத்தனை வருடங்கள்..எத்தனை சின்னப்பிள்ளைகளுக்கு அறிவுப்பால் ஊட்டிய அம்மா...
தெய்வங்கள் அப்படித்தான் இருக்கும்..
வணங்கவேண்டியவர்கள் தான் தேடவேண்டும்.
அய்யோ..நீளும் அவர்கள் பற்றிய எழுத்துகளை எப்படி முடிக்க?
இப்படியன்றி?
உள்ளேன் அம்மா...
நெகிழ்ச்சியான பல நினைவுகளை மீட்டெடுத்த இந்த தினத்தில் ஆசிரியப்பெருமக்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..

Nekilvana pathivu manathai thodum padi
பதிலளிநீக்குஅருமையான நினைவுகள்...சொல்லிய விதம் அருமை.
பதிலளிநீக்குஎன் ஆசிரியர்களை பற்றி நான் எழுத வேண்டுமானால் ஒரு தொடர்கதையே எழுதலாம். அவ்வளவு இருக்கு.
Meera.Selvakumar Ayya, vazhakkam pol ungal ezhuthin vannathirkul engalai moozhga vaithu vitteergal. Engal vazhvin pazhaiya pakkathai siridhu thottu sendralum ungal varigalukkul muzhudhum izhuthu selvadhu thangal mandhiram. Vizhithiraiyil kanneer mutti cellidai pesi nanaindhu vittadhu. Manasu kanathu oru madhiri agivittadhu. Ungal ezhuthin varthaigalin ragasiyam dhan Enna!! Ungalodu serndhu engalaiyum "ullen Amma" chorus solla vaithamaiku nandri.
பதிலளிநீக்குமலரும் நினைவுகள் என்றுமேஇனிமையானவை
பதிலளிநீக்குஅதிலும் பள்ளிக் கால நிலைவலைகள்
வாழ்வு முழுதும் எண்ணி எண்ணி இன்புறத் தக்கவை
நன்றி நண்பரே
சிறப்புப்பதிவு
பதிலளிநீக்குமனம் கவர்ந்தது
பின்னோக்கி மனதை
இழுத்தும் சென்றது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Arumayana Pathivu Padikka Padikka pallikkuudaththirku Alaiththu selgiradhu ..... Intha pathivai enaku anupi padithu paar endru sonna kilona Cheachi Avargalukku Nandrigal Pala
பதிலளிநீக்குஅருமை செல்வா.....
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கும் இப்படி இனிமையான நினைவுகள்..... உங்களால் அந்த நினைவுகளை மிக அழகாய் வெளிப்படுத்த முடிந்திருக்கிறது. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
மலரும் நினைவுகளாய் உங்களின் பள்ளிப் பருவத்தை கண் காண்பது போல் உள்ளது. வாழ்த்தியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குமலரும் நினைவுகளாய் உங்களின் பள்ளிப் பருவத்தை கண் காண்பது போல் உள்ளது. வாழ்த்தியமைக்கு நன்றி.
பதிலளிநீக்குஅடடா என்னவொரு அழகிய மலரும் நினைவுகள், நானும் பின்னோக்கி என் பள்ளிப் பருவத்திற்குச் சென்று வந்ததுபோல் உணர்கிறேன்.
பதிலளிநீக்கு