அன்பின் சக்திக்கு,
நலம் .நலமறிய ஆவல்.
இப்பவும் இங்கே தேவையான சில சாமான்களை மொத்த விற்பனைக்கடைகளில் வாங்கிக்கொள்கிறேன்.
சில தினங்களுக்கு முன்னால் சீனப்பொருட்களின் அசுரப்பாய்ச்சலைப் பற்றி எழுதி இருந்தது நினைவில் வந்தது.
தமிழ்நாட்டு குக்கிராமத்திலும் ஒரு மலையாளியேனும் டீக்கடை வைத்திருப்பதை பல காலத்திலிருந்து பார்த்து வந்திருக்கிறோம்.
அவர்கள் நுழையாத இடங்களிலும் வடநாட்டு சேட்டுகள் நுழைந்து விட்டார்கள் இப்போது.
நகைக்கடை வீதிகளில் நாளெல்லாம் போராடி நம்மவர்கள் கிடக்க..
ஒரு எலக்ட்ரானிக் தராசுடன் உட்கார்ந்து ஆட்டிவைப்பது சில சேட்டுகள் தான்.
முடிக்கான கிளிப்பிலிருந்து,
செல்போனுக்கான எல்லா பாகங்களும் சேட்டுகள் வசம்..
சென்னையில், மும்பையில் ,3 ரூபாய்க்கு வாங்கும் ஒரு பொருள் சர்வ சாதாரணமாக 10 ரூபாய் விற்கிறார்கள்.
சினிமாத்தொழிலும் அவர்கள் கைகளிலேயே இருக்கிறதாம்.
சக்தி..
அவர்கள் தொழில்களில்,
வியாபாரங்களில் நான் குறை கண்டுபிடித்து நல்லபெயர் வாங்க நான் வரவில்லை...
ஆனால் தமிழகத்தில் கள்ளத்தனமான இரண்டாம் மார்க்கெட் அவர்களால் தான் உண்டாகிறது.
செஞ்சீனப்
பொருட்களின் முகத்துவாரம் இவர்கள் தான்.
தடைசெய்யப்பட்ட பல புகையிலைப்
பொருட்களின் குடோன்கள் இவர்களுக்கு உரியது.
அலைபேசிக்கு உபயோகிக்கும் பல பாகங்களின் போலிப் பொருட்கள் இவர்கள் மூலமாகத்தான் வருகிறது.
பிள்ளையார் சதுர்த்தியாக
இருந்த நாள்
விநாயகர் ஊர்வலமாக இவர்களும் சிறு காரணமே...
தனக்கென உள்ள தொழில்களில் தன் ஊர்க்காரர்களையே வைத்திருக்கும் இவர்களில் பலர் தொழிலாளர் ஆணையத்தில் முறைப்படி பதிவு செய்திருப்பார்களா என்பது ஆய்வுக்குரியது.
சின்ன சின்ன பெட்டிக்கடைகளில் ஆய்வினை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள் சேட்டுகடைகளை ஆய்வு செய்து அவர்கள் கணக்கை நோட்டமிட்ட செய்தி இதுவரை நான் கண்டதில்லை..
நூறு சேட்டுகளுக்கு ஓரிருவர் இங்கு சொந்த வீடு வைத்திருப்பார்கள்..
மற்றபடி அவர்கள் சொந்தபூமியில் தான் கொண்டு சேர்ப்பார்கள்..அது வழக்கமும் கூட...
அவர்கள் தொழிலில் காட்டும் அக்கறையிலும்,
பணவிசயங்களில் கறாரும் சரிதான்..
ஆனால் போலியான,
பணத்துக்கும்,
சமூகத்துக்கும் கேடான பல பொருட்களை விற்பதும் ஆதரிப்பதும் அழகல்ல..
தான் சார்ந்திருக்கும் ஊரின் அடிமடியில் கைவைப்பது ஆபத்தானதும் கூட...
நான் சேட்டுகளுக்கு எதிரியோ,அவர்களின் தொழில் மீது போட்டியோ பொறாமையோ கொண்டவன் அல்ல...
சில சேட்டுகளின் தயாள குணங்களையும்,அவர்கள் செய்யும் உதவிகளையும் மறுக்கமுடியாது..
ஆனால்
அறத்தின்பாலும்,
தெய்வ நம்பிக்கையும் அதிகமாகக்
கொண்டுள்ள அவர்கள் இந்திய நாட்டுப்பொருட்களின் மீது அக்கறையும்,
பொறுப்பும் கொள்ளவேண்டும்.
உள்ளூர் மக்களின் தலையில் போலிகளை கட்டுவதைத்தவிர்த்து உண்மையாய் இருக்கவேண்டும்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு வளமாய் இருந்தால் தான் ...அவர்களும் அள்ளிப்போக முடியும்..
வெள்ளையா இருக்கவன் பொய்சொல்ல மாட்டான்னு நாமிருக்க..
பொழுதெல்லாம் நம் செல்வம் கொள்ளைகொண்டு போவதை வேடிக்கை பார்த்தே நாள்கள் போகிறது.
நம் உழைப்பு அநியாயமாக எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறது சக்தி..
நாம் தான் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் படங்களுக்காய் காத்திருக்கிறோம்...
அன்புடன்.
செல்வக்குமார்.

பதிலளிநீக்கு///நம் உழைப்பு அநியாயமாக எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறது சக்தி..///
அது எங்கெல்லாமோ செல்லவில்லை அது பேஸ்புக்கில் முடங்கிகிடக்கிறது என்பதுதான் உண்மை
உண்மையை அப்படியே உரிச்சு போட்டு இருக்கிங்க ஆனால் இதை எல்லாம் அப்படியே படிச்சிட்டு ஆஹா அண்ணாச்சி அருமையாக எழுதி இருக்காக என சொல்லிவிட்டு மறந்து போய்விடுவோம்
பதிலளிநீக்கு//நம் உழைப்பு அநியாயமாக எங்கெல்லாமோ சென்று கொண்டிருக்கிறது சக்தி..
பதிலளிநீக்குநாம் தான் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் படங்களுக்காய் காத்திருக்கிறோம்...//
அதே தான். வீட்டில் அடுத்த வேளை உண்ண வழி இல்லையென்றாலும் வெள்ளி அன்று வெளியாகும் படத்திற்குச் செல்ல வேண்டும், நடிகனின் கட் அவுட்டுக்குப் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என இருப்பவர்கள் மாநிலம் நம்முடையது.... எவ்வளவு சினிமா மோகம்.....
நல்ல கவிதை. பாராட்டுகள்.
உண்மைதான் நண்பரே
பதிலளிநீக்குநம் உழைப்பு அநியாயமாக எங்கெங்கோ சென்று கொண்டுதான் இருக்கிறது
உண்மையை உரக்கச்சொல்லியமைக்கு நன்றி. நாமாகவே நம்மை அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது வேதனையே.
பதிலளிநீக்குஅருமையான விழிப்புணர்வு பதிவு நண்பரே!
பதிலளிநீக்குஆமா..அருமை ராசாத்தி சக்திக்கு இம்புட்டு கடுதாசி போட்டீங்களே.. மணியிடம் இருந்து ஒரு பதில் கூட வரவில்லையே...?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பதிவு