சனி, 5 நவம்பர், 2016

நமக்கான கவிதை...

பால்நிலா
கொதிக்கும்
அறிவாயா...




கடும்பகல்
குளிரும்
உணர்வாயா...

பூத்தபூக்களின்
புன்னகை
புரியுமே...

பேசிடும்
நிமிடங்கள்
பறக்குமே..
பேசா
நொடிகளோ
தடிக்குமே...

விடிந்தபின்னாலும்
விசயமிருக்குமே..

முடிந்த
பேச்சென்று
ஏதுமிருக்காதே...

முடிச்சுகள்
அவிழ்ந்த
பின்
இறுகுமே
இன்னுமென..

உள்ளங்கள்
மாறிய
ஓசைகள்
தெரியுமா..

உதடுகள்
காய்ந்ததே
ரகசியம்
புரியுமா....

தலையணை
திசைமாறும்.
பெயர்ச்சிகள்
புரியுமா..

போர்வைக்குள்
பூவாசம்
உள்ளிழுத்து விடுவாயா?

அலைபேசி
ஓசைவழி
உயிர் வழியும்
ருசிப்பாயா...

எவர்
பார்ப்பார்
என்றாலும்
அலைபேசி
சுவரொன்றே
அடைகாக்கும்
கண்களுக்கு
ஒளி வருமே..
கூசுவாயா.

யாரழைத்தும்
மணியடிக்கும்

நீ அழைத்தால்
அலையாடும்
நனைவாயா..

தட்டான்
பிடித்த கதை...

தங்கச்சி
பிறந்த கதை..

பட்டங்கள்
பறந்த கதை...

கணக்கின்றி
தொடர்ந்த கதை..

கவலை கொண்டு
தேய்ந்த கதை..

தவலைத்தண்ணீர்
சுமந்த கதை...

விடிந்திடுமோ?

பயத்தினிலே
பாதியிலே
முடிந்த கதை..

நாளெல்லாம்
நினைவூற்றி
நனைத்துவைத்த
ஓர்
கதையை
பத்திரமாய்
எடுத்துவைத்து
பந்தி
வைத்து
ரசிக்கும் கதை...

பட்டினியாய்
இருந்த கதை...

பக்கம்
பார்த்து
சொல்லும் கதை...

எல்லாமே
எனக்குண்டு...

உனக்குமென்றால்
சொல்லிவிடு..

நமக்கான
கவிதைகள்
எழுத
வேண்டும்..























5 கருத்துகள்:

  1. கவிதை எழுத
    கருப்பொருள் பல
    கவிதையிலே பகிர்ந்தீர்
    பாராட்டுகள்!

    உங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
  2. அருமை...
    நமக்கான விடியல் இனியும் இருக்குமா..?
    விழித்துக் கொண்டால் ஒருவேளை விடியலாம் அண்ணா...

    பதிலளிநீக்கு
  3. Arumai ayya!!! "Vidindhidumo"-yekka perumoochu. Avasiyam vidiyum ungaluku, Anaal vaasitha engal manadhu karpanaiyin iravukkul...

    பதிலளிநீக்கு