செவ்வாய், 17 ஜனவரி, 2017

கண்ணிலே...கலைவண்ணம் கண்டார்..



பிறந்து வளர்ந்ததெல்லாம்..இதோ இந்த சின்ன மாவட்டத்தில் தான்..

பல கழுதை வயசும் ஆயிடுச்சு..



அப்படியொன்றும் கால்களை கட்டிப்போட்டு வீட்டுக்குள் வைத்தும் வளரவில்லை..நடக்க ஆரம்பித்த முதல் ஊர்சுற்றிய மனிதன் தான்...

முப்பது கிலோமீட்டர் சுற்றளவுள்ள ஊர்களைப்பற்றிய அறிவோ அல்லது முழுமையான பெயரோ கூட தெரியாது..
மாநிலத்தின் பல ஊர்களுக்கு போயிருந்தாலும் பெரிய அளவில் சுற்றுலாக்கட்டுரை எழுதும் அளவுக்கு ஆராய்வதுமில்லை.

மூட்டை தூக்கிய அயலகப்பணியிலும் கிடைத்த அவகாசத்தில் தூங்கியும்..வாசித்தும் கடத்தியதுதான் அதிகம்.

ஜோர்டானின் அம்மான் மலைநகரை மின்னல் வேகத்தில் சுற்றிய போது எடுத்த படத்தையெல்லாம் இப்போது என்னால் பார்த்தும் புரிந்துகொள்ள முடியாத போது..அதை வெளியிட்டு உங்கள் பாவத்தை என்னால் சுமக்க முடியாது..

புதிதாய் பார்க்கும் ஒரு இடத்தை அல்லது பொருளை கண்களால் சிறைபிடித்து வைப்பதே என் வழக்கம்..
நல்ல கேமராவோடு இணைந்த அலைபேசி என்றாலும்..அதன்மூலம் அவற்றை புகைப்படம் எடுப்பதில் அப்படி ஒரு கூச்சம்...சரி..சரி...சோம்பேறித்தனம் தான்.

ஆனால் சிலர்..அந்த எல்லாவற்றையும் படங்களாய் எடுத்து பத்திரப்படுத்திவிடுவதோடு பரவசப்படவும் வைத்துவிடுவார்கள்..

வலைப்பூ உலகில் அப்படி நான் வியக்கும் இருவர் உண்டு..
ஒருவர் நம் இனிய நண்பர் திரு.தமிழ் இளங்கோ.
மற்றவர் திரு.வெங்கட் நாகராஜ்..

அதிர்ஷ்டவசமாக இருவரும் என் நண்பர்கள்.
முன்னவர் நாம் கண்ணால் காண்பவற்றை பதிவுகளில் காட்சிப்படுத்தி அசத்திவிடுவார்...
மற்றவர் நாம் காணா ஒரு உலகத்தையும் கண்ணுக்கு விருந்தளிப்பார்..
இந்த பதிவு திரு .வெங்கட் நாகராஜன் அவர்களுக்கு.

பணியின் நிமித்தம் இந்தியா முழுமையும் அலையும் அவர் மூன்றாம் கண்ணாக காமெராவையும் சுமந்து அலைகிறார்.
சினிமாக்களிலும்,வளவளப்பான காகிதங்களிலும் கண்டிருந்த படங்களின் தரத்தில் படங்கள் தருகிறார்..

உளி எனக்குக்கிடைத்தால் நான் அம்மி கொத்துவேன்..இவர் போன்ற சிலர்தான் சிலை வடிக்கிறார்கள்..

கேமரா என்பது ஒரு கருவிதான் ...சந்தேகமில்லை..
விலை உயர உயர படங்களின் துல்லியம் உயரத்தான் செய்யும்.
லென்ஸின் மூடியை கழட்டி ஒரு பொத்தானை யார் அழுத்தினாலும் படம் பிடிக்கத்தான் செய்யும்.

ஆனால் ஒரு அற்புதமான சிந்தனையாளனின்,படைப்பாளியின் கண்களில் காட்சியும்,கேமராவும் கிடைத்துவிடும் போது அது கலையாகிவிடுகிறது.

எல்லைப்புற மாநிலமாக இருந்தாலும்,நம் கோடைக்கானலாக இருந்தாலும்..
படங்களில் இயற்கையோடு மனிதமும் இருப்பதுதான் திரு வெங்கட் நாகராஜனின் சிறப்பு..
கோடைக்கானல் மலைச்சாலையை படம்பிடிக்கும் அவர் கேமரா..மாடொன்று சுமக்கமுடியாமல் பாரம் சுமக்கும் காட்சியை பதிவு செய்கிறது.
அதற்கு ஒரு கவிதை வேண்டுமென கோரிக்கையும் வைக்கிறது.
எல்லையில் ஒரு தமிழ்க்குடும்பத்தின் தனிமையை படத்தின் மூலம் பேசவைக்கிறார்..

சமையல் குறிப்புகளில் கூட அத்தனை துல்லியமாய் இருக்கும் படங்கள்.

காலையில் ஆபீஸ்..மாலையில் வீடென மறைந்து போகும் அரசு ஊழியர்கள் அதிகம் நிறைந்த நாட்டில்..
சமூகப் பொறுப்போடு..கலையார்வமும் கொண்ட வெங்கட் நாகராஜன்கள்
கொண்டாடப்பட வேண்டியவர்கள்..

இன்று காலையில் எனக்குக் கிடைத்த ஒரு மின்னூலில் இருந்த படங்களே என்னை இதனை எழுதத்தூண்டியது..

இந்திய சொர்க்கம் நைனிடால் பற்றிய புகைப்படக்காட்சி..
பனியும் பச்சையும் பரவிக்கிடந்த அந்த படங்கள் என்னை பரவசமூட்டின..
அனைத்துப் படங்களையும் பார்த்துமுடித்தபின் அதன் ஆசிரியர் பெயர் பார்க்கிறேன்..

வெங்கட் நாகராஜ்..

அந்த கோப்பை இந்த பதிவுடன் இணைக்கப் போராடுகிறேன்..முடியவில்லை...
ஒருவேளை பின்னூட்டத்தில் திரு.வெங்கட் நாகராஜ் சார் இணைப்பு தந்தால் மகிழ்ச்சி.









8 கருத்துகள்:

  1. உண்மை சகோ வெங்கட் அவர்களின் பதிவு...எப்போதும் இயற்கையும் அழகும்..

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான் நானும் அவர்களின் வலைக்குள் சென்றால் கண்ணுக்கு குளுமையான காட்சிகளுடன் பதிவுகளை படித்து வருவேன் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  3. உண்மை தான் நானும் அவர்களின் வலைக்குள் சென்றால் கண்ணுக்கு குளுமையான காட்சிகளுடன் பதிவுகளை படித்து வருவேன் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  4. நாம் காணா ஒரு உலகத்தையும் கண்ணுக்கு விருந்தளிக்கும் நம் இனிய நண்பருக்கு பாராட்டுகள்.... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. பதிவுலக ஒளிப்பதிவாளர்கள்!! இருவர் குறித்து பதிவு!! வெங்கட்ஜி அவர்களின் பதிவிலும், படங்களிலும் மயங்காதோர் யார் உளர்??!!!! மூன்றாவது கண்ணுடனேயே தானும் ரசித்து எல்லோருக்கும் விருந்து படைப்பவர்..நாம் அவருடன் பயணிப்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்குபவர்..

    .நண்பர் இளங்கோவும் நிகழ்வுகள் அனைத்தையும் அழகான படங்களாக நாம் நேரில் பார்ப்பது போன்று எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் திறன் படைத்தவர்.

    எங்கள் இனிய நண்பர் வெங்கட்ஜி பற்றி இங்கு சொன்னமைக்கு மிக்க நன்றி செல்வா...

    பதிலளிநீக்கு
  6. இருவரும் நானும் ரசிக்கும் பதிவர்கள் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. இருவருமே புகைப்பட வித்தகர்கள்தான்
    இருவருக்குமே மூன்றாவது கரமாய் புகைப்படக் கருவி
    சேர்ந்தே பயணிக்கிறது
    இவர்களின் பயணம் நமக்கு விருந்து
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  8. ஆஹா என் முதலாம் மின் புத்தகம் பற்றி இங்கே எழுதி என்னை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு மனம் நிறைந்த நன்றி. புத்தகம் இங்கே தரவிறக்கம் செய்யலாம்....

    http://freetamilebooks.com/ebooks/lake-city-nainital/

    பதிலளிநீக்கு