திங்கள், 23 ஜனவரி, 2017

ஒரு பின்னூட்டம்..ஆல்ப்ஸ் தென்றல் நிஷாவுக்கு..

மிகச்சரி நிஷா அவர்களே..



போராட்ட காலம் முழுவதும் உங்கள் பதிவுகளையும் பரிவையும் நான் தொடர்ந்து கவனித்துதான் வருகிறேன்..
உங்களுடன் பலவேளைகளில் முரண்படுவதாய் ஒப்புக்கு சொன்னாலும் உங்கள் ஒவ்வொரு எழுத்தின் உண்மை நான் அறிவேன்..

போராட்டம் சதவீதங்களில் வெற்றி என்பதெல்லாம் இல்லை..
வெற்றியில் என்ன சதவீதக்கணக்கு?

வெறும் உத்சாகக்குரலும்,வேடிக்கைக்காக வந்துபோன பலரும் இந்த நாட்களில் இருந்தாலும்...
முதற்கண் ஒன்றுகூடல் என்னும் அற்புதமே முதல் வெற்றி...

நேரம் போகவேணும் பாரம்பரிய கலைகளை நடத்தியது..

பெண்பிள்ளைகளை நடத்திக்காட்டிய விதம்...

பெண்பிள்ளைகளை பேசவைத்தது..

உலகத்தை உற்றுப்பார்க்க வைத்து அமெரிக்காவின் பீட்டா தலைமை அலுவலக வாசலிலேயே போராட வைத்தது..

அரசியல்வாதிகளின் மேல் உள்ள அவநம்பிக்கையை வெளிக்காட்டியது..

இயற்கையின் எல்லா இடர்களையும் தாங்கி நின்ற நாட்கள்..

உண்மையில் உதவக்கூடிய சில நல்ல மனிதர்களை கண்டுகொண்டது...

புல்லுருவிகள் என்ன செய்வார்கள் என தெரிந்து கொண்டது..

ஊடகங்கள் திடீரென எப்படி மாறும் என்ற அறிவு பெற்றது..

கடைசியாய்..
அரசாங்க கோழிமுட்டைகள் எப்படி அம்மியை உடைக்கும் என்ற அதிசயம் விளங்கியது..

இன்னும் இருக்கிறது நிஷா அவர்களே..இவர்களின் வெற்றி...
இன்று பெற்ற அடிகள் கூட...அவர்களின் பின்னைய வரலாற்று வெற்றிகளுக்குத்தேவை தான் என்பேன்..

அரைநூற்றாண்டை கடந்த அதிகார..பதவி சுகங்களை அனுபவித்தவர்கள் எளிதாய் தாம்பாளத்தில் வைத்து தந்துவிட  மாட்டார்கள் வெற்றியை என்னும் உண்மையே இந்த அடிகள்...

எங்கள் பிள்ளைகள் இப்போதுதான் காதலிகள் இல்லாமல் கடற்கரைக்குப் போராடவும்..
எங்கள் பெண் பிள்ளைகள் ஆயிரமாயிரம் அண்ணன்களோடும் தம்பிகளோடும் மிக சுதந்திரமாக பேசவும்..
இந்த சமூகத்தை எதை நோக்கித்திருப்பவேண்டும் என்ற அறிவும் பெற்றிருக்கிறார்கள்..

ஒரு தேர்ந்தெடுத்த இயக்குனரின் திரைக்கதை போல் நல்லவனாய் இருப்பவன் வில்லனாக மாறுவதை நேரில் பார்க்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது..

பேச ஆரம்பித்த சின்ன பிள்ளைகூட இருந்து படித்திருக்கிறான் இந்த பாடத்தை...
இனி அவன் மிகத்தெளிவாக முடிவெடுப்பான்..

ஒன்று தெரியுமா நிஷா..
ஒரு மாநிலத்தின் முதல்வர் அவராகவே அறிவித்து நிகழ்த்த முடியாத அளவுக்கு அவன் வெற்றி என்னும் இமயத்தை தொட்டிருக்கிறான்..
ஒரு போராட்டம் என்பது முழுக்க எதிகளை வெல்வது மட்டுமல்ல..துரோகிகளை அடையாளம் காண்பதும் தான்.
பத்தாண்டுகளுக்கும் மேலும் போராடி கிடைக்காத வெற்றி ஒருவாரத்தில் கிடைத்தது  ஒருபுறம் என்றால்...இதோ இன்று கிடைத்த நிரந்தர வெற்றிக்கான ஓரிரு நாட்கள் கூட பொறுக்காமல் அவசரமாய் கூடி அறிவிக்கும் நன்றி கெட்ட தனமான துரோகத்தை அறிய முடிந்தது...
ஆனாலும் நான் அவர்களை துரோகிகள் என சொல்ல முடியவில்லை..

அந்தரங்களில் அவர்களும் அழுதிருக்கக்கூடிய நல்லவர்களாகவே நினைக்கிறேன்..
என்ன பாடு படுத்தினார்களோ...
அல்லது பட்டார்களோ?

ஆகவே... நிஷா அவர்களே
என் பிள்ளைகள் மிக பிரமாண்டமான வெற்றி பெற்றிருக்கிறார்கள்..
அவர்களை உச்சிமுகர்ந்து பாராட்டலாம்..

13 கருத்துகள்:

  1. மேலும் தெளிவு பெறுவதற்கு, ஏற்றுக் கொண்ட வலி(யும்) அதிகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபாலன் சார் ஐந்து நாள் போராட்டத்திற்கே இப்படி பதிவிட்டால் ஐம்பது வருடம் போராடி அனைத்தும் இழந்து நாட்டை விட்டே துரத்தப்பட்டு அனாதைகளாக திரியும் ஈழத்து மகக்ளை குறித்து நினைத்து பாருங்கள்??????? தனக்கு வந்தால் தான் காய்ச்சலும் தலையிடியும் தெரியும் என்பது எத்துணை நிஜம்.

      நீக்கு
  2. வெற்றி மிகப் பெரிய வலியுடன்....பாடத்துடன்....

    பதிலளிநீக்கு
  3. 1.ஆல்ப்ஸ்தென்றல் நிஷா என்பவர் யார்?
    2.அவருக்கு எதற்காக இப்படி நீண்ட பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள்?
    3.அவர் இந்த போராட்டத்தை திட்டி தீர்த்தாரோ?
    4.ஆதியோடு சேர்த்து துரோகியானரோ?
    5. அவர் வீட்டிற்கு முன் போராட்டக்குழுவை அனுப்ப ஏற்பாடு செய்கின்கீன்றீர்களோ?

    ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வில்லை எனில் ஆறாவது கேள்வி கேட்கப்படுவதோடு .......... உங்கள் பட்டியலில் சேர்க்கப்படாமல் விடுபட்ட இன்னொரு நல்லதும் பகிரப்படும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிக் கேளுங்க...! (அடுத்த பதிவில் பதில் சொல்லட்டும்...)

      நீக்கு
  4. உலகம் போற்றும் வெற்றிதான்...
    எந்தப் போராட்டமும் வலி இல்லாமல் முடிந்ததில்லை...
    வேதனைகள் நம்மை வேதனிக்க வைத்தாலும் ஜெயிச்சது தமிழன்டா என்ற பெருமிதம் நமக்குள்...
    நம் மக்களின் மகத்தான போராட்டம் இது....
    நிஷா அக்கா விட்டு விளாசிட்டாங்க....
    அவருக்கு இருக்கும் வேலையிலும் எத்தனை பதிவுகள்...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. குட்டக் குட்ட குனிந்தே கிடந்த தலை
    தமிழினத் தலை இன்று நிமிர்ந்திருக்கிறது
    நெஞ்சம் நிமிர்த்தி எழுந்திருக்கிறது
    உலகிற்கோ ஒரு முன்னுதாரணமாய்
    நம் மாணவர்கள்
    பெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
  6. வலி இல்லாமல் பிள்ளை பெற்ற பெண்மணி எவரும் உண்டோ? சில பேருக்கு பிள்ளை பெறும் போதும் சில பேருக்கு 10 மாதங்களும் சில பேர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் ( சமுகத்தால் கொடுக்கப்படும் வலி) சுமந்து வலியோடு பிள்ளை பெறுகிறார்கள் அது போலத்தான் போராட்டங்கள். போராட்டங்கள் வலிமையான சக்தியை எதிர்த்து போராடப்படும் போது சில எட்டப்பங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு பாதிக்கபட்டாலும் தொடர்ந்து போராடுவதல் மட்டுமே வெற்றியை பெற முடியும் அப்படி வெற்றி பெற்றவர்களை தோற்றவர்கள் வெறிப்பினால் அசிங்கம் செய்யதான் செய்வார்கள் அதை துடைத்து எறிந்துவிட்டு வெற்றியை கொண்டாடி மகிழ்ந்துவிட்டு வருங்கலா போராட்டத்திற்கு தன்னை இன்னும் அதிகம் தயார்படுத்தி கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  7. பதிவு போட்டா அதற்கு கருத்து சொல்லுறேன் என்று பதில் பதிவு போடும் நிஷாவிற்கு போட்டியாக இங்கே யாருப்ப்பா பின்னுட்டம் பெயரில் பதிவு போட்டது ஹும்ம் நிஷாவை பற்றி தெரியாமல் இப்படி செய்ய்துவீட்டீர்களோ? எனக்கு பயமாக இருக்கிறது நிஷா பதிலுக்கு பதிவு போடுவாங்களா இல்லை பொன்னியன் செல்வன் மாதரி மிகப் பெரிய படைப்போட வருவார்களா? மீ பாவம் நான் எஸ்கேப்

    பதிலளிநீக்கு
  8. ஏற்கனவே போட்ட பொன்னியின் செல்வனுக்கு தான் இந்த கடல்புறா சைஸ் பின்னூட்டமாம், இதில் இன்னொரு சிவகாமியின் சபதம் பின்னூட்டம் போடட்டுமோ
    துரைசாமீஈஈஈ

    பதிலளிநீக்கு