புதன், 4 ஜனவரி, 2017

வீடியோ ஆதாரம்

பொதுவாய் நான் மேடைக்கவியரங்கங்களில் கலந்துகொள்வதில்லை..




நான் எழுதுவேன் என்பதும்...வாசிப்பேன் என்பதும் கடந்த சில நாள்களாகத்தான் பலருக்கு தெரிய ஆரம்பித்தது..

முத்துநிலவன் அய்யா போன்றோரின் தீவிர பராமரிப்பில் கொஞ்சம் வீதிக்கூட்டங்களில் வாசிக்க ஆரம்பித்தேன்...


கவிதைகளுக்கென நான் வார்த்தைகள் தேடி ஓடுவதில்லை..

சின்ன சின்ன மிக எளிதான வார்த்தைகளையே உபயோகிக்கிறேன்.


மிக நீண்ட தத்துவ விசாரக்கவிதைகளுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்...

மரபா...புதுக்கவிதையா,

ஹைக்கூவா..எதுவுமில்லாமல் வார்த்தைகளை கைகால் ஒடித்து எழுதுகிறேனா என எனக்கும் புரியவில்லை தான்...


என்ன ஆனாலும் எடுத்துக்கொண்ட கருவை கலைத்துவிடும் அளவுக்கு வார்த்தை ஆயுதங்கள் எடுப்பதில்லை..

அந்த வரிகள் ஆணோ பெண்ணோ.. சுகப்பிரவசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவாய் இருப்பேன்.


கடந்த மாதத்தின் ஒருநாள் யோசி மீடியாவின் நண்பர் கவி.முருகபாரதி ஒரு கவியரங்கில் வாசிக்கமுடியுமா என்றார்.

பாரதி குறித்த தலைப்பென்பதால் நானும் ஒத்துகொண்டேன்..

10+1 இல் எட்டாவதாய் தையலை உயர்வு செய்யச்சொன்னார்கள்.. ஒரு வழியாய் வாசித்து முடித்துவிட்டேன்.


இன்று நண்பர் அதன் காணொளிப்பதிவை எனக்கு கொடுத்தார்..


முகத்தைத் தூக்காமல்..

ஒரு நர்சரிச்சிறுவனின் மனப்பாடப்பாட்டென வாசித்த கொடுமையை உங்களோடு பகிர்வதன் மூலம் என்னுடைய யூடியூப் கணக்கை ஆரம்பிக்கிறேன்...



நிறைய திட்டினாலும் குட்டினாலும் அதனை உங்கள் அன்பாய் எடுத்து இன்னும் மிளிர்வேன் என்ற நம்பிக்கையில்...

17 கருத்துகள்:

  1. நண்பரே அருமையாக வாசித்து உள்ளீர்கள்...!

    பதிலளிநீக்கு
  2. அடுத்த படிநிலைக்குச் சென்றமைக்கு வாழ்த்துகள்.தொடரட்டுடம் எழுத்தும, வாசிப்பும், பதிவும்.

    பதிலளிநீக்கு
  3. அருமை... அருமை...

    கணக்கு பல இருக்கு வாத்தியாரே...! நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அட! பாராட்டுகள் சார்.
    பொதுவாக கவிதை படிக்கும் போது மேடை நோக்கிப்பார்த்தபடி படித்தால் இன்னும் நன்றாக இருக்கும், அதற்காக எழுதப்பட்ட கவிதையை முன்னரே நன்கு படித்து ஓரளவு மனனம் செய்து வைத்து விடுவது எப்போதும் குனிந்து வாசிக்கும் நிலையை தவிர்க்கும்.

    அதென்ன சார்? தலைப்பில் ஆதாரம் என்வெல்லாம் போட்டிருக்கின்றீர்கள்? இதென்ன அப்பல்ல்ல்ல்ல்ல்ல்லோ ரகசியமோ? ஆதாரம் தேடவும், கேட்கவும், சும்மா சொன்னாலே நம்பி விடுவோம்ல.

    பதிலளிநீக்கு
  5. அருமை
    அருமை
    ரசித்தேன் நண்பரே
    தங்களின் பூட்யூப் கணக்கைத் தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. அருமை செல்வா...
    கலக்குங்க எங்கள் கைத்தட்டலுடன் ...
    என்றும் நட்புடன் ..
    ராதா கிருஷ்ணன்

    பதிலளிநீக்கு
  7. அருமை அண்ணா....
    சபையை நோக்கி வாசித்திருக்கலாமே...
    வெட்கம் துறங்கள்...

    அருமை... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. ரசித்தேன் நண்பரே...
    என்றும் நட்புடன் ..
    https://www.scientificjudgment.com/

    பதிலளிநீக்கு