இப்படி ஒரு தலைப்பிட ரொம்ப யோசனையாதான் இருந்துச்சு..
ஆனா சில தலைப்புகள் பதிவினை பார்க்கவைத்துவிடும் என்ற பேராசையும்..இதனை நண்பர் யாவரையும் வாசித்துவிடச்செய்யவேண்டும் என்ற ஆவலாதியும் தான்.
திருமணம் ஆன புதிதில் வீட்டம்மா ஐந்து அல்லது ஆறு புத்தகங்கள் வெளியிட்டிருந்தார்...
இத்தனை வருடங்களில் அவரின் புத்தகங்கள் 26 ஐ தாண்டி விட்டது..
அவர் மற்றும் என் நலம் விரும்பும் நண்பர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் நீ எப்போது புத்தகம் போடுவாய் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்..
எனக்கென்னவோ அப்படி ஒரு யோசனை இல்லாமலே இருந்தது..
பலவருடங்களுக்குப்பின் முகநூலில் சின்னவள் குறித்த கவிதைகளை(?)எழுத ஆரம்பித்தேன்..
மெல்ல மெல்ல வலைப்பூ வந்ததும் பல தலைப்புகளை எழுத ஆரம்பித்ததும் அப்படித்தான்.
நிற்க...
சமீபத்தில் முகநூலில் ஒரு செய்தி கண்ணுற்றேன்..
நெய்வேலியின் நண்பர் மனோபாரதி மிகக்குறைந்த செலவில் குறைந்த அளவேனும் புத்தகங்கள் அச்சிடலாம் என்றார்...
பணிச்சுமையும் ,பணச்சுமையும் கலந்து சுமக்கும் நாட்களில் நான் குடும்பத்தின் அருகாமையை இழந்து திரியும் நாள்கள்..
சின்னவள் தேர்வெழுதும் நேரம்...
மற்றும் பெரியவள் தொடர் காய்ச்சலில் இருக்கும் போதும் இதயம் செத்து புண்ணான வேளைகள்...
இன்று சின்னவளின் பிறந்த நாள்...
வாழ்வின் ஆதார சுருதியாய் ஆக்கிரமித்த அன்பின் பிடிவாதக்காரி...
அவளுக்கென எழுதியிருந்த சில கவிதைகளை அச்சிட்டு அவளின் பிறந்தநாள் பரிசாக அளிக்கலாம் என்ற திட்டமிடலில் நூல் வந்துவிட்டது...
நூலுக்கான எல்லாப் பணிகளையும்
பெண்ணியம் செல்வக்குமாரி செய்திருக்கிறார்..
என் எழுத்தை சீராட்டி அழகுபார்த்திருக்கிறார்
நண்பர் மனோ பாரதி..
பிரிக்கப்படாத ஒரு பார்சலை நான் அவள் கண்களில் தெரியும்படியே வைத்திருந்தேன்..
ஆவலில் அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள்....
ஏதோ பரிசென அவள் எதிர்பார்த்திருக்க...
அவளை வைத்தே புத்தகக்கட்டை பிரித்து
கண்கள் மின்ன அந்த பரவசத்தோட அவளையே வெளியிடச்செய்தேன்..
அவள் அம்மா முன்னிலையில் அவள் அக்கா முதல் பிரதியை பெற்றுக்கொண்டாள்..
ஒரு கவிதா உள்ளத்துக்காரனாய்...
அப்பனாய் இந்த வேளை எனக்கு ஆசிவதிக்கப்பட்டது..
மிகச்சமீபமாய் நூல்கள் வெளியீட்டு விழாக்கள் என் ஆவலைத்தூண்டியிருந்தாலும்..
என் சூழ்நிலை இந்த புத்தகத்தை இப்படித்தான் வெளியிட வைத்திருக்கிறது..
அரங்கம் சூழ உலகறிந்த ஒருவர் வெளியிட...விமர்சிக்க ,வாழ்த்த...ஏற்க என எல்லா சம்பிரதாயங்களும் நிறைந்த ஒரு விழாவின் மகிழ்ச்சியில் எள்ளளவும் குறையில்லை எனக்கு..
என் மிக நெருங்கிய தோழமைகளுக்கும் நான் இப்படி ஒரு சங்கதி செய்யப்போவது தெரியாது தான்..
அவர்கள் என்னை மன்னிப்பார்கள் அல்லது முறைத்தும் திட்டியும் என்னை தழுவிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது...
பார்க்கலாம் அச்சுக்கும் என் எழுத்துகளுக்குமான யோகம் எப்படி இருக்கிறதென...
என்னவோ பெரிய சாதனை புரிந்து நானும் நூலாசிரியர்களின் வரிசையில் சேர்ந்திருப்பதாய் நினைக்கவில்லை..
நீங்கள் இவற்றை முன்பே வாசித்தது தான்.
ஆனாலும் சின்னவளுக்காகவும்,எனக்காகவும் மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டுவதோடு..
சின்னவளுக்கு
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளையும் வேண்டுகிறேன்.
நன்றி..
கொசுறு செய்தி ஒன்றுண்டு..
மேற்படி நூல் மின்னூலாக 15.03.2017 நேற்றே வெளிவந்தும் விட்டது...பாருங்க...
http://www.pustaka.co.in/home/ebook/tamil/chinnaval

தந்தையாக தாங்கள் தற்போது பெரிய சாதனை புரிந்துள்ளீர்கள்.தங்களின் முதல் நூலுக்கு எனது பாராட்டுகள் அப்பா.
பதிலளிநீக்குஎனது அன்பு தங்கை சூரியாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
Congratulations
பதிலளிநீக்குBest wishes to your daughter
Valthukal
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களுக்கும், சின்ன மருமகளுக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குபெரிய மருமகள் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள்.
இரட்டை சந்தோசம்...! வாழ்த்துகள் பல...
பதிலளிநீக்குVidhyasamana parisu. Ungal kudumbam mattum alla; idhu varai yarum yosikkadha ...yen karpanai kooda seidhu parkadha azhagana parisu. Adhai vida puthaga veliyeetu vizha nadandheriya vaidham arumai Ayya. Ungal pillaigal koduthu vaithavargal dhan. Neengal solliyadhu pol panathal kashtam irundhalum nalla appavaga manaththal perum panakkarar dhan. Engal vazhthukkalum vanakangalum. Vazhga valamudan!!!
பதிலளிநீக்குஆஹா ! அருமை வாழ்த்துக்கள் உங்களுக்கும் பிறந்தநாள் கொண்டாடும் மகளுக்கும்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குஉங்கள் புத்தக வெளியீடு பற்றி அறிந்திருந்தும்..இப்படி ஒரு வெளியீடு என நினைக்கவில்லை.ஆகச்சிறந்த ஒரு பரிசை அழகி அவள் பெற்றிருக்கிறாள்.நம் சின்னவளுக்கு வாழ்த்துக்களும்...அன்பும்.

பதிலளிநீக்குபெருமையான கணங்கள். வாழ்த்துகள். உங்கள் மகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் - வேறென்ன சொல்ல?
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குமேலும், பல நூல்களை வெளியிட முன்வாருங்கள்.
சின்னவளுக்கான தருணங்கள்! பெருமை மிகு தருணங்கள் ஒரு தந்தைக்கு! வாழ்த்துகள்! இருவருக்குமே! சின்னவள் பிறந்தாள்! ஆம் இப்போது எழுத்து வடிவில்!! சின்னவளுக்கும் எங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஅழகான் தருணங்கள்....
பதிலளிநீக்குஅழகான தேவதைக்கு அருமையான பரிசு...வாழ்த்துக்கள்..
மீண்டும் ஒரு வாழ்த்து தேவதைக்கும்...தேவதை உருவாக்கிய கவிஞர்க்கும்...
மேலும், பல வேட்றிகலை பெற வாழ்துக்கள்
பதிலளிநீக்குMOHAMED