ஞாயிறு, 18 ஜூன், 2017

அப்பா...

அப்பனுக்கொரு
கருப்பை இருந்தது..


கனவுகள்
காலமும்
சுமந்திருந்தது.

ஆறு பிள்ளைகள்
பிடித்து நடக்க
ஆறாம் விரல்
வேண்டியவன்..
நல்ல உணவுகள்
அவன் கனவாய்
இருந்தது...

வாடகையில்லா
ஒரு வீடு.
வாசலில் ஒரு கார்..

வருடமொருமுறை
வேளாங்கண்ணி..

வாங்கும்
லாட்டரிகளில்
வரிசையாய்
பரிசுகள்...

பிள்ளைகளின்
பிள்ளைகளுக்கு
தவம் கிடந்தது
மடி...

ஊருக்கெல்லாம்
துணி அளந்து
ஒற்றை வேட்டியில்
ஒளித்துக்கொண்டவன்
பண்டிகைகளை..

வாசலின்
பிள்ளைக்கதைகளில்
எல்லாம்
ஒரு
விமானம்
பறந்துகொண்டே
இருந்தது..

அவன்
உருட்டித்தந்த
சோற்றுருண்டைகள்
பிளாஸ்டிக்
இல்லாமல்
குதித்தது..

அவர்
வாங்கிவந்த
ஒற்றை
மாம்பழத்திற்கு
எல்லாரும்
அவரைச்சுற்றினோம்..

அப்பாவின்
கனவுகள்
பூத்துக்கிடக்கிறது
நந்தவனமென.

புகைப்
படத்திலிருந்தாலும்
புன்னகைக்கிறார்
அப்பா..











8 கருத்துகள்:

  1. பிள்ளைகளின்
    பிள்ளைகளுக்கு
    தவம் கிடந்தது
    மடி...

    ஆகா. ஆகா அருமை

    பதிலளிநீக்கு
  2. அருமை இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா.

    பதிலளிநீக்கு
  3. அருமை.... இன்றைய தினத்திற்கு பொருத்தமான ஒரு கவிதை.

    பதிலளிநீக்கு
  4. அப்பாவின் நினைவுகள் அப்படியே எதிரில் தோழர்

    பதிலளிநீக்கு
  5. புன்னகையுடன் நினைவில் வாழும் அப்பா!

    பதிலளிநீக்கு
  6. ஊருக்கெல்லாம்
    துணி அளந்து
    ஒற்றை வேட்டியில்
    ஒளித்துக்கொண்டவன்
    பண்டிகைகளை..
    // அருமை!!! தாமதத்திற்கு மன்னிக்கவும்! தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு