அழகே..அழகே
அத்தனை அழகே...
சித்தனை
பித்தனாய்
ஆக்கிவிட்டு
எத்தனை
சிரிப்படி
உன் அழகு...
***
கற்பனை கற்பனை என்றிருந்தேன்...
விற்பனை ஆனது
என் இதயம்...
***
கல்லெனென
கல்லென
நானிருந்தேன்...
சிற்பமாய் வந்து
உறைந்து விட்டாய்...
***
ஒரு
அஞ்சறைப்
பெட்டிக்குள்
அடைந்திருந்தேன்..
நெஞ்சறைக்குள்ளே
சிறை வைத்தாய்
***
கண்களை மூடி
நான் கிடந்தேன்..
கனவுகளாய் வந்து நிறைந்துவிட்டாய்
***
புண்களின்
நாற்றத்தில்
விழுந்திருந்தேன்...
புனுகென ஏனடி
பூசி நின்றாய்..
***
இரவுக்குள்
நான் மட்டும்
மாட்டிக்கிடந்தேன்...
உறவென நீயடி காட்டிக்கொடுத்தாய்...
***
நிலவெனில்
வெளிச்சமே
இத்தனை நாட்களில்...
நீயென்றறிகிறேன்
உன் வெளிச்சத்தில்
குளிக்கிறேன்.
***
நீயள்ளி நிதம் தர
முத்தங்கள்
புசித்தேன்...
கள்ளி...
உனக்கே
என் கவிதைகள்
சமைத்தேன்...
***
புல்லின் மீதொரு
பனித்துளி நானடி...
பூக்களின்
இதழ்களில்
புதுநிறம் நானடி...
***
சொல்லின்
ஒவ்வொரு
புள்ளியும் நீயடி...
என்
சொல்லாக்
கவிதைக்கும்
நாயகி நீயடி...
அத்தனை அழகே...
சித்தனை
பித்தனாய்
ஆக்கிவிட்டு
எத்தனை
சிரிப்படி
உன் அழகு...
***
கற்பனை கற்பனை என்றிருந்தேன்...
விற்பனை ஆனது
என் இதயம்...
***
கல்லெனென
கல்லென
நானிருந்தேன்...
சிற்பமாய் வந்து
உறைந்து விட்டாய்...
***
ஒரு
அஞ்சறைப்
பெட்டிக்குள்
அடைந்திருந்தேன்..
நெஞ்சறைக்குள்ளே
சிறை வைத்தாய்
***
கண்களை மூடி
நான் கிடந்தேன்..
கனவுகளாய் வந்து நிறைந்துவிட்டாய்
***
புண்களின்
நாற்றத்தில்
விழுந்திருந்தேன்...
புனுகென ஏனடி
பூசி நின்றாய்..
***
இரவுக்குள்
நான் மட்டும்
மாட்டிக்கிடந்தேன்...
உறவென நீயடி காட்டிக்கொடுத்தாய்...
***
நிலவெனில்
வெளிச்சமே
இத்தனை நாட்களில்...
நீயென்றறிகிறேன்
உன் வெளிச்சத்தில்
குளிக்கிறேன்.
***
நீயள்ளி நிதம் தர
முத்தங்கள்
புசித்தேன்...
கள்ளி...
உனக்கே
என் கவிதைகள்
சமைத்தேன்...
***
புல்லின் மீதொரு
பனித்துளி நானடி...
பூக்களின்
இதழ்களில்
புதுநிறம் நானடி...
***
சொல்லின்
ஒவ்வொரு
புள்ளியும் நீயடி...
என்
சொல்லாக்
கவிதைக்கும்
நாயகி நீயடி...
அருமை
பதிலளிநீக்குஓகோ... செல்லம்மாவோ கண்ணம்மாவோ கவிதை நல்லாருக்கு வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஆகா....
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅடடா! அடடா!! ஒவ்வொரு பத்தியும் தனித்தனிக் கவிதையா அல்லது ஒரே கவிதையா என்ற போட்டியில் காதல் ரசத்தைக் கொட்டுகிறது.கொடுத்து வைத்தவர் தான்( கற்பனையென்றாலும்..)அந்தச் சொல்லாக் கவிதைக்கும் நாயகி....அருமை அருமை.
பதிலளிநீக்குஆஹா...அனைத்தும் சிறப்பு..
பதிலளிநீக்கு