திங்கள், 30 அக்டோபர், 2017

பெண்ணே..பெண்ணே..


யாரும் ஊரென்றோம்..
எல்லாரும்
நம் ஊர் வந்தார்..
யாவரும்
கேளிர்
என்றோம்.
அனுதினமும்
போராட்டம்..

தாலி இழந்த
பெண்கள்..
காலியாய்ப்
போன வீடு..
வெகுண்டெழுந்து
போராட்டம்..
தண்ணீர் வேண்டியல்ல..
கண்ணீர்
போதுமென..

பூமிப்
பந்து
பொதுவில்
தான்
சுற்றுகிறது..
அதிகார
விலங்குகள்
தான்..
அடிமை
செய்கிறது..

வானத்து
ஓர் துளியும்
வர்க்கங்கள்
பார்ப்பதில்லை..
நீளப்படுக்கும்
மண்
நீ வேண்டாம்
என்றதில்லை..

காற்றெப்போதும்
கவனமின்றியும்
சில
நாசிகள்
வெறுப்பதில்லை..

பெருவன
விலங்கு
யாவும்
அடையாள
அட்டைகள்
அணிவதில்லை..

அடித்துக்கொல்லும்
இனமானாலும்
ஆணவக்கொலைகள்
இல்லை..

வீணுக்கு
மனிதன் தான்
வீணானான்
வேலையின்றி..

வீதிக்கொரு
கல்லூரி
வீட்டுக்கொரு
பொறியாளன்..

நாட்டுக்குள்
மாற்றமில்லை
அரசியலின்
நாற்றமின்னும்
குறையவில்லை..

பிணிபோல
அணிகளிங்கு...
பிரேக்கிங்
செய்திகளால்
பீதியுற்றாய்..
இதுவா நன்று...

கடுங்கிழவி..
கன்னிப்பெண்..
கால் முளைத்த
சின்னப்பெண்..
எல்லாம்
முடித்துவிட்டு
கருவிலும்
தேடுவானோ
கவனமாய்
பெண்ணுருப்பு...
நெருப்பாற்றில்
நீந்தும்
வாழ்க்கை
கேளிரெல்லாம்
கேலி வார்த்தை...

அக்கினிக்
குஞ்சுகள்
தான்..
அமிழ்த்துமொரு
துயரச் சேற்றில்
நமத்துப்
போயிருப்பாய்..
ஊருக்குள்
சாக்கடைகள்
சரிதான் என்றால்..
ஊரே
சாக்கடையாய்...
எத்தனை நாள் மூச்சடைக்க?

அடுப்படிக்குள்
மீட்சியில்லை...
தெருவில்
ஒரு நீதியில்லை
சமமெல்லாம்
வார்த்தையில் தான்..
அமிலங்கள்
தீண்டிய ஓர்
ஆணிங்கு
யாருமில்லை..

வாசல் கோலங்கள்
வண்ணத்தில்
போட்டுவிட்டு
வகையாய்
மாட்டிக்கொண்டாய்..
பூசணிப்பூவும்
புன்னகைக்கும்..

தொல்காப்பியம்
முதலாய்...
தொன்றுதொட்ட
வரலாறு...

விளக்கமாறு
இன்னும்
உங்களிடமேயிருக்க
விளக்கமென்ன
வேறு வேண்டும்
கேளீர் வாழ்க!!!

8 கருத்துகள்:

  1. நிலை மாறினால் குணம் மாறுவான்...
    பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்...
    தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்...
    அது வேதன் விதி என்றோதுவான்...
    மனிதன் மாறிவிட்டான்...
    மதத்தில் ஏறிவிட்டான்...

    வந்த நாள் முதல் இந்த நாள் வரை...
    வானம் மாறவில்லை...
    வான் மதியும் மீனும் கடல் காற்றும்..
    மலரும் மண்ணும் கொடியும் சோலையும்...
    நதியும் மாறவில்லை...
    மனிதன் மாறிவிட்டான்...

    பதிலளிநீக்கு

  2. செல்வா எழுதிய கவிதையை படித்து முடித்தது பாதி புரிந்து புரியாமலும் இருந்த நிலையில் தனபாலன் எழுதிய கருத்தை படித்தேன் ஆஹா தனபாலன் அழகான மிக எளிதாக புரியும் படி ஒரு கவிதை எழுதி இருக்கிறாரே என்று நினைத்து படித்த போது மனிதன் மாறி விட்டான் என்ற வரியை படித்த போதுதான் ஆஹா இந்த வரியை எங்கோ கேட்டு இருக்கிறோமோ என்ரு யோசித்த போதுதான் இது பழைய பாடல் எனப்து புரிந்து போனது... ஹீஹீ எப்படியெல்லாம் மதுரைத்தமிழன் அல்வா வாங்குறான்

    பதிலளிநீக்கு
  3. இன்றைய அவலநிலையை அழகாய் கண்டேன் கூனிக்குறுகி...

    பதிலளிநீக்கு
  4. அடித்துக்கொல்லும்
    இனமானாலும்
    ஆணவக்கொலைகள்
    இல்லை..

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
  5. இன்றைய அவல நிலை சொல்லும் நற்கவிதை.

    பதிலளிநீக்கு