வியாழன், 28 டிசம்பர், 2017

பல்லுதிர் காலம்...


மதுரைக்கு
தாண்டி கட்டிக்கொடுத்த
அத்தை...

முழுப்பரிட்சை லீவுக்கு
அவர்கள் வராத
ஒரு வருடத்தில்,
வண்டியேறிவிட்டோம்
நானும் அப்பத்தாவும்..

திருமயம்தாண்டி
திருப்பத்தூரிலயே
வாந்தியும்
மயக்கமும்..

காலை
எட்டுமணிக்கு
காரேறி
விளக்கு வைக்கயில
போனதும்
ஊதக்காத்துல
உறங்கியாச்சு...

நாங்க
போன
முதல் நாள்..
அய்யப்பனா
முருகனான்னு
தெரியல..
மாமா
மாலை போட்டுருந்தார்..

காலைல
இட்லி...
மத்தியானம்
சாம்பார்ன்னு
மாசம் முடிஞ்சு
திரும்பும் வரை
முட்டை முகம் கூட
இல்லை...

வண்டியேற்றிவிட
வந்த
அத்தை..
வாய்க்குவாய்
சொல்லிட்டே
இருந்துச்சு...
"வந்தவனுக்கு
ஒரு
கறியாக்கிப்
போடலியே."
*
போனவருடம்
மாமா
ரிட்டயர்மெண்ட்
விழாவில்
பரிமாறின
அத்தை
வெள்ளாட்டுக்கறிதான் டா
சாப்பிடுன்னுச்சு...

எப்படி
சொல்றது
கடைவாய்ப்பல்
காலியாகி
மெல்ல முடியாதுன்னு..















6 கருத்துகள்:

  1. கிடைக்கும்போது உண்ண முடியாது. உண்ண முடியும் போது கிடைக்காது! ம்ம்ம்ம். பல விஷயங்களில் இப்படித்தானே....

    நல்ல கவிதை செல்வா.

    பதிலளிநீக்கு
  2. உரிய காலத்தில் கிடைக்காமல் போவது வேதனையே.

    பதிலளிநீக்கு

  3. வாழ்க்கையில் இப்படித்தான் பல சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    பதிலளிநீக்கு