வெள்ளி, 26 ஜனவரி, 2018

பத்மாவத்...பணம் தவிர வேறில்லை..



நிறைய பணம் கொட்டிக்கிடக்கும் இந்தி சினிமா உலகம் மீண்டும் ஒருமுறை பணத்தை தன் கற்பனைக்காக இறைத்திருக்கிறது..



ஒரு வரலாறு கற்பனைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது..
ஸ்ரீலங்காவின் இளவரசி முத்துகள் நாடி வந்த மேவார் மன்னன் ரத்தன் சிங்கோடு மனமொன்றி மேவாரின் சிறிய அரசியார் ஆகிறார்..

வழக்கம் போல ஆச்சார்யன் ஒருவனின் குயுக்தியால் மேவாரின் நிம்மதி பறிபோகிறது.
இடையில் ஜலாலுதின் கில்ஜியின் கொலைக்குப் பின் சுல்தானாகும் அலாவுதின் கில்ஜிக்கு ஆச்சார்யன் மூட்டும் பத்மாவதி பற்றிய மோகத்தீ மேவாரின் மீது படையெடுப்பதுவரை நீள்கிறது..

டெல்லிக்கும் மேவாருக்குமான யுத்தங்கள்.
இராஜபுத்திரருக்கேயான வீர உரைகள்..வசனங்கள்..ஹோலி...நடனங்கள்...இத்யாதி..

இந்தி நட்சத்திரங்களின் பெயர்கள் பரிச்சயமில்லாத எனக்கு ஒரு வரலாற்றின் மனிதர்களோடே வாழ்ந்திருப்பதான உணர்வு..

பார்த்தும்..படித்தும் பழகிப்போன இராஜபுத்திரப்பெண்களின் நாட்டுப்பற்று,வீர உணர்ச்சிகள்...வண்ண உடைகள்...கூட்டமான ஆட்டங்கள்...

மூன்றாம் பாலினமான மாலிக்காபூரின் பாவனைகள்...

விரிந்துகிடக்கும் மலையின் உச்சியில் மேவார் கோட்டை..சித்திர வேலைப்பாடுடன் கூடிய மண்டபத்தூண்கள்...

அரச உணர்வுகளை தூண்டும் முகபாவங்கள்..
புழுதி பறக்கும் பாலைவன போர்க்களங்கள்..

இந்த படத்துக்கான போராட்டங்களே கூட எதற்காகவெனும் பல சிந்தனைகளை கிளப்புகின்றன...

பரந்துபட்ட வியபார தளம்...திரைக்கதையில் எந்த வித சிரமமுமில்லாத லாவகம்..பரபரப்பான விளம்பரங்கள்..தேர்ந்தெடுக்கப்பட்ட சில முகங்கள்...

திரைப்படத்தை பிரமிக்கும் படியான பல ஜோடனைகளுடன் எடுத்திருந்தாலும்..அந்த பிரமாண்டத்தையும்,அகன்ற திரையில் தோன்றும் காட்சிகளையும்,வழக்கமான பெண்ணின் வீரத்தைப் போற்றும் இறுதியும் பெரிதாய் மனதைக் கவர்வதில்லை..

இசை..ஒப்பனை..எடிட்டிங்...காட்சி அமைப்பு... பாத்திரங்களின் உணர்ச்சிமிகு நடிப்பு... இப்படி எல்லாவற்றையும் பாராட்டத் தோன்றினாலும்...
பத்மாவதி எனக்குள் நிறையவே இல்லை...




2 கருத்துகள்:

  1. இந்த விளம்பர உலகில் எதையும் காசாக்கிவிடலாம் என்ற சூழலில் இத்திரைப்படம்.

    பதிலளிநீக்கு
  2. கற்பனை கலந்த வரலாறு திரைப்படமாக எடுப்பது சற்று சவால் நிறைந்ததுதான். மிகுந்த பணச்செலவுடன் படமாக்கிய துணிச்சல் நிச்சயம் பாராட்டத் தக்கது. பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு