புதன், 11 நவம்பர், 2015

காலக்கடிகாரம்....


எண்ணாய் தெரிவது
தவிர்த்து
முட்கள் திரியும்
கடிகாரங்கள்
பிடிக்கும்
சின்னவளுக்கு..

ஐந்து ஐந்தாய் கூட்டி 
நிமிடங்கள்
சொல்லிவிட்டு
நொடிகளின்
பின்னே ஓடுவாள்.

காதுகளில் வைத்து
அதன்
துடிப்புகளுக்கு சிரிப்பாள்.

சின்னவயது கடிகாரம்
ஒன்றை
நேற்று
காண நேர்கையில்,

காட்டத்தொடங்கியது 
காலத்தை....

13 கருத்துகள்:

  1. கடிகாரங்கள் சிலநேரம்
    நிகழ் காலத்தையும்
    பல நேரங்களில்
    பின்னோக்கியும் பயணித்து
    நினைவலைகளை மீட்டுத்தான்
    தருகின்றன
    அருமை நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஆம் சரிதான் கடிகாரம் காலச்சக்கரம் சுழல்வதையும் காட்டுகின்றது இல்லையா....நேரம்தான் எல்லாமே....இது எல்லோர் வாழ்விலும் விளையாடத்தான் செய்கின்றதோ...

    பதிலளிநீக்கு
  3. கடிகாரத்தை வைத்து ஒரு அருமையான சிறுகவிதை. ஐந்து ஐந்தாக கூட்டி சொல்வதை கேட்க்கையில் தான் என்ன ஒரு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  4. இப்போதும் கணக்கிடுகிறாள்...புதுகையிலிருந்து சென்னை எத்தனை மணிநேரம்...அங்கே எத்தனை மணிக்குக் கிளம்பினால் இங்கே எத்தனை மணிக்கு வர இயலும் என்பதையும் கணக்கிடுகிறாள்...

    பதிலளிநீக்கு
  5. பராவாயில்லை தங்கள் சின்னவர்க்கு..இன்னமும்நான் முட்கள் தெரிந்தால் நேரம் பார்க்க திண்டாடுகிறேன்...நண்பரே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.....விடுங்கள்.. இன்னும் கடிகாரம் கட்டுகிறீர்களா என்ன?

      நீக்கு
  6. முன்னோடும் எழுத்துக்களில்
    பின்னோடும் உங்கள்
    நினைவுகளை கண்டேன்

    சிறப்பு ...

    பதிலளிநீக்கு