வியாழன், 12 நவம்பர், 2015

அன்பின் சக்திக்கு....

அன்பின் சக்தி,
சின்னவள் பற்றிய தொடர்பதிவுகளைப் பற்றி இதுவரை நீ எதுவும் சொல்லவில்லை என்றாலும் ,பதிவுகளை படிக்கும் நண்பர்களில் சிலர் பெரியவளை மறந்து போனீர்களா எனும்போது எனக்குள்ளும் ஒரு குறுகுறுப்பு வந்து போவது உண்மைதான்.


அவள் உனக்கும் சின்னவள் என்பதாலும் என்னிலும் உன்னோடு அதிகம் இருப்பதாலுமே பதிவு செய்துகொண்டிருக்கிறேன்.
கடந்த இரண்டு நாள்கள் உங்களோடு இருந்த வேளைகளில் ஒரு அப்பனாய் மகிழ்ந்திருந்தாலும் சென்னையின் சீர்கெட்ட சில பண்பாடுகளாலும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மேல் வந்த அருவருக்கத்தக்க வேதனைகளாலும் சிரமப்பட்டுக்கொண்டுதானிருந்தேன்.

சில சம்பவங்கள்”பட்” என்று மறந்துபோய் விடுகின்றன...சில சின்னவயது முதல் ஆறாம்விரலாய் ஒட்டிக்கொண்டுவிடுகின்றன.

நீ பெரியவளாகையால் எனக்குத் தோன்றும் எல்லாவற்றையும் உனக்கு எழுதலாமென்று இருக்கிறேன்.
என் எல்லாக் கடிதங்களையும் கவனமாய் வைத்திரு.
இலக்கியத்தரங்கள் ஏதுமிருக்காது தான்.
ஒரு தந்தை எனும் பிரியத்தைவிட ஒரு மனிதனாய் நான் வாழத் துடித்துக்கொண்டிருக்கும் வலி புரியும் உனக்கு.

விடியும் பொழுதுகளில் வந்து விழும் நாளிதழ்கள் தொடங்கி முகப்புத்தகங்கள், இணையம் ஈராக விதைக்கும் அனுபவ விதைகளை உனக்களிக்கிறேன்.
வீரியமிருப்பின் விளையட்டும்.

உனக்கு நான் தரும் பரிசுகளாய் இதைப் பத்திரப்படுத்தி வை.
உன் அப்பன் எழுத்தாளன் இல்லை என்றாலும், எழுத முயன்றவன் என்றேனும் உன் சந்ததி அறியட்டும்.
கவலைப்படாதே ! உன் இதயம் கனக்கும் எதுவும் இருக்காது.
ஆயினும் சில சம்பவங்கள் பதிவிடும் போது பதறிப்போகாதே.
பின்னர் உன் வாழ்வில் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவை எதிர்ப்படும்போது எளிதாய் கடந்து போவாய் என்ற நம்பிக்கையில் எழுதுவேன்.

நான் சந்தித்த சில மனிதர்கள்,
கடந்து போன சம்பவங்கள்,
பதிந்து போன தழும்புகள்,
கனன்று கொண்டிருக்கும் நினைவுகள்...
எல்லாம்  எல்லாம்
காத்திருப்பாயா நாளைவரை...
எழுதுகிறேன்

12 கருத்துகள்:

  1. அடுத்து பெரியவளுக்கா..
    வாசிக்க நாங்க தயார்..
    பலமான முன்னுரை எதிர்பார்ப்பை அதிகரிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. தொடருங்கள்... நாங்களும் காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  3. எனக்கு எப்போதும் அவள் தான் தோழி, இரண்டாம் அம்மா, அப்பா, அண்ணன் எல்லாமும்..எழுதுங்கள்.நானும் படிக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  4. அன்பு மகளுக்கு எழுத
    எதற்கு எழுத்தாளர்
    பாசமிகு தந்தைபோதும்
    நேசமிகு சொற்கள் போதும்
    அனுபவமிகு வார்த்தைகள் போதும்


    நானும் காத்திருக்கின்றேன் நண்பரே
    நாளைக்காக

    பதிலளிநீக்கு
  5. சின்னவள் சிலிர்க்க வைத்தாலும் பெரியவள் தானே உம்மை பெற்றெடுத்த மகாராசி...

    பதிலளிநீக்கு
  6. மடைத்திறக்கிறது வானம் முதன்முதலாய் முத்துத்துளிகளை மண்மீதும் மலர்மீதும் பொழிந்துவிட்டுச்செல்ல ...
    காத்திருக்கிறோம் மண்மேடாய்!

    பதிலளிநீக்கு
  7. பெரியவளின் வருகைக்காகக் காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  8. ஆஹா! பெரியவளுக்குக் கடிதங்களா? அறிவிப்பே கலக்கலாய் இருக்கிறதே..

    பதிலளிநீக்கு
  9. உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
    http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

    பதிலளிநீக்கு