வியாழன், 17 மார்ச், 2016

பால் குடி..மறங்க...

அன்பின் சக்திக்கு,

எரியும் பனிக்காடு படித்த நாட்களில் தேனீர் மீதான எரிச்சலும் கோபமும் கொஞ்சநாள் அதை ஒதுக்கிவைக்க உதவியது..

தனிமை தரும் உரிமையில் தேனீரும்,காப்பியும் மீண்டும் ஒட்டிக்கொண்டன.

பொதுவாய் பால் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாய் மாறிவிட்ட காலத்தில் இருக்கிறோம்.

என் இளமைக்காலங்களில் 100 மில்லிக்குமேல் பால் வாங்க வசதியில்லாத வீடு.

கூட்டுறவுப்பண்ணையின் கறந்த பாலை வாங்கி காப்பித்தூளை கலந்து வடிகட்டாத அந்த கருப்பும் வெளுப்புமல்லாத காப்பி 8 பேருக்கு பகிரப்படும்.

நகர காலங்களில் தண்ணீர் சேர்க்காத பாக்கெட் பாலில் உயர்தர காப்பிப்பொடி கலந்து கோப்பையில் அருந்தி நாளைத்தொடங்கும்
நாகரீக பிழைப்புக்கு
செருப்படி தந்திருக்கிறது சமீபத்திய அறிக்கை..

பயன்படுத்தும் பாக்கெட் பாலில் 70 சதவீதம் போலி அல்லது கலப்படம் என்பத்தை ஒத்துக்கொண்டிருக்கிறது அமைப்பு..

கலக்கும் பொருட்களாய் அறியப்படுபவை..

யூரியா,டிட்டர்ஜெண்ட்,
சீனப்பவுடர்,மைதா மாவு,

அடப்பாவிகளா...

அதைக்கண்டுபிடிக்கும் கருவிகளை வாங்கி இனி பரிசோதிக்கப்போகிறார்களாம்.

வெட்கமாய் இல்லை..

இயற்கை கொடுக்கும் பாலில் மனிதத்தன்மை கொஞ்சமும் இல்லாமல் நஞ்சைக்கலக்கும் இவர்களுக்கு சட்டம் தரும் தண்டனை 1500 வரை அபராதமாம்.

கொஞ்ச நாள் முன் பாலில் தண்ணீர் கலந்ததாய் செய்தி பரபரப்பாய் இருந்தது..அப்புறம் ஒன்றையும் காணோம்.

கூட்டணிப்பேரங்களில் இந்த செய்தியும் அடங்கிப்போய்விடும்.

ஆனால்,
இது அணையக்கூடாது.

பாலில் கலப்படமும்,போலிகளும் உலவுவதாய் ஒத்துக்கொள்ளத்தான் ஒரு அரசா?

இந்த நாட்டின் பாதுகாப்பை மெல்லப்பார்க்கலாம்..
எல்லாரும் செத்துச்சுண்ணாம்பான பின் எதற்கு பாதுகாப்பு..

சாராயம் விற்கும் அரசு எப்போது பாலின் பால் பார்வை செய்யும்?

கலப்படத்தையும்,
பொருட்களையும் கண்காணிக்கவேண்டிய துறை என்ன வேலை செய்து கொண்டிருக்கிறது?

யூரியாவும்,ஸ்டார்ச்சும் கலந்துவருவதாய் ஒத்துக்கொள்ளும் 70 சதவீத பாலைக்குடித்துத்தான் இந்தியக்குழந்தைகள் வளர்ந்து வல்லரசாக்க வேண்டும் நாட்டை..

இணைய நாட்களில் அப்பட்டமாய் தெரியவரும் கலப்படங்களையும்,
போலிகளையும் பார்த்தபின்னும் செவிடாய்,குருடாய் செயலற்றிருக்கும் அமைப்புகள் யாருக்காக?

தேசப்பாதுகாப்புக்கு குந்தக கோஷம் என்று வழக்கு போடும் உண்மையின் புதல்வர்களே..

ஒரு தேசத்தின் மக்களையே அழிக்கப்பார்க்கும் இவர்களுக்கு என்ன பரிசு தரப்போகிறீர்கள்?

பாலின் கலப்புகள் புளியைக்கரைக்கிறது?
சக்தி..

உன்  தோழர்களிடம் சொல்..
இந்த பாக்கெட் பால் நம்மை வாழவைக்க இல்லை.

வீட்டின் பால்கணக்கை நிறுத்து..

நல்லபால்தான் வேண்டுமென்றால் நாம் வாக்களிப்பதைப்பொறுத்து..

அன்புடன்,

மீரா செல்வக்குமார்.











14 கருத்துகள்:

  1. இந்த லட்சணத்தில் ,பால் தரும் பசுவை தெய்வமாய் வணங்க வேறு செய்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  2. பாலிலும் கலப்படமா? அடப்பாவிகளா!

    பதிலளிநீக்கு
  3. சுவாசிக்கும் கற்றிலேயே கலப்படம்
    சொய்யும் காலமிது.....
    பாலில் செய்யமாட்டார்களா என்ன....

    பதிலளிநீக்கு
  4. நம்ம ஊர்ல ஒரு நல்ல பால் பண்ணை காரங்க உருவாக்கிட்டு வராங்க அய்யா... இருவரும் இளைஞர்கள்... அவர்களின் நோக்கம் ஒரு சொட்டுகூட தண்ணீர் கலக்காத பாலை விநியோகிக்க வேண்டும் என்பது... கூடிய விரைவில் நல்ல செய்தி நம் மக்களுக்கு வரும்...தமிழகம் முழுக்க ஆதரவு தாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல வேளை பாலில் எனது நாளை தொடங்கி முடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை ஐயா.
    கட்டாயம் என்னை சுற்றிலும் உள்ள அனைவருக்கும் இந்த செய்தியை சேர்த்துவிடுகிறேன் ஐயா.தகவலுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. பாலில் கலப்படம் புகுந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. இப்போதைக்கு ஏதோ அரசு ஒத்துக் கொண்டுள்ளது அவ்வளவுதான். இனி எல்லாமே அப்படிதான்.
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. செய்தியை நாங்களும் வாசித்தோம். இந்தக் கலப்படம் நிகழ்வு முன்பே ஆரம்பித்துவிட்டதே. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் நடக்கிறது என்று செய்தி வந்து எங்கள் தளத்தில் கூட செய்தி பதிவானது. சென்ற வருடமே.

    கலப்படம் எதில் இல்லை என்று சொல்லுங்கள் செல்வா??!!!!

    பதிலளிநீக்கு
  8. அறிக்கை அளித்ததோடு மறந்து போயிருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  9. பாலில் கலப்படமா...
    எல்லாத்திலும் அரசியல்வாதிகளுக்கும் பங்கு இருக்கு அண்ணா...
    அவர்கள் குடும்பம் கோடிகளில் புரள நாடு குட்டிச் சுவராய் ஆவதில் துளியும் கவலை இல்லை...
    நல்ல அரசைத் தேர்ந்தெடுப்போம்...

    பதிலளிநீக்கு
  10. பால் கெடாமல் பலநாள் இருக்க,கலப்படம் செய்யும் கயவர்களையும்,அதற்குத் துணைபோகும் அரசியல்'வியாதிகளையும் காலம் மன்னிக்காது!
    என் தளத்திற்கு வாருங்கள்!

    பதிலளிநீக்கு
  11. மக்கள் சிந்தனையில் மாற்றம் வராதவரை...............?

    பதிலளிநீக்கு
  12. மாடு வளர்த்துத் தான் பால் குடிக்க வேண்டுமா?
    அட கடவுளே!
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  13. ஆனால் அம்மாவும் சூர்யாவும் தான் பாலின் பக்தைகள்..அவர்கள் வாங்காமல் இருந்தால் போதும். என்னைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே...இது வேண்டுமே வேண்டும் என்றும் இல்லை..வேண்டாம் என்று மறுதலிப்பதும் இல்லை..( உணவு விஷயத்தில்)அவர்களைத் நினைத்துத் தான் கவலை கொள்கிறேன்

    பதிலளிநீக்கு