செவ்வாய், 22 மார்ச், 2016

என் சன்னலோரம்...

ஆடுவந்து கடிப்பதில்லை..

அணைகட்டி
நீருமில்லை..

சாத்திரத்து
மழையுமில்லை..

சாணி எரு
ஏதுமில்லை..

உரத்துளிகள்..

முள்வேலி
கட்டவில்லை..
யாரும்
முனை முறித்துப்
போகவில்லை.

கருந்துளசி,
சிறுமுருங்கை
வகைகளில்லை..

வெண்குட்டம்
வந்தது போல்
மஞ்சள் இலை.

முள்ளாய் இலை
கொண்ட
சிறு சவுக்கு.

சீக்கிரமே
செத்துவிடும்
சீமைப்
பூங்கன்று.

பணம் வந்து
குமிய
ஒரு
இலைக்கொடி..

மலைப்புறத்தில்
மட்டும்
பூக்கும்
படர்ந்த மலர்.

மகரந்த
சேர்க்கைக்கு
வண்ணப்பூச்சி
வருவதில்லை..

சன்னலோரம்
நான் வளர்க்கும்
என்
தொட்டிப் பூச்செடியே...

குவளை நீர் குடித்து..

சிறு மொட்டு
விழிதிறக்க

பூக்கும்
என்
உள்ளமெல்லாம்..











10 கருத்துகள்:

  1. பூத்துக் குலுங்கட்டும்..
    பூக்களும் கவிதைகளும்.

    பதிலளிநீக்கு
  2. தூரத்தில் தெரிந்தாலும், தொட்டிக்குள் மலர்ந்தாலும் பூ, பூ தான். கொண்டாடுங்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஜன்னலோரக் காட்சி நன்றாகத்தான் இருக்கிறது. செடிக்கு வாய்த்தது தொட்டி. பூக்கட்டும்!

    பதிலளிநீக்கு
  4. ஜன்னலோரப் பூந்தோட்டி பூத்துக் குலுங்கட்டும்....

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  5. பூக்களும் கவிதைகளும் பூத்துக் குலுங்கட்டும்

    பதிலளிநீக்கு
  6. கவிதைப்பூ பூக்கட்டும் தொடர்ந்து.

    பதிலளிநீக்கு
  7. மிக நன்று சகோதரா.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  8. மிக நன்று சகோதரா.
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  9. ஜன்னலோர பூந்தொட்டி அழகு அழகு....கவிதைவரிகளும் சேர்த்து அழகு சேர்த்துவிட்டது!! பூத்துக் குலுங்கிடட்டும்...

    பதிலளிநீக்கு