இந்த நாட்டில் அப்படி ஒரு மாற்றம் எப்படி வந்தது?
நீதி வளைந்ததாய் மக்கள் முணுமுணுக்க தொடங்கியவுடன் பதறிதுடித்து எழுகிறது..
இடை நீக்கம்..இன்ன பிற....
மக்கள் மனதில் பெருமூச்சு..
ஆஹா நீதிவென்றுவிட்டது..
தர்மம் நிலைத்துவிட்டது.!
அப்படி நடந்திருந்தால் ஒரு பெருமழையை எதிர்பார்க்கலாம்.
ஒவ்வொரு செய்திக்கும் பின்னிருக்கும் அரசியல் ,என்னை அப்படிப்பார்க்க வைக்க மறுக்கிறது..
பல மாதங்கள் ராத்திரி பகலாய் சுடுகாடுகளிலும் உறங்கி ஆயிரக்கணக்கான பக்கங்களில் தரும் அறிக்கைகள் குற்றவாளிகளுக்கு தண்டனை தரும் என்று எதிர்பார்க்க,,
சில பக்கங்களில் தீர்ப்பளித்து திகில் தருபவர் பின்விளைவுகள் தெரியாமலா கொடுத்திருப்பார்...?
தெள்ளத்தெளிவாய் குற்றங்கள் பார்வையில் பட,
வழக்குத்தொடுத்த அதிகாரிக்கு ஆட்சேபம் என்றால்,
இனி யார் அவற்றை கையில் எடுப்பார்.?
மாண்பமை நீதியின் தலைவர்களின் இந்த வேகம் கு.சாமிகளுக்கு எதிராய் ஏன் இல்லை?
"படித்தவன் சூதும் வாதும் செய்தால்
போவான் போவான்
அய்யோவென
போவான்"
இடைநீக்கம் என்பது என்ன அரைச்சம்பள ஓய்வுதானே?
தீர்ப்பளித்த நாட்டாமை மீது ஒரு சந்தேகமும் இல்லை..
அவர் மென்ற வெற்றிலைக்கு வேலை செய்துவிட்டார்...
யாரை திசைமாற்ற இந்த யோசனை?
தீர்ப்பு தவறெனில் விடுதலை ரத்து எப்போது?
அடிப்பவர்களே..மருந்து பூசுகிறார்கள்..
அய்யா..கனம் சமூகமே!
"வரப்புப் பிரச்சனைக்காக
வழக்குமன்றம்
போனார்கள்.
தீர்ப்பு வரும் போது
வயல்
காணாமல்
போயிருந்தது"
நகைச்சுவையாய் தெரிந்தாலும்,
மன்றங்களைப்பற்றிய அவலச்சுவை இப்படித்தான் இருக்கிறது மக்களிடம்.
ஓட்டையான சட்டங்களில் திமிங்கிலங்கள் தப்பிக்க,
சிறுபறவைகள் சிக்கிக்கொள்கின்றன.
உங்கள் வாதங்களில் உங்களுக்கு பெருமையிருக்கலாம்..
மக்கள் மத்தியில் இல்லை தெரியுமா?
மானம், அவமானங்களும்,
கேலிகளுக்கும் மனதை அடகுவைத்து எப்படியும் வாழலாம் எனில் ஏனிந்த நாட்டில் இத்தனை சட்டங்கள்?
பதவிகளை மறந்து ஒருநிமிடம்,
இந்த மண்ணின் குழந்தையாய் கண்ணில் நிறுத்திப்பாருங்கள்..
குற்றங்களும்,விளைவுகளும் விளங்கிக்கொள்ள முடியாததா?
ஊடகங்களின் காலம்...
கேடுகெட்ட அரசியல்வாதிகளை,
மனசாட்சி கொன்ற மருத்துவர்களை, நடிகர்களை,
சமூக கேடுகளை,
இணையத்திரைகளில்
துகிலுரித்து,தோலுரித்து, தொங்கவிடும் மக்கள், இப்போதெல்லாம் உங்களையும் அந்த வரிசையில் சேர்க்கிறார்கள்
என்பது உங்களுக்கு வேண்டுமானால் ஒன்றுமில்லாததாய் இருக்கலாம்..
எனக்கு வலிக்கிறது...
,
மனம் வலிக்கத்தான் செய்கின்றது. பெரும் குற்றவாளிகள் தப்பிப்பது ஒரு வேதனையென்றால், மெத்தப்படித்த மேதாவிகளும், தங்கள் எழுத்துத்திறமையால் நியாயப்படுத்தும்பொழுது மிகவும் வலிக்கின்றது.
பதிலளிநீக்குசெல்வா, இந்த என் கருத்தை வெளியிட வேண்டியதில்லை -
பதிலளிநீக்குபதிவில் சில வரிகள் இரண்டுமுறை வந்துள்ளன. ( அல்லது, தவறான தீர்ப்பு திரும்பி வந்திருப்பதை சிம்பாளிக்கா சொல்றீங்களா?) பார்த்துத் திருத்திவிட வேண்டுகிறேன்.
படித்தவன் சூதும் வாதும் செய்தால்
பதிலளிநீக்குபோவான் போவான் அய்யோவென போவான்....
சரியான ஒரு சாபம் போல் உள்ளது
சவுக்கடியான வார்த்தைகள்....
//படித்தவன் சூதும் வாதும் செய்தால்
பதிலளிநீக்குபோவான் போவான் அய்யோவென போவான்....
சரியான ஒரு சாபம் போல் உள்ளது
சவுக்கடியான வார்த்தைகள்...//
அஜய்யின் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.
த ம 2
நீங்கள் சொல்வது சரிதான். பறவைகளைச் சிக்க வைத்து விட்டு திமிங்கலங்கள் உலா வருவதைச் சரியாகச் சொன்னீர்கள்.
பதிலளிநீக்குசெமையா தாக்கியிருக்கீங்க செல்வா. மனது வலிக்கத்தான் செய்கிறது..இதுதான் யாதார்த்தம் என்று பல சமயங்களில் கடந்து போக முடியவில்லைதான். இப்போதும் கூட சொல்லுவதுண்டு சிறையில் இருப்பவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் குற்றவாளிகள் அல்ல. மிகப்பெரிய குற்றவாளிகள் எல்லாம் வெளியே உல்லாசமாய் இருக்ககிறார்கள். ஆனால் பூனைக்கு யார் மணிகட்டுவது என்று நாமும் அதில் அடங்கியிருக்கின்றோமே...
பதிலளிநீக்குநீதிமன்றங்களின் செயல்பாடுகள அவ்வப்போது நம்பிக்கை அளிப்பதாக காட்டிக் கொள்ளபடுகிறது.
பதிலளிநீக்கு