அன்பின் சக்திக்கு,
தமிழக வங்கிகளின் உள்ளே சென்றுவிட்டு வரும்போது பணம் அல்லது தன்மானம் இவற்றில் ஒன்றை கட்டாயம் விட்டு வருகிறோம்.
குறிப்பாய் அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிகளில் வாடிக்கையாளராய் நாம் படும் இன்னல்கள் இன்னொரு சுதந்திரப்போராட்டம் தூண்டுபவை.
இவை இப்போது என்பதில்லை.
கி.ஆ.பெ.விஸ்வநாதம் ஒரு தடவை வங்கியில் நின்றுவிட்டு வாழ்நாள் முழுவதும் அவற்றோடு விவாகரத்து வாங்கிய தொல் வரலாறு கொண்டது.
அப்படி ஒன்றும் வங்கிகள் நீதிநெறிப்படி உயர்ந்தோர் தாழ்ந்தோர் பார்க்காமல் செயல்படுவதுமில்லை.
கல்விக்கடனுக்காய் பணம் பெற்றவர் புகைப்படங்களை பொதுவில் வைத்தும்,
மல்லையாக்களோடு கைகுலுக்கியதில் நாற்றமெடுத்துக்கிடப்பதை நாடும் அறியும்.
யுரேகா யுரேகா என யோசனை தட்டிவிட்டுச்சென்றது.
இந்த தேர்தல் கால சிறப்பு விற்பனையில் சில கடன்களின் தள்ளுபடி தவிர வங்கிச்சேவைகள் குறித்த எதுவும் இல்லை..
ஒருவேளை அடுத்த தேர்தலுக்கு இருக்கலாம்.
யோசனை ஒன்று..
டாஸ்மாக் நடத்தும் அரசு ஏன் ஒரு வங்கி நடத்தக்கூடாது?
தமிழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கு அடுத்து அதிகம் இருப்பது வங்கிகள் தான்.
பக்கத்து மாநிலம் தொடங்கி வெளிநாட்டுக்காரன் வரை வலையை விரித்து அள்ளிக்கொள்கிறான் வங்கிகளைத்திறந்து.
முழுக்க முழுக்க தமிழக அரசின் சொத்தாக நமக்கென ஒரு வங்கி இருந்தால் எப்படி இருக்கும்.?
அரசால் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் நடத்தப்படுமானால் அது வரமாய் இருக்கும்.
ஆரம்பத்தொகை இல்லாமல் தமிழ்நாட்டின் அனைவருக்கும் கட்டாய புதுக்கணக்கு தொடங்க வேண்டும்.
தமிழகத்தின் எல்லாப்பணப் பரிமாற்றங்களும் அந்த வங்கி மூலமே நடத்தவேண்டும்.
அரசுத்துறையின் பணியாளர் சம்பளம் முதல் சாதாரணமானவனின் மான்யம் வரை சுய உதவிக்குழு,கல்விக்கடனென அதன் மூலமே நிகழ வேண்டும்.
தமிழகம் தாண்டி தமிழன் எங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெல்லாம் கிளைகள் வேண்டும்.
அதற்காக வங்கிகளின் நடைமுறையிலிருந்து சலுகைகளை எதிர்பார்க்கவில்லை.
அபராதம்,வட்டி,கமிஷன் என மற்ற வங்கிகளுக்கு அழும் தொகை அரசுக்கேனும் செல்கிறதே என்ற சின்ன ஆறுதலாவது கிடைக்கும்.
தமிழ்நாட்டில் வங்கி திறந்த எவனும் நட்டப்பட்டு மூடிவிட்டு போய்விடவில்லை.
சாராயத்தொழிலுக்கு வங்கித்தொழில் மோசமுமில்லை.
அரசின் வங்கியாக அது இருக்குமெனில் கருவூலத்துக்கும்,வங்கிக்கும் அலையும் அலுவலர்களின் சுமை குறையும்.
பத்திரப்பதிவு,மற்ற அரசுக்கட்டணங்கள் யாவும் இங்கேயே செலுத்துவதன் மூலம் இன்னொரு இடைத்தரகனாய் மற்றொரு வங்கி தேவையில்லை.
தமிழகத்தின் பஞ்சாயத்துக்கு ஒரு வங்கி என்றாலும் ஒரு வங்கிக்கு 10 பேர் என்றாலும் அத்தனை வேலைவாய்ப்பு..
நம்முடைய பணத்தால் வயிறுவளர்க்கும் மற்ற வங்கிகளின் சேவை கொஞ்சம் உருப்படலாம்.
வங்கி ஆரம்பிப்பதும்,நிர்வகிப்பதும் சுலபமான நடைமுறையல்ல..
தெரியும்...
ஆனால் அரசுக்கு அது கடினமல்ல.
படிக்கும் நண்பர்கள் இதை உருப்பெருக்கி தரவுகளோடு தருவார்களெனில் சிறக்கும்.
பொன்னான வாக்குகளை கேட்டு வாங்க வருபவர்களிடம் கேட்கலாம் சக்தி..
பேங்க் ஆப் தமிழ்நாடு..
தமிழ்நாடு வங்கி..
நன்றாய் இருக்கிறதா?
அன்புடன்,
செல்வக்குமார்.
நீங்கள் சொல்வது மிக சிறந்த ஐடியா என்பதில் எள்ளளுவும் சந்தேகம் இல்லை மிக அற்புதமான திட்டம் அதை நல்ல முறையில் நடைப்படுத்தினால் ஆனால் நமக்கு வாய்த்த தலைவர்களோ சரியில்லையே.. அந்த வங்கிகளில் வரும் டெபாசிட்டை எல்லாம் தங்களது தொழிலுக்கு முதலீட்டாக்கக்கி அல்லது சாரய தொழிற்சாலைகளுக்கு முதலாக்கி பேங்கை திவாலாக்கிவிடுவார்கல் அந்த பேங்கில் வரவு செலவு வைக்கும் அரசு தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்சமும் பறி போகிவிடுமே
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குதாமதமாக வந்ததால், தனியாகச் சொல்லவில்லை...சொல்ல நினைத்தக் கருத்தை மதுரைத் தமிழன் அவர்கள் சொல்லியிருக்கிறார் அவரது ஸ்டைலில்...இதே கருத்துதான்
நீக்குசெல்வா கோஆப்பரேட்டிவ் வங்கிகள் தமிழக அரசின் மேற்பார்வையில்தானே நடக்கின்றன? இல்லையோ...
நீக்குயோசனை நல்லாருக்கே..
பதிலளிநீக்குஅருமையான யோசனை நண்பரே
பதிலளிநீக்குமிகவும் அருமையான யோசனை.
பதிலளிநீக்குநல்ல யோசனை.
பதிலளிநீக்குநல்ல யோசனைதான். ஆனால், தமிழக அரசு அலுவலகங்கள் போல அதுவும் மக்களை அலைக்களிக்கத்தான் செய்யும். மற்றபடி மதுரைத் தமிழன் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.
பதிலளிநீக்குத ம 3
கவிஞரே, தமிழ்நாட்டிற்கு என்று தனி ஒரு வங்கியா? உங்கள் வங்கிக் கனவின்படி, ஏற்கனவே தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கோ-ஆபரேடிவ் பேங்குகளும் தமிழக அரசின் மேற்பார்வையில்தான் உள்ளன; அங்கே உள்ள அரசியல் பற்றி உங்களுக்கே தெரியும்; சொல்ல வேண்டியதில்லை.
பதிலளிநீக்குசரி தான்.....
பதிலளிநீக்குசரி தான்.....
பதிலளிநீக்குநல்லாருக்கே....ஆனா அப்படியே அரசியல்வாதிகள் ஆட்டைய போட்டுடுவாங்களே..
பதிலளிநீக்குமிக நல்ல சிந்தனையைத் தூண்டி செயல்பட வைக்கும் கட்டுரை. நடைமுறையானால் தமிழர்க்கு நல்லது.
பதிலளிநீக்குமதுரைத் தமிழன் பாராட்டி எழுதியதைப் பார்த்து மகிழ்ந்தேன். தொடர்ந்து இதுபோலும் நல்ல சிந்தனைக் கட்டுரைகளையும், மிக நல்ல கவிதைகளையும் எதிர்பார்க்கிறது பதிவர் உலகம்,தொடருங்கள், வாழ்த்துகள்
யோசனை அருமை நண்பரே ...
பதிலளிநீக்குSuper idea!! 👌
பதிலளிநீக்கு