வெள்ளி, 20 மே, 2016

எங்களையே சொல்றீங்களே....

உங்கள்
பட்டாசுகளென
சிதறி
எம்
வாக்குகள்.

உம்
தலைவர் சிலை
மாலைகளென
காயத்தொடங்குகிறது
எம்
கனவுகள்.

ஆரவாரக்கூச்சல்களில்
அழுந்திக்கிடக்கிறது
அழுகை.

தேடித்தேடிச்
சொல்லும்
காரணங்களில்
எம்மையே
குறை சொல்வீர்..

பணத்துக்கு
விலைபோனதாய்
பதறுகிறீர்கள்..
நீங்கள்
தியாகத்
திருவுருவங்கள்?

மாறவே போவதில்லை
நாங்களென
உங்கள்
சர்ப்ப சாபங்கள்
கொத்தித்தீர்க்கிறது
எங்களை.

நீங்கள்
முற்றிலும்
மாறிவிட்டவர்கள்?

உங்கள்
மாற்றங்கள்
பற்றிய
கனவுகளை
உள்வாங்க
வில்லையென
உருகுகின்றீர்கள்..

தலைசிதறிய
தண்டவாளங்களை,
எரிந்துபோன
குடிசைகளை

மறக்கவும்
மாற்றவும்
முடியவில்லையே
இன்னும்..

உங்களுக்குத்தான்
பதவி
தேர்தல்
கூட்டணி
எல்லாம்..

எமக்கு
எப்போதும்
பிரிவதில்லை
பட்டினி
வயிறு.

சரி தலைவர்களே!
நீங்கள்
நன்றாக
கழுவக்
கற்றுக்கொண்டு
வாருங்கள்..

எங்கள்
கண்ணீர் துடைக்க...



6 கருத்துகள்:

  1. பட்டினி வயிற்றிற்குத்தான் சோறு போட்டார்களே பிரியாணிப் பொட்டலங்களாய்...ஓட்டிற்கு முன்...அதுதான் அவர்களின் துடைப்பு என்று சொல்லிக் கொள்வார்கள் அதாவது வறுமையைத் துடைக்கின்றார்களாம்...

    பிரியாணிப் பொட்டலமல்ல வறுமையை ஒழிக்க....அந்தப் பிரியாணியை அந்த மக்களே வாங்கிடவோ, அடுப்பு எரிந்திடவோ அவர்கள் தங்கள் காலில் நிற்கவோ வழி செய்வதுதானே தலைவர்களின் கடமை ஆனால் அவர்களின் பலிகடாக்களே இந்த மக்கள்தானே...அப்புறம் எப்படிக் கண்ணீரைத் துடைப்பார்கள்??!!

    பதிலளிநீக்கு
  2. வேதனையின் உண்மை நிலை கவிஞரே....

    பதிலளிநீக்கு