அவர் முதல்வராக வரவேண்டாம் எனச்சொல்ல ஆயிரம் காரணம் உங்களிடம் இருக்கலாம்...
நான் மறுக்கவில்லை...
அவர் வந்தால் என்னவாகிவிடப்போகிறது என தவிப்பதும்...குதிப்பதும் தான் புரியவில்லை.
தாய்த்தமிழகம் இதுவரை என்ன புடம்போட்ட தங்கங்களையா அதிகமாய் தலைமையில் வைத்திருந்தது..
நினைக்கவே முடியாத கோத்ரா சம்பவத்திலிருந்து..ஒரு மதத்தின் மீதான அழித்தொழிப்பை ஆதாரப்பூர்வமாக செய்துமுடித்த..
தன்னுடைய நீண்ட காலத்திட்டத்திற்காக மெல்ல நகர்த்திய ஒருவரை நாட்டின் தலைமைக்கே வழிவிட்ட நாட்டில்..
இவர் அவ்வளவு மோசமில்லை என்பதே என் நிலை..
அவர் வேலைக்காரியாய் இருந்தார் என்பதும்..
கேசட் கடை வைத்திருந்தார் என்பதும் முதல்வர் பதவிக்கான விலக்கப்பட்ட தகுதிகளா?
ஊடகங்களும்..படிப்பறிவும் மிகுந்த நாட்டில் அவர் சட்டங்களை மீறி வந்துவிடவில்லை...
பதவியில் அவர்வந்தாலும் அதிகாரம் வேறிடத்தில் இருக்கும் என சொல்லுபவர்கள்..
தங்களுடைய சொந்த மனைவி கவுன்சிலரான போதே தான் ஆனதுபோல் செயல்படுவதை இதுவரை பார்த்ததே இல்லையா?
அய்யோ..சொத்தெல்லாம் பறிபோய் விடுமே என்கின்றீர்கள்..
இதற்குமுன்னால் பூட்டுப்போட்டு நீங்கள் காத்திருந்தீர்களா?
மக்கள் ஓட்டுப்போட்டது வேறு யாருக்காகவும் இருக்கலாம்..
மறுக்க முடியாத ஒரு கட்டத்தில் தலைமைப்பொறுப்பை கொடுப்பதும் ஆதரிப்பதும் அந்த கட்சியின் உரிமை.
நீங்கள் ஏன் பன்னீருக்காய் பாசம் காட்டுகின்றீர்கள்..
சம்பத்தப்பட்டவரே சாஷ்டாங்கமாய் விழுந்துவிட்ட போது உங்களுக்கு என்ன சங்கடம்?
அன்பின் நண்பர்களே..
அறமென்னும் விழுமியம் அரசியலில் செத்து பல காலங்கள் ஆகிவிட்டது..
ஆற அமர யோசித்தால் புதிதாய் ஒன்றும் நடந்துவிடவில்லை..
அதிகாரத்துக்கான தேடல் வழிகளில் இது ஒரு முறை..அது நடந்திருக்கிறது அவ்வளவே..
என்னவோ காலஞ்சென்ற முதல்வரின் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடியதுபோலவும்..இனி ஒன்றுமே இருக்காது என்பது போல பேசுவதும் இப்போது சரியல்ல..
மாற்றுத்திறனாளிகளின் போராட்டத்தில் நடந்ததை மறந்து போனீர்களா? மர்மத்தின் மொத்த உருவமாக மாறிப்போயிருந்த நாட்கள் மறக்கக்கூடியதா?
ஒரு ஆட்சியாளருக்கு எம்.எல்.ஏ க்கள் தயவு பதவிபெறுவதற்கு வேண்டுமானால் தேவைப்படலாம்..
ஆனால் ஆட்சி நடத்த மக்களின் ஆதரவு வேண்டும்..அது இப்போது அவர்களுக்கு அதிகம் இல்லை என்பது நம்மைவிட அவர்களுக்குத்தெரியும்..
நான்கு ஆண்டுகளோடு ஆட்சியை முடித்துக்கொண்டு போய்விடலாம் என எந்த தலைமையும் புத்தராகி போய்விடாது..
அதிகாரக்கனவுகள் அவர்களைத்தூங்க விடாது..
ஆக அவர்கள் மக்களின் மனசுக்கு காயம் வராமல் இருந்து சில நல்லதேனும் செய்யத்தான் விரும்புவார்கள்..
தடாலடியாய் மக்களை குளிர்விக்க மதுக்கடைகளை மூடினாலும் மூடுவார்கள்..
எத்தனை போராட்டங்கள்..உயிர்ப்பலிகள் கொண்ட வரலாற்றை இப்படி ஒரு கையெழுத்து முடித்துவைப்பதில் உங்களுக்கு ஏதும் வருத்தம் வருமா?
தமிழ் தமிழனென்ற பார்வையில் வைத்தாலும்..இது கொள்கையின் விரோதமொன்றும் இல்லையே..
ஊரே திட்டினால் திட்டுவதும் பகடிசெய்து இரண்டு நாளில் அடுத்த பிரச்சனைக்கு ஓடுவதும் அவர்களுக்குத்தெரியும்.
மக்களாட்சி ஒன்றும் கிரீடத்தை நிரந்தரமாக கொடுத்துவிடவில்லை..
ஹெலிகாப்டரை அண்ணாந்து கும்பிட்ட எல் வடிவ மனிதர்களை வரும் தேர்தல்கள் தீர்மானிக்கும்..
மத்திய அரசு தலையிட்டு தீர்த்து வைக்கவேண்டும் என்பதெல்லாம் குரங்கு அப்பம் பங்கிட்ட கதையாகத்தான் முடியும்..
வரட்டும்...ஆளட்டும்..
மக்களுக்கான ஆட்சியாக இருந்தால் அவர்களுக்கும் நமக்கும் நல்லது..
நண்பர்களே ...நான் இப்படி எழுதுவதால்..எனக்கு எந்த சாயமும் பூசிவிடாதீர்கள்..
நீங்கள் ஒரு பார்வையில் உங்கள் நியாயத்தை பேசியிருக்கலாம்..
நான் என் பார்வையை சொல்லியிருக்கிறேன்..
என்னால் மறுக்கமுடியாத நல்ல வாதங்களை நீங்கள் வைப்பீர்கள் எனில் திறந்த மனதோடு நான் ஏற்றுக்கொள்வேன்..
நன்றி..

செல்வா உங்கள் பார்வையின் கோணம் வித்தியாசம்தான்.நீங்கள் சொல்லியிருக்கும் காரணங்களும் சரிதான் இல்லை என்று சொல்வதிற்கில்லை.ஆனால் நிச்சயமாக அவர்களது பழைய வாழ்க்கை அல்ல அவர்கள் முதல்வர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று சொல்வதற்கு இது எனது தனிப்பட்டக் கருத்து. ஏற்கனவே ஆண்டவர்கள் மட்டும் என்ன நேர்மையானவர்களா என்ன? எல்லாம் சரிதான். ஆனால், இப்போதேனும் இப்போது ஏற்பட்ட ஒரு மாற்றத்திலேனும், இடைவெளியிலேனும் மூன்றாவது நபர், அல்லது வேறு நல்ல மாற்றம் ஏதேனும் ஏற்பட்டுவிடக் கூடாதா என்ற ஓர் ஏக்கம், எண்ணம் எல்லார் மனதிலும் ஓடிக் கொண்டுதானே இருக்கிறது. இத்தனைநாட்கள்தான் தமிழ்நாடு துண்டாடப்பட்டது. இனியேனும் நல்லவர் கையில் கிடைக்காதா என்ற ஏக்கமும் இருக்கத்தானே செய்கிறது? இத்தனை நாட்கள் ஆட்சி செய்தவர்களைச் சுற்றி ஒரு பட்டாளம் இருந்தது போல் இப்போதும் அதே எனும் போது ஓர் ஏமாற்றம் அல்லது சலிப்பு ஏற்படத்தானே செய்கிறது இல்லையா. அதுதான் பல வகையிலும் வெளியாகிறது. சரி அப்படி ஒரு வேளை இவர்கள் ஏதேனும் நல்லது செய்தால் நல்லதே! பார்ப்போம் பொறுத்திருந்து. நமக்குத்தான் பொறுத்திருந்து, காத்திருந்து பழகிப் போய்விட்டதே! இதுவரை நடந்த எல்லா ஊழல்களையும் ஏற்றுக் கொள்ளவில்லையா என்ன இப்போதும் ஏற்றுக் கொள்வோம்...
பதிலளிநீக்குகீதா
Indha karuthu neeka padum endru theriyum. Ungal ezhuthin meedhu vasagargal kondulla rasanaiyai endha vidha varumanamum indri keduthu kondeergalo endru solla vendum. Thalaivan evvazhiyo thondan avvazhi. Oozhal seidhu makkalai thavikka vidum arasiyalvadhikum, ungalukum Enna vithiyasam ? Sasikala idhai vasithal RSS Jeyamohan pol ungalukum vaaypu undu. Ezhuthalan nadunilai maradhavan aaga iruka vendum. Idhu en paarvai matum alla. TN makkalin ottu motha ennam. Neengal edharkum Madurai aravind hospital pogalam . Ungal sondha padaipai sutti katiyadharku mannikavum. Ayya😱
பதிலளிநீக்குநீங்கள் நாடகம் பிடிக்கவில்லை என்கின்றீர்கள்..
நீக்குநான்
ஒத்திகைக்கான
சிரமங்களைப்
பார்க்கிறேன்..
நீங்கள்
அதிகமாய்க்
கூச்சலிடுகின்றீர்கள்..
நான்
அந்த பாத்திரங்களின்
பரிதவிப்பைப்
பார்க்கிறேன்..
"சரியில்லை.."
"எதை சரியாய்
செய்தீர்கள்.."
பல வேடங்கள்
புனைந்து
கிழட்டுப்பருவமெய்தி
வரும்
விருதுகளுக்காய்
விசிலடிப்பீர்கள்..
ஒற்றைப் பாத்திரமேற்று
வெல்லும்போது
ஏன்
விரல் கடிக்கிறீர்கள்..
வெற்றிகளுக்கான
பாதைக்கு
ஒற்றைத்தடமேனும்
நிரந்தரமாயிருக்கிறதா
உங்களிடம்?
பெற்றவனைக்
கொன்று
பேரரசனாவனை
வரலாற்றில்
போற்றியதில்லையா
நீங்கள்?
சாணக்கியன்
என்பவன்
சரியானவன்
தானா
உங்கள் கருத்தில்?
சக மனிதனை
சக தோழனை
தவிக்கவிடாது
தலைமைப்பொறுப்பு
ஏற்றவன்
யாரையேனும்
சுட்டிவிடமுடியுமா?
வசந்த காலமல்ல
அவர்க்கெனத்
தெரிந்தும்..
வந்து நிற்கும்
மனோதிடம்
பயிலுங்கள்..
இந்த
தேசத்தில்
படிக்காததை
செய்த வேலையை
குறை காணாதீர்கள்.
அப்படி
முதல்வரால் தான்
நீங்கள்
படித்தீர்கள்..
லிங்கன்
பூர்வீகம்
அப்படித்தான்
அறிந்தீர்கள்...
வரலாறென்பது
செய்திகளின்
கிடங்கு..
காந்தி கணக்கில்
கோட்சேவும்
இருப்பான்..
செருப்புக்கும்
நாற்காலி வழங்கி
யிருக்கின்றீர்கள்..
பொறுப்புக்கு
யார்வரின் என்ன..
பொறுத்திருப்போம்.
இந்த விடயத்தில் எதிர்க்கருத்துக்கள் என்பது எதிரிக்கருத்துக்கள் போல் விமர்சிக்கப்படுகின்றது.
பதிலளிநீக்குஇந்தம்மாவை குறித்து வேலைக்காரி வீடியோக்காரி,என திட்டி திட்டியே இந்தம்மா மீதான பரிதாபத்தினை அதிகரிக்க செய்து விடுவார்கள் போல் எங்கெஙுகும் காணும் விமர்சனங்கள் தனிமனித சாடலாக இருப்பதை காணும் போது வேலைக்காரி என்றால் அத்தனை மட்டமா என எதிர்க்கேள்வி எனக்குள் வருகின்றது.
ஆள்பவருக்காக தகுதியாக இவர்கள் எதை சொல்கின்றார்கள்? ஜெயலலிதா இருக்கும் வரை அவரை நாட்டியக்காரி. நடிகை ஆடை அவிழ்த்து ஆடியவர். எம் ஜி ஆரின் சின்ன வீட்டு இப்படி அப்படின்னு எப்படி எல்லாமே விமர்சித்தார்கள். அவர் இறந்ததும் அவ செய்தவை எல்லாம் மறைந்து போனது. நாட்டை ஆள நடிகனாய், நடிகயாய் இருக்கலாம், கன்னடன் தெலுங்கனாய் இருக்கலாம், ஆனால் வேலைக்காரியாக இருக்க கூடாதாம்.
கொலைக்காரனாய் இருக்கலாம். இனவிரோதியாய் இருக்கலாம், மத துவேசியாய் இருக்கலாம் ஆனால் தமிழனாய் இருக்க கூடாதோ?
ஆளுபவர் மரணத்தில் ஏற்படும் கலவரங்களை அறிந்திருந்த நாம் ஜெயலலிதா மரணத்தில் இறுதிச்சடங்கு தன்னை வெளிப்படுத்தாமலே.... ஆளும் நிலையில் எவரும் இல்லாமலே எத்துணை அமைதியாக நடந்தது?
அரசியலை பொறுத்தவரை எந்த மனிதனும் மகாத்மா அல்ல! நாட்டின் நன்மை சமுதாயத்தேவை என சிந்தித்தால்...கடந்த கால தவறுகளிலிருந்து சசிகலா பாடங்கள் கற்றிருக்கலாம். தனக்கான தகுதியை நிருபிக்க மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கலாம்.கொஞ்சம் பொறுமையாக இருந்தால் என்ன என எனக்கும் தோன்றுகின்றது!
ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு மட்டும் அல்ல நாட்டுக்கும் ஆகாது. முதுகெலும்பை அடகு வைத்த பன்னீர் செல்வத்தை விட.. சசிகலாவால் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படப்போவதில்லை என தான் தோன்றுகின்றது.
பொறுத்திருங்கள்... இன்று திட்டி தீர்க்கும் அனைவரும்... சசிகலாயை உலக ரடசசி நீதான் எனும் ரேஞ்சுக்கு பதிவு போடும் நாளும் வரும்.
உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கின்றேன் செல்வா சார்.
நான் நினைத்தை அப்படியே அழகாக செதுக்கி இருக்கிறீர்கள் இங்கே சூப்ப்ர் பவுல் கேம் நடந்தால் என்னால் இது பற்றி பதிவு எழுத நேரமில்லாமல் போய்விட்டது ஆனால் என் மனதில் இருப்பதை அப்படியே உங்கள் பாணியில் சொல்லி இருக்கும் விதம் அருமை மாற்று சிந்தனை என்பது இதுதான்
பதிலளிநீக்குநிஷா நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் .உங்கள் பதிலும் என் பதில்தான் நடிகை நாடலாம் என்ற போது வேலைக்காரி ஆள்வது தவறு என்று பேசுவது சரியில்லைதான்
பதிலளிநீக்கு// எல் வடிவ மனிதர்கள்... //
பதிலளிநீக்குமனிதர்கள் என்பதை மட்டும் சொல்லாதீர்கள்... அது மனித குலத்திற்கே கேவலம்...
அதில் ஒருவர் தானே பன்னீரும்,சசிகலைவை விமர்சிப்பவர்களுக்கு பன்னீரில் முதுகு வளையும் நிலை புரியவே இல்லை.
நீக்குமனிதன் என்கிற சொல்லிற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள் சகோதரி... பிறகு அடியேன் புரிந்து கொள்கிறேன்...
நீக்குமனிதன் !!!!
எல்லாமே ஐந்தறிவாயிருக்க..மேம்பட்டதாய் சுய சிந்தனையோடு,ஞானமும், அறிவும் மேம்பட்டு பேச, எவருக்கும் எதற்கும் அடிமையாக இருக்காமல் ,தலை குனியாமல், முதுகு வளையாமல் தனக்கு நல்லதென்பதை மட்டும் சிந்தித்து முடிவெடுக்காமல் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்யக்கூடியவைகளை அது தனக்கு எதிராக விரோதமாக இருந்தாலும். தன்னை அழித்தாலும் நிமிர்ந்து நின்று எதையும் எதிர்கொள்பவன் மனிதன்
வரும் பிரச்சனைகளை சூழ் நிலைகளுக்கு ஏற்ப தைரியமாக முடிவெடுப்பவன் மனிதன்.
நன்மை தீமை ஆராய்ந்தறிந்து நலமானதை தைரியமாக ஊருக்கு எடுத்து சொல்ல வேண்டியவன் மனிதன்.
ஆனால் இப்படிப்பட்டவனை தேடினாலும் கண்டு பிடிக்க முடியாத படி நம் அனைவரின் மனக்கண்களும் குருடாக்கப்பட்டிருக்கின்றதே!
அங்கங்கே இப்படி இருப்பவனையும் அவன் சிறகை உடைத்திடும் அரிய பணியை நாம் செவ்வனே செய்கின்றோமே?
*********************************************************************************************
நல்லவைகளுக்கும் நன்மையானவைகளுக்கும் ஊரோடு சேர்ந்து வாழாமல் தீமைகளுக்கும் தீங்கானவைகளுக்கும், முன்னுரிமை கொடுத்து கும்பலில் கோவிந்தா போடுவதும்,அதனால் பிரச்சனை என வரும் போது இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிபவனாகவும், நமக்கு உதவிய அடுத்தவன் ஆபத்தில் இருக்கும் நேரம் அவஞுக்கு தானே..? நமக்கென்ன என வேடிக்கை பார்த்து கொண்டே... அதுவே தனக்கு வந்தால் ஐயோ ,, அம்மா,,, குத்துதோ குடையுதே என்பவன என் பார்வையில் மனிதனே இல்லை சார்.
தன் காரியம் நிலைக்க குழைக்கும்பிடு போடுவதும்... ஆகாசம் வரை உயர்த்துவதும், கடவுளாய் கட்டவுட் வைப்பவனும் என்றும் என் பார்வையில் மனிதனல்ல.
பிள்ளை பாலுக்கு அழ...விக்கிரகங்களுக்கும் கட்டவுட்களுக்கும் பாலாபிஷேகம் செய்பவனும் மனிதன் என சொல்லும் அருகதை அற்றவன்.
தன் அயலான் பட்டினி கிடக்க... தானம் எனும் பெயரில் கோயில்களுக்கு வாரிவழங்குபவனும் வாரி இறைப்பனும் மனிதனே அல்ல.. ஐந்தறிவு மிருகத்துடன்கூட ஒப்பிட முடியாதவன்.
நம்மாட்கள்.. நடப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டும், தன்னுள் இருக்கும் சக்தியை உணராமலும் விதண்டாவாதங்களும் விவாதங்களும் வியாக்கினங்களும் விமர்சனங்களும் செய்தே... உள்ளதையும் நொள்ளை சொல்லி சொல்லி தன் தலையில் மண்ணள்ளி தாமே போட்டு கொள்வார்கள்.
பழசு மட்டும் ஒழுங்கா என்கிற கேள்வியால் இதை ஏற்றுக்கொள்ளும் மனம் எனக்கு வரவில்லை. வரலாறு காணாத ஒரு மெரினா எழுச்சியைக் கண்ட நாம் அதன்வழி புதிய நேர்மறை வழிகளில் இறங்குவதற்கான வழிகாணுதல் நலம்.
பதிலளிநீக்குAyya, ungal karuthu ellam saridhan. Adharkaga padikkadha periya periya arivaligalai indha ammavudan oppidadheergal. sasikala padikavillai endru yar sonnadhu? Jayalalitha Vin arugil irundhu , pasaraiyil paditha paadam? Jayalalitha seyyadha nalla kariyathai ivargal seivargala??? OHO.......padhavikku varamale kodi kodiyyay kabaleegaram seidhavar padhaviku vandhu Katra paadathai seyalaaka pogiraargal. Thamizhar endra muga saayam veru...avargal poda villai; vambadiyaga neengal potu vidugireergal. Avargal seidha velaiyai yarum kurai koora villai; aatramaiyil veli varum varthai adhu. Koduthu than parpome enbadharku idhu onnum kuchi mittay alla......kudimai aatchi. Ungalai pondra ezhuthalargalum, podhuvudaimaiyalargalum sarikatuvadhai parthal Nadu Enna dhan aagapogiradho endra kavalai varudhu. Sariyana nerathil, sariyana konathil velipadutha vendiya neengal vidhyasamaga ezhudha vendum endra nokkil ipadi ezhudhinal....?
பதிலளிநீக்குNisha Ammaiyar avargaley...... Manidhan enbadharku nalla vilakam thandheeragal. Idhil endha vari sasikala kuku porundum? Appo ini manidhan aalapovadhillai endru solgireergala??? Alladhu indha amma panneerai oppitaal nimirndha manidha thanmai ullavar engireergala? Panneerai valaipavar yar endru therindhuma ivvaru koorugireergal?
பதிலளிநீக்குஇவ்வளவு நாள் ஏதோ அடிமையாக இருந்தோம்...இனி ஏன் இப்படி இருக்க வேண்டும்?
பதிலளிநீக்குEllaathayum accept pannitu iruntha kalam matrapadavendum...ithuve sariyana tharunam...time to change
Idhu badhil Arvin. Edho nallavargalu pol support panranga
நீக்குவித்தியாசமான பார்வை தான்...
பதிலளிநீக்குAyya...indru num Thamizh natil nadakum kuzhapangalai parthal idhai yen ezhudhinom endru thondravillaiya??? Evvalavu mazhungi poyy vitom naam?? Mazhunginalum paravayillai; thurupidithu allava poyy vitom?? Vedhanai. ... Yematriviteergal.😩
பதிலளிநீக்கு