வெள்ளி, 24 மார்ச், 2017

சுழன்றும் ஏர்...

தனக்கென தான்ய வயல்கள் இல்லாத நாடு அழிந்துவிடும் என்கிறான் மாவீரன் அலெக்ஸாண்டர்..



இந்திய ,தமிழக விவசாய நிலங்களின் நிலையும்,,
விவசாயிகளின் பரிதாபத்துக்குரிய போராட்டங்களும் ஊடகங்களில் சரியாக பேசப்படாமல் போயிருக்கலாம்..
ஆனால் அதன் விளைவுகள் மிகக்கடுமையான பஞ்சத்தை நாம் எதிர்கொள்ளப்போவதை மறந்து இணைய வயல்களில் கடலை போட்டுக் கொண்டிருக்கிறோம்..

போராடுபவர்களிலேயே ஒதுக்கப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள் விவசாயிகள்.
வெயிலும்,பனியும் கொளுத்தும் மோசமான தூசிகள் நிறைந்த தலைநகரின் சாலைகளில் கோவணத்துடன் அவர்கள் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுது நடத்தும் போராட்டத்தை நொறுக்குத்தீனியுடன் செய்திகளில் நாம் கடந்து போவோமெனில்
நமக்கு வாய்க்கரிசி கூட கிடைக்காது.


சேற்றோடும்,நாற்றோடும் போராடி நாற்றமெடுத்த உடம்போடு செத்துவிழும் அவனின் கண்ணீர் ஆயிரமாயிரம் அணுகுண்டுகளுக்கு சமம்.
சமாதிகளில் காட்டும் ஆர்வம்..
சின்னங்களுக்கு போராடும் அவதி..
தலைநகர் டெல்லிக்கு ஏதோ டவுன் பஸ்ஸில் போவது போல் போய் தலைசிறந்த வழக்கறிஞர்களை வைத்து சட்ட நுணுக்கம் பேசும் அறிவு..

அரிசிச் சோற்றை அள்ளித் தின்னும் போதெல்லாம் வரவேண்டாமா..
வயல்களின் சாவுகள்?

மக்கள் இன்னும் எத்தனைக்குத்தான் போராட வீதிக்கு வருவது?
ஜல்லிக்கட்டுக்கு போராடி அடிவாங்கி வீடுவருமுன் நெடுவாசல் அழைத்துவிட்டது..
மீனவர் படுகொலை..சேலத்து உருக்காலை..
இதோ போக்குவரத்து ஓய்வூதியர்களின் உள்ளிருப்பு போராட்டம்..
ரேசன் கடைகளில் இருப்பில்லை..
நாங்களும் அழுதும்,பகடியாகவும்,பதறியும் போராடிப்பார்க்கிறோம்.
போராடிப் போராடித்தான் எல்லாம் வருமெனில் பொல்லாத அரசு எதற்கு?
கடிதங்கள் எழுதுவதற்கும், எதிர்க்கட்சிகளை உளவு பார்ப்பதும், அறிக்கைகளில் முடிவதுமேவா அதிகாரத்தின் வேலைகள்.
சுதந்திரமடைந்த இத்தனை ஆண்டுகளில் அடிப்படைப் பிரச்சனைகளைக் கூட தீர்க்கமுடியாத உங்களின் ஐந்தாண்டுத்திட்டங்கள் யாருக்காக?

பாலைவன எகிப்தும்,இஸ்ரேலும் விவசாய தன்னிறைவு பெறுகிறது..
1008 விண்கலங்கள் ஏவும் நாட்டில் விவசாயம் பொய்க்கிறது...

என்ன செய்து சரிசெய்யப்போகிறோம்.இனி இவர்களை நம்பி ஒரு பயனும் விளையப்போவதாய் தெரியவில்லை..

விவசாயம் படித்த இளைஞர்களை ஒன்றுசேருங்கள்..
வயல்களின் வரப்புகளை அகற்றி கூட்டு விவசாயங்களை வளர்த்தெடுக்கலாம்.
மண்வளத்திற்கேற்ப பயிர்கள் தேர்ந்தெடுக்கலாம்...
பொதுநல நோக்குள்ள
பல நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து விவசாயத்தை மேம்படுத்தலாம்.
பருவமாற்றங்கள்..
உரங்களில்லாத விளைச்சல்,நீருக்கான ஆதாரங்களை பராமரித்தலும் உருவாக்குவதும் விவசாயிகளின் கைகளிலேயே வைத்துக்கொள்ளலாம்.
சொட்டு நீர் விவசாயம்..
பாரம்பரிய விவசாய முறைகளை புதிய அறிவியலுடன் இணைத்தல்.. என முயற்சிகளை நாமே செய்யலாம்.

இனியும் கடன் தொகை தள்ளுபடிக்கும்,விவசாயம் பொய்ப்பதற்கும் யாரிடமும் கை ஏந்தி நிற்க வேண்டாம்...

விளைச்சலின் விலையை விவசாயிகளே வைக்கட்டும்..
அதிகாரங்களை நீங்களே செய்யுங்கள்..

வயல்களின் வறட்சியைப் பார்ப்பதும்...செத்து விழ அல்ல நம் நிலங்கள்..

போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு வந்து கூடிப் பேசுங்கள்..
வயல்களை இணையுங்கள்..
நீர் வரும் வழிகளை கண்டறியுங்கள்..
படித்த துடிப்பான அடுத்த சந்ததிக்கு விவாசாயத்தை பயிற்று வையுங்கள்..
வரப்பில்லா வயல்வெளிகளில் பறக்கட்டும் கூட்டுறவின் வெற்றிக்கொடி..
நீங்கள் வெற்றி பெறப் பிறந்தவர்கள்.
விளைவித்துக் காட்டுங்கள்...

5 கருத்துகள்:

  1. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பதிலளிநீக்கு
  2. Ayya, ovvoru varthaiyum madhipu migu sattaiyadi varthai. Ponnezhuthukkalal porithu maanava chelvangaluku paada thittamaga inaika vendiya thoguppu idhu. Vivasayam illadha nadu azhiyum enbadharku num nadu dhan satchi. Niraiya idangalil vivasayiyin vayitrerichalai unarndhu kanneer vidugirom. Idhai vasithal ippadiyum manidhargal irukirargale endra arudhalal thun vayalai kaana selluvan Vivasayee.

    பதிலளிநீக்கு
  3. சொல்வதெல்லாம் உண்மைதான். நடத்துவது யார்?
    இனி நடக்கவிடலாமோ இதுபோன்ற விசயங்களை

    பதிலளிநீக்கு