சனி, 25 மார்ச், 2017

சின்னவள்.....நெய்தலின் விமர்சனம்..

சின்னவள் ..நூலுக்காய் புதுவை செல்வக்குமாரியின்...விமர்சனம்..


அன்பு செல்வாவிற்கு,
         
 ஓர் அப்பனின் சில்லுணர்வை உன்
கவிதையில் கண்டே ன். ஒரு மகளின்
அதிகாரத்தைத் தன் தோளில் சுகமாய் சுமந்து திரியும்  நல்தகப்பனின் நுண்ணுணர்வுகள் கவிதை முழுக்கத்
தெறிக்கின்றன.' சின்னவள் சிரிக்கிறாள்'
என்ற உனது முதல்பிரசவம் சுகப்பிரசவமாய் வந்தருப்பது கண்டு
பெருமிதம் அடைகிறேன்.
     சொற்களால் இறுக்கிப்பிடிக்காமல்,
இயல்பாக நெகிழ்வோடு உழுத ஏர்க்கவிதை உனது. ஒவ்வொருவரியிலும்
அன்பின்நுரைகள் ததும்பி வழிந்து கிடப்பதைக் காணமுடிகிறது.
       காலமும் சமூகமும் பெண்ணை குறிப்பாக பெண்குழந்தைகளை வல்லூறுகளாய் பிடித்துச் சிதைக்கும் இவ்வேளையில் பெண்குழந்தையின்
பேரன்பை,பேருணர்வை, பெருமதிப்பை
எளிய இனிய கவிதைகளால் நடவு செய்த
அன்பு விவசாயியே!  உன் கவிதை காலத்தின் தேவையை உணர்த்தி நிற்கிறது.
" வரிசையாய் விருந்துண்ட
நடுவீடு....
கூடுகள் கலைவதுபோல்
வீடுகள் கலைந்தன.. என்ற இக்கவிதை
இனணயத்தமிழ்க்கவிதையில் முதல்
பரிசுபெற்ற கவிதைதானே! அங்கேயே நீ
தேர்ந்த கவிஞன் என நிரூபித்துவிட்டாய்.
லூசு அப்பாவெனச் சின்னவள் சொல்லும்போது லூசாக மகளிடத்து மொத்தமாகத் தொலைந்து போகின்ற
அப்பன்களுக்கான கவிதையாகப பார்க்கிறேன்.
    கான்கிரீட் வயலில்
     பிளாஸ்டிக் தொட்டியில்
      பிடுங்கி எறிந்த ரோசா.. செடிக்காக
கோப்ப்பட்ட மகளின் அடிவலி இன்பவலியாக மாறுவது உன் போன்ற
அப்பன்களால்தான் சாத்தியம்.
   திருத்தொண்டனின் கவிதை மகளின் திருத்தொண்டனாக மாறிய வித்தையை
வர்ணஜாலமாக்க் காட்டி நிற்கிறது.
  சின்னவளின் கோபம் மருதாணியாக சிவந்து கிடக்கிறது எனபது கூடுதலாக
கவிதையை சிவக்கச்செய்கிறது. பழைய கதைகளை,வலிகளை,நினைவுகளை கதைக்கும் எல்லா அப்பன்களும்
மகளிடம் சொல்லும் போது தன் சுமை
இறங்குவதை உணர்வான். மகளிடத்து எல்லாம் சொல்லியும் மகளிடம் கொண்ட பிரியத்தை மட்டும் சொல்லமுடியாத
வரிகள் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
      எக்கவிதையும் புதியதென்றோ,அலுக்கிறதென்றோ கடந்துவிடத் தோன்றாமல்,நம் அருகில் வந்து வருடுவது கவிதைகளின் பெருஞ்சிறப்பு. அறுபத்துநாலு பக்கங்களில் முப்பதற்கும் மேற்பட்டகவிதைகள் மின்னூலில் வார்க்கப்பட்ட புதுமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள். இந்நூல் உறவுகளிடையே உலா வரவேண்டிய அருமையான நூல்.
ஒவ்வொரு வீட்டின் வரவேற்பரையை
அலங்கரிக்கும்  என்பதில் ஐயமில்லை.


9 கருத்துகள்:

  1. இனிய வாழ்த்துகள் சகோதரர். கவிதைகளைப் படிக்க வேண்டும் நான். புத்தகம் வேண்டும் சகோதரர்.

    பதிலளிநீக்கு
  2. மனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வா..... தொடரட்டும் உங்கள் புத்தகப் பயணம்.....

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு