வீறுகொண்டும்..சலசலத்தும்.
மணலெடுத்த பள்ளங்களில்
மனம்பதைத்து தடுமாறி..
சொட்டிய துளிகளே
ஆதிமூலமாய்..
படுத்து
தவழ்ந்து
நடந்தோடி.
அணைகள்
மேடுகள்..
தாண்டிக்குதித்து..
அழுக்குகள் கழுவி..
கழிவுகள் சுமந்து
சுயத்தினை மறந்து.
விலங்குகள் தணிக்க
வேண்டுவோர் குளிக்க..
விதைகளின் உரசலில்
பட்டதும் விளைந்தது
பாதியாய் களைகள்..
துடுப்புகள் கிழிக்கும்
வலியினை மிஞ்சும்
ஒரு கடத்தலின் மகிழ்ச்சி
மரங்களும் மிதக்க
வெம்மணல்ப் பயணம்..
கடல்சேரும் கையளவு
நீரில் கலந்திருக்கும்
முத்தத்தின் வாசமும்..
முத்தத்தின் வாசமும் மிச்சத்தின் நிலையும்!
பதிலளிநீக்குமொத்தப் பொருளும் முத்தத்தின் வாசத்தில்.
பதிலளிநீக்குமுத்தத்தின் வாசம் மனதில் சொச்சமாய் படித்த பின்னும்....
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்கு