விண்மீன்களின்
பள்ளிக்கூடத்தில்
இப்படித்தான்
சொல்லிக்கொடுப்பார்கள்..
பூமியின்
பரப்பில்
பகலிலும்
மின்னுவது
பெண்கள் ..
நதிகளின்
மாநாட்டில்
நன்றித்தீர்மானம்..
அவைகளுக்கு
பெண்களின்
பெயர்
சூட்டியமைக்கு..
கடவுள்கள்
கவலைப்படுவார்கள்
அம்மாக்களை
படைத்த
பின்னே
மனிதன்
கண்டுகொள்வதில்லை..
பூக்களின்
சபையில்
பெருத்த
சந்தேகம்...
வாசம்
வந்தது
பூவையர்
தொட்டதாலா..
பூஜையில்
வைப்பதாலா?
உலகின்
உன்னதம்
என்னென்ன
இருப்பினும்
பெண்ணுக்குப்
பின் தான்
வரிசையில்
நிற்கும்...
பெண்களின்
தினத்தில்
நான்
சொல்லும்
வாழ்த்துகள்
முன்னிலை
வகிக்கும்..
பள்ளிக்கூடத்தில்
இப்படித்தான்
சொல்லிக்கொடுப்பார்கள்..
பூமியின்
பரப்பில்
பகலிலும்
மின்னுவது
பெண்கள் ..
நதிகளின்
மாநாட்டில்
நன்றித்தீர்மானம்..
அவைகளுக்கு
பெண்களின்
பெயர்
சூட்டியமைக்கு..
கடவுள்கள்
கவலைப்படுவார்கள்
அம்மாக்களை
படைத்த
பின்னே
மனிதன்
கண்டுகொள்வதில்லை..
பூக்களின்
சபையில்
பெருத்த
சந்தேகம்...
வாசம்
வந்தது
பூவையர்
தொட்டதாலா..
பூஜையில்
வைப்பதாலா?
உலகின்
உன்னதம்
என்னென்ன
இருப்பினும்
பெண்ணுக்குப்
பின் தான்
வரிசையில்
நிற்கும்...
பெண்களின்
தினத்தில்
நான்
சொல்லும்
வாழ்த்துகள்
முன்னிலை
வகிக்கும்..
பெண்களின் பெருமை சொல்லி அமுது ஊட்டும் வரிகள்... வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குநல்ல கவிதை.
பதிலளிநீக்குஅனைத்து மகளிருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.
பெண்ணின் பெருமை - அருமை.
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குபகலிலும் மின்னுபவள் பெண்! பூக்களைத் தொட்டு வாசனை கூட்டுவதும் பெண்ணே!! நல்ல கவிதை. நல்ல கருத்துக்கள். நன்றி..
பதிலளிநீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குதங்கள் கவிதை ஒன்றினை விரைவில் வெளியிடவுள்ள எனது மின்நூலுக்கு அனுப்பிவையுங்கள். விபரமறிய...
https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html