நான் ஒன்று சொல்வேன்.....
வகைகள்
அன்பின் சக்திக்கு
(51)
அனுபவங்கள்
(22)
கட்டுரை
(41)
புதுக்கவிதை
(144)
விமர்சனம்
(21)
வீடியோ
(4)
வியாழன், 13 ஜூலை, 2017
சன்னல் நகரங்கள்....
அந்தப் பெருநகரை
இரவில்
கடக்கும்போதெல்லாம்
மேலும் படிக்க »
புதன், 12 ஜூலை, 2017
எத்தனை நாள் அகதி வாழ்க்கை?
ஒரு மனிதனின் ஆகப்பெரிய சோகம் தனித்திருப்பது.
மேலும் படிக்க »
செவ்வாய், 11 ஜூலை, 2017
நிலவே...மலரே...
நீரடிச்சா
நீர் விலகும்
நீயடிச்சா
நான் சிரிப்பேன்...
மேலும் படிக்க »
வெள்ளி, 7 ஜூலை, 2017
அழியுமோர் சமூகம்..
திரையரங்கங்கள் மூடல் என்றவுடன் பொங்கி எழுகிறார்கள்.
மேலும் படிக்க »
வியாழன், 6 ஜூலை, 2017
முத்தமே...
முத்தங்களைப்பற்றி
எழுதவில்லையெனில்
மேலும் படிக்க »
புதன், 5 ஜூலை, 2017
வார்த்தைகளிடம் வாழ்க்கை
வார்த்தைகளிடம்
விடப்பட்ட
வாழ்க்கை..
ஆதியில்
சொற்கள்
வேதமாயிருந்தன.
பாடலென
காதலென
பரிவென
வர்ணங்களின்
பளபளப்பில்
மின்னித்திரிந்தன...
ஊடலின்
பொழுதுகளில்
பேசிய
வார்த்தைகளே
தூதுவர்களாய்
துணை நின்றன்..
கூடலின்
சாமங்களில்
தலையணைக்குள்
சிக்கி
தத்தளித்தன...
நீண்ட இரவின்
இருளில்
நட்சத்திரங்களாய்
இருந்தவை
அவைகள்..
இதயம்
வாயென
இரண்டு
பிறப்பிடங்கள்
இருந்தாலும்
கண்களுக்கும்
அதை
பிரசவிக்கும்
பேறிருந்தன..
கவிதைகளென
திரிந்த
காலங்கள்
சொற்களின்
பொற்காலம்..
வார்த்தைகள்
முகவரியாய்
இருந்ததும்
உண்டு...
சொல்லா வார்த்தைகள்
தொண்டைக்குழிக்குள்
சிக்கி
மண்டைப்பரப்பெங்கும்
வெடிப்பது
அதன்
வேடிக்கை..
கெஞ்சுதல்
மிஞ்சுதல்
எல்லாம்
வார்த்தைளால்
வடிப்பவை.
கிரகிக்க
யாருமின்றி
எதிரொலி
ஆகும்போது
வார்த்தைகள்
பிறழ்ந்து
போகின்றன.
செவிகளை
மூடும்போது
மொழி
மனமுடைகிறது...
வார்த்தைகளின்
அழுகை..
ஆகப்பெரிய
வருத்தம்..
அற்றநீர்க்
குளத்தினில்
அமிழும்
வார்த்தைகள்
செத்துப்போவதே
இல்லை...
ஒற்றைத்துளி
நீருக்கு
எப்போதும்
ஜனிக்கும்...
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
மொபைல் பதிப்பைப் பார்க்கவும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)