சின்னச்சின்னதாய் எழுதிப்பார்த்துவிட்டு மறந்துபோய் விடுவேன்.
பள்ளிப்பாடக்காலங்களில் ஜீவாமன்றத்தில் படித்தது அதிகம்.
தி.மு.க.வின் தீவிர அபிமானியான அப்பா ஒருபோதும் என் படிப்பில் குறுக்கிட்டதில்லை.
அம்மாவுக்கு எழுத்தறிவு கிடையாது..
கால்சட்டை காலங்களில் உள்ளூர் கூட்டங்களில் கவிதையென வாசிக்கும் போது அதுவரை அமர்ந்திருக்கும் அப்பா நான் வாசிக்க ஆரம்பித்தவுடன் விறுவிறுவென எழுந்து போய் விடுவார்.
கோபமா வரும்..
வாசித்து வீடுவரும் போது அம்மா வாசலில் இருப்பார்..
அப்பா திண்ணையில் தூங்குவதாய் நடிப்பார்..
வேகமாக வீடு வரும் ரகசியம் அம்மாவை எழுப்பி கேட்க வைப்பதற்கென்று புரியும் போது அத்தனை கோபமும் வடிந்து விடும்.
பேருந்து நிலைய லாட்டரிக்கடைகளில் வேலை பார்க்கும் போது ரிசல்ட் வரும் காகிதங்களில் பின்புறம் எழுதி எழுதி தூரப்போட்டு விடுவேன்.
இலக்கணம் இருக்காதெனும் தாழ் உணர்ச்சியும்,எழுதுவதால் யாதொரு பணப்பயனும் விளையாதெனும் நினைப்பிலும்.
அவளை சந்தித்த போது கவிஞர் என்ற பெயரும் புத்தகம் ஒன்றோ இரண்டோ வெளியிட்டிருந்தாள்.
கலை இலக்கிய பெருமன்றம் என்னை தூக்கிவைத்து கொண்டாடியது..
எந்த காலமும் இதனை நான் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
வயதின் காதல், வாழ்க்கைக்கான தேடல் என காலங்கள் கடந்து..
பிள்ளைகள் இருவர் தோளுக்கு வளர்ந்த பின்னே மீண்டும் எழுத்து வேதாளம் ஏறிவிட்டது முதுகில்..
எதில் எழுதுவது,எங்கே வாசிப்பது...
என் ராசி நான் அனுப்பும் கவிதைகளை வாரமலர் கூட பிரசுரம் செய்யாது.
போன ஆண்டின் ஓர் நாள் வலைப்பதிவர் சந்திப்பென முடிவெடுத்து போட்டிகள் உண்டு ...ஆனால் வலைப்பூ வைத்திருக்க வேண்டும் என்ற கட்டளையும் போட்டார்கள்.
இதற்கு முன்னே என் தொழில் சம்பந்தப்பட்ட வலைப்பூ இருந்த நான்..
எனக்கு வலைப்பூ உண்டென சொல்லிவிட்டேன்..
பெயர் கேட்டார்கள் நான் ஒன்று சொல்வேன்
எனச்சொல்லி விட்டு
அவசர அவசரமாக அந்தப்பெயரில் வலைப்பூ தொடங்கினேன்.
தட்டச்சு செய்வதில் தொடங்கி,வலைப்பூ வடிவமைப்பு வரை அறியாத நான் அரிச்சுவடி பயிலும் மாணவனாய் முழித்துக்கொண்டிருந்தேன்..
வலைப்பூவின் முன்னோடி திரு.நா.முத்துநிலவன்,மு.கீதா,ஜெயா அக்கா,வைகறை,கஸ்தூரி ரங்கன்,என பலர் என்னை ஊக்குவித்ததில் மெல்லக்கரை ஏறினேன்.
தேக்கி வைத்திருந்த அணையின் நீர் திறந்துவிடப்பட்டதும் அடித்துக்கொண்டு வருவதுபோல் எல்லாம் வெளியே வர ஆரம்பித்து விட்டது..
வலைப்பதிவர் சந்திப்பின் தமிழ் இணைய கல்விக்கழக உலகளாவிய புதுக்கவிதைப்போட்டியில் முதல் பரிசென்பதும் நான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி என்றால் என் கவிதையை துணை வேந்தர் முழுவதுமாய் வாசித்தது அதைவிட பேரானந்தம்..
எனக்கான பரிசை சின்னவள் வாங்கியதும்..சிலருக்கேனும் நான் அறியப்பட்டதும் இந்த நாளில் இருந்துதான்..
தொடர்ந்து என் எழுத்தின் பால் அக்கறை கொள்ளும் பலரில் ஒரு ஞானத்தகப்பனாய் இருக்கும் திருமிகு.நா.முத்துநிலவன் அய்யாவுடன் வயது பாராது அத்தனை வாக்குவாதம் செய்திருக்கிறேன்..மிக இயல்பாய் என்னை தட்டிக்கொடுக்கும் அந்த அன்புக்கரங்களுக்கு என் நேசமும் வணக்கங்களும் எப்போதும் உண்டு..
வலைத்தளம் எழுத வந்த இந்த ஓராண்டில் அத்தனை அற்புதங்களை சந்தித்திருக்கிறேன்..
நல்ல தோழமைகள்..
திண்டுக்கல் தனபாலன்,
மு.கீதா,அமிர்தா தமிழ்,நிசாந்தி,கஸ்தூரி ரங்கன்,மைதிலி,நிலாபாரதி,கிரேஸ்,விசு,ஆல்பி,மதுரைத்தமிழன்,தில்லையகம் துளசி,கீதா,திருச்சி இளங்கோ அய்யா.பொன்.க..
இன்னும் எழுத எழுத நீளும் பட்டியல் இந்த வலைப்பூவால் ஆனது.
உங்களுக்கும் பல செய்திருக்கலாம்..ஆயினும் நான் அடைந்தவைகளை சொல்லியாகவேண்டிய அவசியமிருக்கிறது..
எழுதி எழுதி தூக்கி எறிந்து கொண்டிருந்த நான் வீதிக்கூட்டத்தில் வாசிக்கத்தொடங்கி புதுச்சேரி வரை போய்ச்சேர்ந்திருக்கிறேன்.
தமிழ்மணம் என்னும் திரட்டியில் 807 தரவரிசையில் இணைக்கப்பட்ட நான் இன்று 17ல் இருக்கிறேன்.
தரவரிசைக்கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லை எனினும் அது சிறிய மகிழ்ச்சியே...
இப்படியாக...
என் வலைபூ வாழ்வினை தொடங்கி வைத்த அத்தனை உள்ளங்களுக்கும்,என் எழுத்தினை வாசித்து கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கணிந்த அன்பினை செலுத்துகிறேன்...
இது எனது பரிசு பெற்ற கவிதையின் இணைப்பு...
http://naanselva.blogspot.com/2015/09/blog-post_27.html?m=1
நன்றி!
அன்புடன்
செல்வக்குமார்.
வாழ்த்துகள் பல.....
பதிலளிநீக்குமனமுவப்புடன் வாழ்த்துகிறோம்
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துக்கள் நண்பரே! மேலும் பல கவிதைகள் படைக்க வாழ்த்துகள் !
பதிலளிநீக்குத ம 2
வாழ்த்துகள் கவிஞரே தொடர்ந்து எழுதுங்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குதொடர்ந்து கவி புனையுங்கள்
Oru varudam...poita.....manathai niraikum ninaivalaikal valthukal
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா...
பதிலளிநீக்குதொடர்ந்து கலக்குங்க...
கவிஞரே காவியம் படைக்க மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமனம் நிறைந்த வாழ்த்துகள் செல்வா... தொடர்ந்து பல வருடங்கள் எழுதி சாதனைகள் பல புரிய எனது வாழ்த்துகள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே.. தொடர்ந்து எழுதுங்கள்..
பதிலளிநீக்குMeera.Selvakumar Ayya, neengal innum "thiruda" vazhthukkal. Ezhudhi ezhudhi idhayam thirudubavar neengal dhane!! Vazhga valarga!!👍🙆
பதிலளிநீக்கு