ஞாயிறு, 23 அக்டோபர், 2016

வீதிக்கு ஒரு கவிதை

ஆணுக்கு மீசையெனில்
பெண்ணுக்கு
நாணமென
எவன் சொன்ன
அடையாளம்?




உயிர்கொண்ட
ஜீவன் நாங்கள்..
உருவங்களில்
என்ன கண்டீர்?

ஆண்குழந்தை
அலங்கரித்துப்
பூச்சூட்டி...

பெண்பிள்ளை
வேலை செல்ல
அனுமதிப்பீர்..

ஆணென்றும்
பெண்ணென்றும்
யாமில்லை
அவமதிப்பீர்..

அர்த்த நாரீசன்
அவனென்று
பூஜிப்பீர்..
அலியென்று
எம்மீது
கல்லெறிவீர்..

எம் பால்
பெற்ற
பிள்ளையல்ல
நாங்கள்...
உங்கள்
அன்பால்தான்
பிறந்தோம்
அறிவீரா?..

பருவங்களில்
உருவங்களில்
குரல்களில்
எம்மைக்
கண்டடைந்து
விலகி நடந்தோரே..

டெல்லிப் பேருந்தில்,
பள்ளிகளில்,
அமிலங்கள்
எறிந்து
பொசுங்கிய
மலர்களுக்கு.
பொல்லாச்சமூக
அவலங்களுக்கு...

பொத்திக்
கொண்டிருந்த
நீங்கள்
ஆண்களெனில்..

அச்சம் நாணம்
மடமென
இன்னும்
அடங்கிப்போவதே
பெண்மையெனில்....

நல்லது..
நாங்கள்
இப்படியே
இருக்கிறோம்..


4 கருத்துகள்: