புதன், 22 மார்ச், 2017

மாய விலங்கு...

கட்டமிட்ட கைலியை
மடக்கிக் கட்டியிருந்தார்..



சிலநாள் தாடி..
கைகளை சுருட்டிய
கரங்களுடன் சட்டை..

கூடவே வந்தவனுக்கு
இருபதுக்குள்
மேலிருக்கும் வயது..
சாயமிழந்த ஜீன்ஸ் அணிந்தவனின்
மேல்ச்சட்டையில் விஜய் இருந்தார்...
பெரியவரின் இடதுகைக்கும்
வாலிபனின் வலதுகைக்கும்
மாட்டியிருந்தது விலங்கொன்று..

வருத்தத்தின்
சாயலொன்றும்மில்லாமல்
சாலைக்கடை ஒன்றில் தேனீர் அருந்த..
ஆண் காவலரிருவரும்
பெண் காவலரொருவரும்
பக்கமிருந்தனர்..
கூடும் நீதிமன்றத்தில் காட்சிப் படுத்திவிட்டு
கடும்பகலும் ,சில காத தூரமும்
பயணித்து ஒப்படைத்து
கைச்சாத்து பெறவேண்டும்
காவலர் பொறுப்பு..

கடும்வெயிலின் கனப்பு
கனத்த காலணிவழியே
ஊசியென நுழைய
காகிதங்கள் விசிறியாகிறது..

வெயிலின் வெறுப்பு
துளியுமில்லை கைதிகளிடம்..

யாரிதில்  கைதியென
வாதிடும் கவிதைக்கு
சொல்லவேண்டும்
எம் இயந்திர வாழ்க்கை..

6 கருத்துகள்:

  1. உண்மைதான்
    காவலர்கள்தான்
    சூழ்நிலைக் கைதிகள்

    பதிலளிநீக்கு
  2. "கடும்வெயிலின் கனப்பு
    கனத்த காலணிவழியே
    ஊசியென நுழைய
    காகிதங்கள் விசிறியாகிறது..." என
    கத்திரி வெயிலை
    மீட்டுப் பார்க்க வைக்கின்றீர்

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
  3. ஒவ்வொருவரும் ஒவ்வொருவகைக் கைதிகள்!

    பதிலளிநீக்கு
  4. அருமை! வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் சூழ்நிலைக் கைதிகள்தான் இல்லையா

    பதிலளிநீக்கு
  5. Kannal parthadhai vedikkaiyaga kanamal miga azhagaga engaluku solliya vidham arumai. Kelvi ketu mudithirukkum idam miga arumai. Paniyil kaidhiyai vida kavalar dhan soolnilai kaidhi. Adhai ungaluke urithana nadaiyil nagaichuvaiyodu sindhika vaipadhal indha veyil theriyamal yosanai megathin keezh nadandhen. Arumai

    பதிலளிநீக்கு