கூட்டமாய் பிழைக்க
நாங்கள்
ஆடோட்டி
வரவில்லை...
கூட்டிக்கொடுத்தலெனும் கொடுஞ்செயல்கள்
கொண்டதில்லை.
குள்ளநரி
மூளை கொண்டு
கொள்ளையராய்ப்
போனதில்லை..
உள்ள
பொருளெல்லாம்
உள்ளொதுக்கிக்
கொண்டதில்லை..
உச்சிக்குடுமியில்லை..
ஊடோடும்
நூலுமில்லை.
மண்ணோடு
வாழ்ந்திருந்தோம்.
மமதையேதும்
மனதிலில்லை..
புண்பட்ட
ஓர்நிலையும்
வந்ததிங்கு
உங்களாலே.
நீ வந்து
விருந்துண்ண
நாங்கள்
சமைக்கவில்லை..
தீ வெந்த
குடிசையிலும்
தீண்ட
சில பொருளிருக்கும்.
நீ
வந்து போனாலோ
வெறும் சாம்பல்
பறந்திருக்கும்..
ஓட்டுக்கும்
நோட்டுக்கும்
தீட்டோடா
யாம் தந்தால்..?
நாட்டுக்கு
மூத்தவர்கள்
சொந்தக்கால்
கொண்டு
நடப்பவர்கள்..
ஊர்ப்பணத்தில்
கொழுத்தவரே..
கொழுப்பேறி
பழுத்தவரே..
வீடேறி
நீ வந்தால்
புனிதம்
உன்னைச்சேருமன்றி..
எமக்கெந்த
மயிருமில்லை..
வாராதே
எங்கள் பக்கம்..
வம்பிழுத்து
இன்னும் பார்த்தால்
தீராது
உந்தன் துக்கம்...
அருமை கவிதை...
பதிலளிநீக்குVali
பதிலளிநீக்குVali
பதிலளிநீக்குசீண்டப்பட்டதால் கவி வரிகள் இன்னும் சிறப்புற்றிருக்கின்றன.
பதிலளிநீக்குவாராதே எங்கள் பக்கம். சரியான எச்சரிக்கை.
பதிலளிநீக்குதார்மீக கோபம் கொப்பளிக்கும் கவிதை
பதிலளிநீக்குஉள் கனன்ற கோபம்,,,/
பதிலளிநீக்குI would highly appreciate if you guide me through this. Thanks for the article…
பதிலளிநீக்குspoken english material
Learning Books for spoken english
Learning Spoken english materials
Learning Spoken english from home
Home study English
English home study pack
English training books
Spoken English Study Pack
Spoken English training pack
Spoken English self study