புதன், 3 ஆகஸ்ட், 2016

தடம் புரள்கிறதா தடம்?

அன்பின் சக்திக்கு,

எப்படியேனும் தமிழ்ச்சமூகத்தை நிமிர்த்திவிட விகடன் ஆரம்பித்திருக்கும் தடம் என்னும் இதழை நானும் தொடர்ந்து வாசிக்கிறேன்.

ஒவ்வொரு இதழிலும் வாசகனை சூடாக்கும் ஒரு காரியத்தை செய்துவிடுகின்றனர்.

ஒருவேளை இது அவர்களின் வியாபார உத்தியாகக்கூட இருக்கலாம்.

கடந்த இதழில் மனுசபுத்திரன் என்பவரை தேசியகவி ஆக்கக்கூறி அழுதிருந்தார் ஒரு  அறிவாளி.

அவர்களின் பேட்டிதான்..

ஆனால் அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் அப்படியே அச்சிடும் விகடனின் பார்வை புரியவில்லை.

மறுப்புகளும்,வெறுப்புகளும்,அதிகமாக தேடிப்போய் வாங்க வைத்துவிடும் விளம்பர தந்திரமாக இருக்குமோ என்ற ஐயம் வருகிறது.

இந்த இதழிலும் வழக்கம் போல ஜெயமோகனின் நேர்காணல்...

சக எழுத்தாளர்களை தன்னை நக்கீரனாய் நினைத்து...நனைத்து காயப்போட்டிருக்கிறார்.

அவர்களில் சிலர் எழுதுவது  எழுத்தே அல்லவாம்..
தமிழ்ச்செல்வன்,ஆதவன் தீட்சண்யா என சீண்டியிருக்கிறார்...

ஒரு எழுத்தாளனின் எழுத்து பிடிக்கவில்லை எனில் வார்த்தைகளில் வதைப்பது வன்முறை..

உங்கள் அளவுக்கு அவர்கள் எழுத்தாலும், திரையுலகாலும் சம்பாதித்திருக்க மாட்டார்கள் தான்...

அதுசரி...
ஜெயமோகன் அவர்களே

எழுத்தின் எண்ணிக்கையா எழுத்தாளனை கவுரவிக்கிறது?

ஒற்றை வரியில் எழுதிய

' இரவில்
வாங்கினோம்.
விடியவே இல்லை'

என
நின்று கொண்ட
அரங்கநாதனின் வேறு எந்த கவிதை நமக்குத்தெரியும்?

வெயிலோடு போய் என்ற கதை கவர்ச்சியில்லாதது தான்....கவுச்சியும் இல்லாதது அல்லவா?

ஆயிரம் மயிர்கள் காணக்கிடைத்தாலும் ஆதவன் தீட்சண்யாவின் மயிர்கள் மனசுக்குள் வளர்ந்து விட்டதே என்ன செய்ய?

நாலு பேருக்குள் கூட பேசக்கூடாத விசயமல்லவா ...நீங்கள் தடத்திற்கு அருளியது?

இந்த ஈரோட்டுக்கிழவனை இன்னும் எப்படியெல்லாம் சீரழிக்கப்போகிறார்களோ என்ற பச்சாதாபம் பிறக்கிறது.

90 தாண்டிய வயதிலும் மூத்திரப்பையோடு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பேசித்திரிந்த அந்த பெரியாரால் தான் இவ்வளவுக்கேனும் சுதந்திரம் வந்ததை மறந்துவிட்டா பேசுவது?

அவரின் நடத்தைகளில், வாழ்க்கையில் குறைகளை கண்டுபிடிக்கும் அறிவாளிகளே..கருத்துகளில் என்ன குறை கண்டீர்கள்?

வைக்கம் போராட்டம் பற்றிய வரலாற்று அறிவை ஊட்டுகிறார்.
எங்கோ ஒரு மாநிலத்தில் தானே என நில்லாமல் தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு யார் போகச்சொன்னது பெரியாரை?

நீங்கள் சொல்வது போல அவர் பெரிய வீரரல்ல என்பது பாவம் காந்திக்கு புரிந்திருக்கவி்லையா?

ஈழப்போராட்டத்தை ஏதோ சிறிய கலவரம் போல் எளிதாக கடந்துபோகும் அவரின் வார்த்தைகள் வலிக்கிறது.

இலங்கையின் போராட்டம் அவர் சொல்வதுபோலவே என்றால் பதுங்கு குழிகளுக்குள் மறைந்தே போன குழந்தைகளை...மார்பகம் அறுபட்டு உயிர்க்குழிக்குள் சொருகிய துவக்குக்கட்டைகளை என்ன சொல்வது...இசைப்பிரியா என்ன செய்தார்?
பாலச்சந்திரன் செய்த பாவம் என்ன...

வேண்டாம் அவர்களைப் புதைத்த இடங்களிலும் பாஸ்பரஸ் குண்டுகள் வீசாதீர்கள்?

பிராமண எதிர்ப்பிற்கு நீங்கள் காணும் புதிய கோணம் ...ஆச்சர்யம்..

ஆனாலும்
அறமெழுதிய மதிப்பிற்குரிய எழுத்தாளர்...

தன் மதிப்பான நேரத்தை மகாபாரதக்கதைகள் எழுதி மக்களுக்கு ஞானம் சேர்க்கலாம்..
திரைப்படங்களுக்கு அறிவான வசனம் தீட்டலாம்...
அவர் விருப்பம் போலவே நாள் கணக்கில் இசை பருகலாம்..

ஆம் சக்தி...
அவர் பேசுவதை விட எழுதுவதில் நன்மை அதிகம்....

நல்ல எழுத்தாளரின் எழுத்து மட்டும் பேசினால் போதாதா?

அன்புடன்.
செல்வக்குமார்.










5 கருத்துகள்:

  1. ஒரு எழுத்தாளனின் எழுத்து பிடிக்கவில்லை எனில் வார்த்தைகளில் வதைப்பது வன்முறை..

    உண்மை
    உண்மை

    பதிலளிநீக்கு
  2. தடம் இலக்கிய இதழ் போல நினைக்கப்பட வேண்டும் என்னும் வியாபார யுத்திதான், இந்த (3ஆம்)இதழில் வெளிவந்திருக்கும் ஜெயமோகனின் நேர்காணல். அபத்தக் களஞ்சியம். சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள் செல்வா!
    ஆதவன் தீட்சண்யாவின் இந்தப் பதிவையும் படியுங்கள் - எரிச்சல் வளருங்கள் -
    http://aadhavanvisai.blogspot.in/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  3. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
    எனக்கு ஏனோ ஜெமோ பிடிப்பதில்லை...

    பதிலளிநீக்கு
  4. Selvakumar Ayya, Ippodhu dhan therigiradhu...Dheekshanya pondra arivu poraaligal ezhudhiya varalarugalai than paada puthagathil vaithullargal endru. Periyyya unmaiyai siru vishayamaga, Avar parvaiyin konam maarupatiruka vendum ena ninaithu Ivar ezhudhuvadhil ethanai unmaiyum, valiyum maraindhu irukiradhu endru ivarukkum theriyamala irukum? Ungal anugumurai arpudham. Thalaipileye aayiram unnmaigal.

    பதிலளிநீக்கு