செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பட்டிமன்ற தேவதைகள்..

நீங்கள்
பட்டிமன்றம்
முடிந்ததும்
கிளம்பிவிடுவீர்கள்..
அல்லது
பாதியில்
கிளம்பவும்
வாய்ப்பிருக்கிறது..

நேற்றைய
வடமாவட்ட
குக்கிராமமொன்றின்
கூழூற்றும்
நாளின்
இரவில்
பழையபாடலா?
புதியபாடலா?
தலைப்பில்
பேசிவிட்டு..

மோட்டலின்
ஒற்றைதோசையுடன்..
என்
வீட்டுவழி
கடந்த
பேருந்தில்...

வாசல்கொடியில்
காயவைத்த
உள்பாவாடை
சுருண்டு காய்கிறது..

இரவு
ஏழுமணிக்குள்
தூத்துக்குடி
அருகில்
கொடைவிழா...

வீட்டின்
முன்னேற்றம்
ஆண்களாலா?
பெண்களாலா?
பேசித்
தீர்க்கவேண்டும்
நேரத்தை...

தூக்கம் மறைத்து
உட்கார வேண்டும்
பிளாஸ்டிக்
சேரில்
தீர்ப்பு வரும்வரை..

ஆணெனப்படுபவர்
மூன்று முறை
தம்மடித்து
தாகம்
தீர்த்து வருவர்..

வாய்பிளக்கும்
கொட்டாவி
அடக்கி..

மாலையில்
வைத்த
மல்லிகை
சிதறாமல்
எதிரணி
கவனித்து..

சேலை
பறக்காமல்..

சீட்டியடிக்கும்
குடிமகன்
சிரிக்கவைத்து..

புரியாத
பாடல் சிலவும்,

புளித்துப்போன
நகைச்சுவையும் சொல்லி...

நடுவரைக்
கெஞ்சி,
நடத்துனரை
வாழ்த்தி

நள்ளிரவு நகர...
கைவரும்
கவர்பிரித்து
பேருந்துக்கென
பிரித்தது போக
பத்திரப்படுத்தி...

கூட்டமாய்
பஸ்ஸுக்கு
நிற்கையில்
கோழி
எழுந்துவிடும்...

பிள்ளையின்
படிப்பு
எப்படியிருக்கிறது?
அவர்
என்ன உண்டார்?

அரிசியுண்டா?
காயிருக்கிறதா?
பிள்ளை கேட்ட
பிரியாணி
இன்றேனும்
வாய்க்குமா?
மருத்துவர்
பார்க்கலாமா?

தூக்கம்
தொலைத்த
பரிசெனக்கிடைத்த
கண்களின்
கருப்புக்கு
என்ன செய்ய?

அலைபேசி
வழியே நடக்கும்
வாழ்க்கை..

அத்தியாய்
பூக்கும்
நட்புக்கள்..

கோடிகள்
புழங்கும்
நட்சத்திர
வாழ்க்கையில்லை...

முந்நூறில்
தொடங்கி
மூவாயிரம் செல்லும்
வாழ்வில்..
கிசுகிசுக்கள்
கொஞ்சமில்லை...

ஆள் அழகில்லை...
பாடும்போது
ஆடவில்லை...
சரியாவே
பேசவில்லை.
அவனோடு மட்டும்
பேசுகிறாய்...
இலக்கிய செறிவில்லை..
இன்னும்
எத்தனையோ..

சொல்லிவிட்டுப்
போங்கள்...
எங்கள்
கவலை
எங்களுக்கு..

பட்டிமன்ற
கலாரசிகப்
பெருமக்களே..

தலைப்புகள்,
நடுவர்கள்
மேடைகள்
மாறி
என்னவாகிப்
போகிறது..

மாறாதிருக்கும்
எங்கள்
வாழ்க்கை
வரமா?
சாபமா?

தீர்ப்பு சொல்லுங்கள்
தூக்கம் வருகிறது.












9 கருத்துகள்:

  1. வாழ்க்கை மாறுகிறதோ இல்லையோ ஏதோ நம்மையும் அறியாமல் அவ்வாறான நேரங்களில் மனது சற்றே மகிழ்ச்சியடைகிறது அல்லவா? அவை ஏற்றுக்கொள்ளலாமே?

    பதிலளிநீக்கு
  2. பட்டிமன்றங்கள் இப்பொழுது வெட்டிமன்றங்களாகிவிட்டன.கவர் வாங்குவதாலென்னவோ மக்களை கவர கவர்ச்சியாக பேசுகிறார்களே தவிர கருத்தாக பேசவில்லை

    பதிலளிநீக்கு
  3. ஒரு பெண் பட்டிமன்ற பேச்சாளர் சந்திக்கும் அவலங்களை கவிதையாக சொல்லி கண்களை கசிய வைத்துவிட்டீர்கள். அருமை!

    பதிலளிநீக்கு
  4. உள்ளத்தை உறுத்தும்
    அருமையான பா வரிகள்



    குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
    http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. அவரவர் பாடு அவரவர்களுக்கே என்பதை அருமையாய் உணர்த்தி விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  6. Meera selvakumar Ayya, idharku mun ungal kavidhaigalai vasithadhu illai. En thozhiyin moolam thangalin kavidhai patri arindhukonden. Nan oru pattimandra pechalar endra muraiyil thangalin kavidhaiku nan tharum mark 200/100 . Engal vedhanai yarum ariyadhadhu. Padithadhum en kannil nandriyin kanneer. Unmai unmai unmai. Indha vazhkai satrey vedhanai kondadhu endralum engal manadhin kadhal idhil dhan ulladhu. Ini nan ungal theevira rasigai. Ovvoru kavidhaiyaiyum vasipen. Nandri Ayya!

    பதிலளிநீக்கு
  7. Sir nan pechalar illai. Anal oru aluvalagathirku work panna selgiren. En senior madam enaku ungal blog I'd koduthanga. Unmaiyileye ungal kavidhai pattimandra dhevadhaigaluku matumalla, veetai kadandhu panipuriyum athanai pengalukum porundhum. Sandhega parvai konda en kanavar konjam en meedhu anbai pozhiya arambithu irukirar. Thangalin kavidhai thandha puridhal idhu. Pengal kastangalai pittu vaitha ungaluku athanai pengalum nandri koora vendum. Vazhga valamudan. Innum ezhudhungal sir.

    பதிலளிநீக்கு
  8. பட்டிமன்ற பேச்சாளர்களின் கவலையான மறுபக்கம் சொன்ன கவிதை. பாராட்டுகள் செல்வா.

    பதிலளிநீக்கு