திங்கள், 15 அக்டோபர், 2018

இருக்கிறது...
ஒரு சமூகம்
ஒரு நாகரீகம்
ஒரு மொழி
ஒரு நகரம்
ஒரு மனிதன்

எப்போதெல்லாம்
தன்னை
புதுப்பித்துக்கொள்கிறது...?சமூகம்
ஒரு தலைவனால்
புரட்டிப்போடப்படுகிறது.

நாகரீகத்திற்கு
புதிதாய்
ஒரு நதி வேண்டியிருக்கிறது.

மொழிக்கு
புலமையின் அளவுக்கு
பொருள் தேவை அதிகம்.

நகரத்துக்கு
ஒரு பேரழிவு
அவசியமாயிருக்கிறது...

மனிதனுக்கு
ஒன்று மட்டுமென
ஏதுமில்லை..

எங்கேனும்
ஒற்றை மந்திரத்தில்
யாவையும்
மாற்றிவிடக்கூடுமா?

இருக்கிறது.

இதயத்தோடு
இறங்கி
உணர்ச்சிகளை
ஏது
உருவாக்கும்..?

எது ஒரு மனிதனை
சத்தமில்லாமல்
புரட்டிப்போடுகிறது?

இருக்கிறது.

சாதியை
மதத்தை மறந்து
எது
கூட வைக்கிறது.

தூரத்திலிருந்தாலும்
எது
தொலைவைக்குறைக்கிறது?

ஆலயத்தைத்தாண்டி
வீதிகள் கடந்து
எந்த தெய்வங்கள்
நமக்காய்
காத்திருக்கிறது?

நேசத்துக்குரியவள்
வைத்திருக்கும்
மலர்களின்
வாசத்தை
மறக்க வைக்கும்
ஒரு
வாசமெங்கேனும்
இருக்கிறதா?


தேசங்கள் கடந்து
மொழிகள் கடந்து
கண்களின்
முற்றத்துக்கு
எது வந்து வந்து
வட்டமடித்து
அறிவுப்பெருக்கம்
செய்ய வைக்கிறது..

இருக்கிறது..

பாதகமேயில்லாத
ஒரு
பின்விளைவை
எந்த
சேர்க்கை
தந்துவிட முடியும்?

இருக்கிறது...

ரதமென்பது
நூல்களின்
கற்றை வடத்தால்
இழுக்கப்படுகிறதெனில்...

நூல்களே
உற்சவர்களாக
எங்கு இருந்து விடக்கூடும்...


எல்லாவற்றிற்கும்
ஒற்றை பதிலொன்றுண்டு...

அது
புத்தகம்...

புத்தக கண்காட்சி..

புதுகை
தன்
அறிவை
கூர்தீட்டும்
சீர்மிகு
புத்தகக்கண்காட்சி...
இருகை கூப்பி
யாசிக்கிறது...

வாசிப்பதற்காய்...3 கருத்துகள்: