புதன், 3 பிப்ரவரி, 2016

சுவாசமே...








அன்பின் சக்திக்கு,
நேற்று தொடங்கியது போல் இருக்கிறது..
இது 100 வது பதிவு.
எனக்குத்தெரிந்ததை எழுதுகிறேன்.
தெரியாதது தேடி ஓடுகிறேன்.
புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம் என்னை எழுதத்தூண்டியது இணையத்தில்.
ஆரம்பத்தில் என்னை எழுதவைத்த கலை இலக்கியப்பெருமன்றம்.
எப்போதும் எழுது எழுது என தூண்டிக்கொண்டிருக்கும் உன் அம்மா..கவிஞர் சுவாதி.
என் எழுத்துக்களை சிலாகிக்கும் நட்பு வட்டம். வலைப்பூ எழுத ஆரம்பித்தபின் கிடைத்த அபூர்வ தோழமைகள்.
நீ, சூர்யா உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.
இந்த 100இல்  நான் முடிந்தவரை வீணான பதிவுகளை எழுதவில்லை என்ற திருப்தி இருக்கிறது.
எழுதியே ஆகவேண்டிய கட்டாயம் இல்லை..ஆனால் பின்னூட்டங்கள் மீண்டும் எழுதத்தூண்டுகிறது..
பின்னூட்டமிட்டு என்னை வளர்த்தெடுக்கும் அன்பு உள்ளங்களுக்கு என் தனி அன்பு..
இருக்கட்டும் சக்தி..
பள்ளிவாழ்க்கை மட்டுமேயான என் கல்வி முடிந்தபின்..
பாடங்கள் தாண்டியும் எது என்னை துடிப்புடன் வைத்திருக்கிறது.?
எல்லாப்பிரச்சனைகளையும் தாண்டி எது என்னை மூச்சுவிடச்செய்து கொண்டிருக்கிறது?
கொஞ்சமேனும் தமிழ் வார்த்தைகளை எது வழங்கியது?
எந்த சந்தேகமும் வேண்டாம்.
வாசிப்பு மட்டுமே என்னை வசிக்கவைத்திருக்கிறது.
புத்தகங்கள் பாராத நாள்...
துக்கநாள்.
வாசிக்கவேண்டும் சக்தி..
என்ன வேண்டுமானாலும் வாசி.
நீ வாசிக்கும் புத்தகங்கள் தான் உன்னை யோசிக்க வைக்கும்.
நூல்கள் இல்லாத வீட்டை கற்பனை செய்தும் பார்க்காதே.
புத்தகம் படிப்பது பற்றிய ஆயிரம் கருத்துகள் இருக்கலாம்.
மிக எளிமையாய் இதையும் சேர்த்துக்கொள்.
வாசிப்பு இல்லாமல் சுவாசிப்பதும் பயனில்லை..
முதலில் படி..
பின்
தேர்ந்து படி.
உங்கள் தலைமுறைக்கு படிக்க நிறைய இருக்கிறது..
பள்ளிப்பாடங்கள் தாண்டியும் படியுங்கள்.
படிப்பொன்றே
காணும் கடவுள்..


அன்புடன்.
செல்வக்குமார்.

23 கருத்துகள்:

  1. வாழ்த்துகள்...
    நூறுக்கு அருகில் இன்னொரு சுழியத்தை இணைத்து பார்க்க ஆவல்.எண்ணிக்கைக்காக எழுதாமல் எண்ணங்களை வெளிப்படுத்த மட்டுமே எழுதும் உங்களை எப்படி பாராட்டினாலும் தகும்.

    பதிலளிநீக்கு
  2. முதலில் 100ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் செல்வா. (கவனிக்க 100வது அல்ல, 100ஆவது) இன்னும் சில ஆண்டுகளில் சில ஆயிரம் பதிவுகளில் முதல் பத்துக்குள் வருவீர்கள்..வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.
    ஆனால் செல்வா, படிப்பும் கடவுளும் ஒன்றல்ல. படிப்பு கண்களைத் திறக்கச் சொல்லும்.கடவுள் கண்களை மூடசொல்லுகிறாரே(??)ஆகவே, பரமனைவிடவும் உயர்ந்தது படிப்பு என்று இனிமேல் சொல்லுங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. 100க்கு வாழ்த்துகள் செல்வா. 100 வது பதிவு நல்லதொரு கருத்தை முன்வைத்தமைக்கும் வாழ்த்துகள். வாசிப்பு! வாசிப்பு மிகவும் குறைந்துவரும் வேளை இது. கல்விசார்ந்த பாடங்கள் தவிர வாசிப்பு விரிவடைய வேண்டும். புத்தகங்கள் மிகச் சிறந்த நண்பர்கள் என்பது காந்தியின் வார்த்தைகள். அது வாசிப்பு அனுபவம் உடையவர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள். நீங்கள் உட்பட அதுதான் இங்கு வெளியாகியுள்ளது.

    100 பல்1000 மாகப் பெருகிடவும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி..அநேகமாக என் எல்லாப்பதிவுகளுக்கும் உங்கள் பின்னூட்டம் இருக்கிறது...உங்கள் அன்புக்கு மீண்டும் நன்றி...

      நீக்கு
  4. 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள் செல்வா சார்!
    வாசிப்பு குறித்த நல்ல கருத்து!வாசிப்பை நேசிப்பவர்கள் அதிகம் யோசிக்க மாட்டார்கள்! நன்று!
    த.ம

    பதிலளிநீக்கு
  5. 100 விரைவில் 200ஐத் தொடட்டும் நண்பரே வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  6. அருமை,நல்ல தகப்பன் ,நல்ல தோழன் ,நீயே நல்ல குரு.

    பதிலளிநீக்கு
  7. ஒரு சதம் - ஆஹா!
    வாழ்த்துகள் சகோ!!
    நூறு சதம் காண்பீர்கள்
    வருவேன் வாழ்த்த அப்பொழுதும்
    மகிழ்ச்சியாய்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா....நீண்டநாள்களுக்குப்பிறகு தங்கள் வருகை உவகை அளிக்கிறது..

      நீக்கு
  8. வாழ்த்துக்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்
    தங்களின் எழுத்துலகப் பணி பல சாதனைகளைப்
    படைக்க வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி..நண்பரே..தங்களின் பின்னூட்டம் மிகுந்த மகிழ்வைத்தருகிறது..

      நீக்கு
  9. //உங்கள் தலைமுறைக்கு படிக்க நிறைய இருக்கிறது..
    பள்ளிப்பாடங்கள் தாண்டியும் படியுங்கள்.
    படிப்பொன்றே
    காணும் கடவுள்..//

    சிறப்பான சிந்தனை.

    100-ஆவது பதிவு - பாராட்டுகள் செல்வா... மேலும் பல பதிவுகள் உங்கள் பக்கத்தில் வெளியிட வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. நூறு ஐநூறாகி ஐநூறு ஆயிரமாகி வளரட்டும். மென்மேலும் வளர வாழ்த்துகள். நல்லதொரு கருத்துடன் 100 வது பதிவு அமைந்தது.

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள் சகோ, தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  12. நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் ஐயா..தங்கள் எழுத்துப் பயணம் மேலும் வெற்றிப் பெற்றுத் தொடர என் வாழ்த்துக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு