செவ்வாய், 5 செப்டம்பர், 2017

பிங்க் நிறத்திலொரு பட்டாம்பூச்சி

பிங்க்
நிறத்தொரு
பட்டாம்பூச்சி..




பூக்களுக்கெல்லாம்
வாசம்
கொடுத்துப்
பறக்கிறது...

ம்
என்னும்
ரீங்கார
ஓசையில்
வென்றுவிடுகிறது
இதுவரை
உலகம்
இசைத்த
ராகங்களை..

படபடக்கும்
விழிகளே
இறக்கைகளாக
பரிணமிக்கின்றன..

அடர்வண்ண
பிங்க்கின்
நிறத்து
சிறகுகளில்
எழுதிக்கிடக்கிறது
இதிகாசங்களை
மிஞ்சும்
இலக்கியக்
குறிப்புகள்..

நந்தவனத்து
சக்கரவர்த்தினியாய்
அது
பறக்கும்
பாங்கில்
பயந்து
வழிவிடும்
வானப்பாதைகள்.

பரந்தவெளியில்
பறப்பவை
யாவும்
காதுகுடையும்
இறக்கையுடவை..

இது
மனதைக்குடையும்
மர்மத்தின்
சிறகு..

கடவுளின்
தேசத்து
கடவுச்சீட்டு
சுமந்து
திரியும்
அந்த
பட்டாம்பூச்சியை
இந்தவெளியில்
நீங்கள்
பார்த்தீர்களா?

இப்போதெல்லாம்
நான்
தேடிக்கொண்டிருப்பது

பட்டாம் பூச்சியை
அல்ல...
பின்னாலேயே
போன
என்
இதயத்தத்தான்..







18 கருத்துகள்:

  1. வாவ் பறந்த இதயம் விரைவில் கிடைக்கட்டும்....அருமை

    பதிலளிநீக்கு
  2. வெகுநாள் கழித்து வலைப்பக்கம் வந்து, நெஞ்சையள்ளும் கவிதை தந்து உயிர்ப்பித்தமைக்கு நன்றி செல்வா! அப்படியே அந்த வண்ணத்துப் பூச்சிக்கு ஒவ்வாத பெயிண்ட் அடித்தது யாரென்றும் எழுதுங்கள்!

    பதிலளிநீக்கு
  3. அருமை! ரசிக்கும்படியான வரிகள்! அந்த பிங்க் பட்டாம் பூச்சியின் பின்னால் உங்கள் இதயம் சென்றதில் வியப்பில்லை!!!

    பதிலளிநீக்கு
  4. பட்டாம்பூச்சி திரும்பி வந்தால் இதயமும் பின்னாலேயே வந்துவிடும்! அல்லது பட்டாம்பூச்சியின் நினைவை நெஞ்சில் இருத்திக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  5. பிங்க் வண்ண பட்டாம்பூச்சி... கூடவே சென்றுவிட்ட இதயம்! வாவ்....

    அருமை நண்பரே.

    பதிலளிநீக்கு
  6. "நந்தவனத்து
    சக்கரவர்த்தினியாய்
    அது
    பறக்கும்
    பாங்கில்
    பயந்து
    வழிவிடும்
    வானப்பாதைகள்.".....

    கவிதையில் தமிழ்ப்பெண் சிரிக்கின்றாள் கவிஞரே.....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் !

    இது
    மனதைக்குடையும்
    மர்மத்தின்
    சிறகு..

    கடவுளின்
    தேசத்து
    கடவுச்சீட்டு
    சுமந்து
    திரியும்
    அந்த
    பட்டாம்பூச்சி

    இயல்பான அழகு வரிகள் மனம் சொக்கிப் போகிறது

    பதிலளிநீக்கு
  8. பலருக்கு இது போன்ற நிகழ்வினை எதிர்கொண்டிருப்பர்.

    பதிலளிநீக்கு
  9. கவிதை அழகு , எளிமையான நடை பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. இப்படி ஏடாகூடமாக எழுதினால் அந்தப் பட்டாம்பூச்சியே, தன் இதயத்தைத் தொலைத்திருக்கும் உங்கள் கவிதை வரிகளில் வழியும் கள்ளின் சுவையில் சோக்கிப்போய்....!!!((ஏன் , பட்டாம்பூச்சி பிங்க் நிறத்தில் இருக்கும் போது அது தேனை விடுத்து கள்ளினை நுகர்தல் பிழையோ?!?))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கள்ளின் சுவை அறியேன் நேசத்தின் கவியில் சொக்கினேன்

      நீக்கு
    2. கவிதைக்குள் கவிதையா?? நன்றி டைம்&ஃபேட்

      நீக்கு
  12. பட்டாம்பூச்சிகள் தேனை மட்டுமே ருசிக்கின்றன பல பூக்களின் இதயத்தை உடைத்து...

    பதிலளிநீக்கு

  13. அடர்வண்ண
    பிங்க்கின்
    நிறத்து
    சிறகுகளில்
    எழுதிக்கிடக்கிறது
    இதிகாசங்களை
    மிஞ்சும்
    இலக்கியக்
    குறிப்புகள்..


    வாவ்...

    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு