ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

அவர் தனித்து நிற்கட்டும்..

மக்களே....
உங்கள் தலைகளில் நீங்களே அடித்துக்கொள்ளுங்கள்.

யாரெல்லாம் கிங்காக வாய்ப்புக்கொடுத்திருப்பதாய் நினைக்கவைத்திருக்கிறோம்.

என்ன சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்..

அரசியல் எத்தனை கேவலமாக..

அய்யா...சமூக நலக்கூட்டணிகளே.

இனியும்..இவரின் பின்னே அலையாதீர்கள்..
இந்த தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை..அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்..

அவர் தனித்தே நிற்கட்டும்.தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவராகவும்,
கிங்மேக்கராகக்கூட இல்லாமல் கிங்காகவே நினைத்துக்கொண்டிருக்கும் இவர்கள் போன்றவர்கள் தான் முதலில் களையெடுக்கப்
படவேண்டியவர்கள்.

அரசியலில் அரைநூற்றாண்டுக்கும் மேலே அனுபவம் பெற்றவர்களே இனியும் நீங்கள் இவர்வீட்டில் காத்துக்கிடப்பது உங்கள் வரலாற்றின் கருப்பான பக்கங்களாய்தான் இருக்கும்.

தவளை தன் வாயாலே கெட்டிருக்கிறது...அப்படியே விட்டுவிடுங்கள்..
அரசியல் பேரங்களுக்காக ,பல வசதிக்காக சொல்லியிருக்கலாம்..எப்படியிருந்தாலும் விட்டுவிடுங்கள்...

ஒருவேளை அப்படி கிங் ஆனால்.
விடுங்கள்
தமிழகத்தின் தலைவிதி..

தலைவிதி அப்படியிருக்குமானால் மக்களே உங்களுக்கு என் ஆழ்ந்த நன்றிகள்..

9 கருத்துகள்:

  1. தமிழகத்தின் தலைவிதி என்னஆகிறது என்று
    பார்ப்போம் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. கூட்டம் கண்டதும் போதையாகி விடுகிறது! அதனால் பயனில்லை என்பதை உணர்வார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அந்த கடவுளே வந்தாலுமே நம் மக்களை அரசியல் என்னும் முதலை வாயில் சிக்கியவரை காப்பாற்ற இயலாது..!!! ஐயா..

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம் நிறைய பேர் இருக்கிறார்கள் தானே ராஜா என்று...

    பதிலளிநீக்கு
  5. தள்ளாடுபவரால் தனித்து நிற்க முடியாதுய்யா? அதனால் அவர் ஒரு ஆட்டம் போட்டுவிட்டு கடைசியாக ஒரு துணையை தேடுவார்

    பதிலளிநீக்கு
  6. நாளைய முதல்வா்களை திரையரங்கங்களில் தேடும் நிலை மாறும் வரை இந்த அவலம் தொடரும்.

    பதிலளிநீக்கு
  7. தமிழகத்தின் தலைவிதி மாறாது. ஏன்? மக்கள் மாயாபஜாரிலிருந்து விலகாத வரை, நல்ல தலைவரைத் தேர்ந்தெடுக்காதவரை, நல்ல தலைவர் உருவாகும் வரை புரட்சி செய்வோம் என்று மக்கள் புரட்சி செய்யாதவரை எதுவுமே மாறப்போவதில்லை. ஒற்றையா இரட்டையா விளையாட்டுத்தான் இல்லை இங்கி பிங்கி பாங்கி விளையாட்டுதான்...

    பதிலளிநீக்கு
  8. ஓட்டு வங்கிக்கு பலம் சேர்க்க நினைத்து வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் கூட்டத்தாரை நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே ! அவர்களுக்கு எங்கே போயிற்று ?

    பதிலளிநீக்கு