திங்கள், 1 பிப்ரவரி, 2016

அடக் கடவுளே....

அன்பின் சக்திக்கு,

ஒருமுறை கிருபானந்த வாரியாரிடம் ஒரு கடைக்காரர் கடையில் என்ன படம் மாட்டலாம் என்றாராம்...
அதற்கு வாரியார்..
என்ன படம் வேண்டுமானாலும் மாட்டு ..
ஆனால் கலப்படம் செய்துமட்டும் மாட்டாதே என்றாராம்.

ஆனால் சக்தி..
இன்று கடைக்காரர் நினைத்தாலும் கலப்படம் இல்லா ஒரு பொருளையும் விற்க முடியாது.

மிகவும் கேவலமான,
அருவருக்கத்தக்க மனித விலங்களோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

மிளகின் ஊடே அந்திமந்தாரை விதைகள்..
கடுகோடு நாயுருவி நஞ்சு விதைகள்..

எதிலெல்லாம் கலப்படம் என ஆராயப்புகுந்தால்,

அம்மா...

இந்த தேசத்தில் கலப்படம் இல்லாத எந்தப்பொருளும் இல்லை.

என்ன ஒரு மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தெரியுமா?

நல்லகுடிநீர் என வாங்கும் அடைக்கப்பட்ட நீர் சுத்தமானது கிடையாதாம்.

அரிசியில் பிளாஸ்டிக் கலக்கிறார்கள் என்றபின் சோற்றைப்பார்க்கும் போதெல்லாம்..பயமாய் இருக்கிறது.

கலப்படங்கள் ஒருபுறம் என்றால்... கலப்படமிலாத விஷங்களும் தான் விற்கிறார்கள்..
கொய்யமிட்டாய் என்னும் விஷம் குழந்தைகளை குறிவைத்தே விற்கப்படுகிறது..

ஓராயிரம் நம்மாழ்வார்கள் வந்தாலும் முடியாது போலிருக்கிறது.

எத்தனை விஷ உரங்களில் விளைவதைத்தின்றுகொண்டிருக்கிறோம்.

விழிப்புணர்வு வந்ததாய் நாம் நம்மை ஏமாற்றிக்கொள்கிறோம்.
நாளுக்கு நாள் பெருகும் வீதியோர,விரைவு உணவுகளை என்ன சொல்வது.?

கண்முன்னே கண்டதைப்போட்டு வறுத்துத்தருவதை தின்றுவிட்டு...
என்ன பேசுவது விழிப்புணர்வு பற்றி.?

சின்னவயதில் ,என் காலத்தில் எல்லாம் மாறிவிடும் என்ற பேராசை இருந்தது.
இப்போதெல்லாம் அது நடக்காது என்றே சுய இரக்கம் கொல்கிறது சக்தி.

என்ன வாழ்க்கை?
என்ன சமுதாயம்?

கண்ணுக்கு முன்னே ..நம் தேசம்..கண்ணிருந்தும் குருடராய் மக்கள்..

புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒரு மயிரும் விளையப்போவதில்லை.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது தேசம்...?
சூரியகாந்தி எண்ணெயிலிருந்து,மருந்து வரை மக்கள் நலத்தை நாசமாக்கும் கும்பல்,துணை போகும் அரசிலிருந்து,அதிகாரிகள் வரை..

எது தடுத்துக்கொண்டிருக்கிறது..
நம் வாழ்வை மீட்கும் போராட்டத்தை.?

கூட்டணிக்காகவும்,ஆட்சிக்காகவும் அலைந்துகொண்டிருக்கும் அரசியல் கட்சிகளே...
அடுத்தடுத்த தேர்தல்களில் செத்தவர்களின் வாக்குகளை நீங்கள் நிறைய போட்டுக்கொள்ளலாம்...

முடியாது சக்தி,கடவுள் என்ற ஒருவன் நினைத்தாலும் ,அவனும் இறந்துதான் படுவான்.

இனி கடவுளையும்,கட்சிகளையும் நம்பக்கூடாது?

நமக்கான உணவையும்,உரிமையும் நாமேதான் அடைய வேண்டும்.

உரமில்லா ஒரு முருங்கை வளர்த்து ஆரம்பிக்கலாம்.
மாற்றவேண்டியது மண்ணிலிருந்து தொடங்க வேண்டியிருக்கிறது.

அரசு வேண்டுமானால் வின்கலம் அனுப்பட்டும்..
நாம் மண் கலங்களுக்குத்திரும்புவோம்.

அரசியல்,கட்சி,மொழி, எல்லாம் பிழைத்துக்கிடந்தால் பார்க்கலாம்.

ஆம் சக்தி..உங்கள் இளைஞர் கண்கள் விழிக்க வேண்டும்.

இப்போது சீனாவில் காற்று விற்கிறார்களாம்.
நாமும் அதை காசுகொடுத்து வாங்கவேண்டிவரும்.

அடக் கடவுளே..

அன்புடன்.
செல்வக்குமார்.

13 கருத்துகள்:

  1. கலப்படம் அற்றப்பொருள் என்ற ஒன்று இந்த உலகில் இல்லாமல் போய்விட்டது....

    காற்று காசு கொடுத்தா... ரைட்டு....

    பதிலளிநீக்கு
  2. மிகவும் ஆதங்கமான ஆவேசமான ஒரு பதிவு மனக்கஷ்டங்களையும் கவலைகளையும் நாட்டு நடப்புக்களையும் கொட்டித்தீர்த்த ஒரு பதிவு ஒரு வரியில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் (( மயிர் என்று உள்ளது ))
    இன்றய நிதர்சனம்
    நாம் விழித்துக்கொள்வோம்
    நன்றியுடன் நண்பன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு முஸம்மில்...
      உங்கள் மென்மையான மனம் புரிகிறது...

      சில மாடுகளுக்கு சூடு போடத்தான் வேண்டியிருக்கிறது...
      எனக்கும் அந்த வாத்த்தையில் உடன்பாடு இருக்கவில்லை என்றாலும்....வந்துவிடுகிறதே...

      நீக்கு
  3. புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளும் போராட்டங்களால் ஒரு மயிரும் விளையப்போவதில்லை.

    உண்மைதான் நண்பரே
    தங்களின் ஆதங்கம் புரிகிறது

    பதிலளிநீக்கு
  4. செல்வா காற்று ஏற்கனவே பங்களூரில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்று ஓரிரு வருடங்களுக்கு முன் வாசித்த நினைவு. ஜிம் நிலையங்கள் போல அங்கு ஆக்சிஜன் சுவாசித்துவிட்டு வரலாம் என்று. டீத்தூளில், பெயர் மறந்து போயிற்று ஒரு மரத்தின் தூள். நிறத்திற்காக.இப்படி நிறைய..

    நம் காய்களை நாமே விதைத்துக் கொள்ளலாம்தான்...ஆனால் மண்ணின் தரம்? அதிலும் பல விஷங்கள் கலந்திருக்கின்றதே. நெகிழிக் குப்பைகளின் விஷம்...தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளிலிருந்து சாயக்கழிவுகள், வேதியியல் ரசாயனம் என்று...அதை நாம் என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னுமிருக்கிறது..பதிவின் நீளம் கருதி குறைத்தேன்....நன்றிகள் உங்கள் இருவருக்கும்...

      நீக்கு
  5. வணக்கம் ஐயா.உண்மை தான் நாம் பணத்தை தந்து விஷசத்தை தான் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறோம் ஐயா.எங்கு கலப்பிடம் எதிலும் கலப்பிடம் தான்.

    நல்ல பதிவு ஐயா.சிந்திக்கும் வகையில் இருந்தது ஐயா.

    பதிலளிநீக்கு
  6. வேதனையான உண்மையின் பிம்பம் கவிஞரே
    தமிழ் மணம் 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே....தங்கள் பதிவுகளிலும் ஒரு ஆவேசம் பார்க்கின்றேன்....

      நீக்கு