சனி, 12 நவம்பர், 2016

ஒழிஞ்சா என்ன?...

அன்பின் மோடி அவர்களுக்கு,

நான் நலமாயில்லை.
தாங்கள் நலமாய் இருப்பீர்கள் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் நான்.நிற்க.
தாங்கள் மிகுந்த யோசனையுடனும்,தெளிவான வழிகாட்டுதலுடனும் அறிவித்த கருப்புப்பண ஒழிப்பின் முன்னோடியான 500,1000 ரூபாய்கள் செல்லாதென அறிவித்தபோது நான் எந்தவித கவலையும் படவில்லை.

எனக்குத்தெரியாமல் என்னிடம் கருப்பு நிறத்திலும்,500,1000ம் இருக்க வாய்ப்பில்லை.

தங்களுடைய மேலான அறிவிப்பினால் எழும் வாதப்பிரதி வாதங்களில் எந்தப்பக்கமும் சாயாமல் பெரும்பாண்மைக்காக காத்திருக்கும் சாமான்யர்களில் நானும் ஒருவன்.

முகநூல்களில்,வாட்ஸ் அப் செய்திகளில்,தொலைகாட்சி விவாதங்களில் கிழித்துத் தொங்கவிட்டும்,சிலாகித்தும் அலங்கரித்த நாடகங்களை நானும் பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்.

ஆனால் திரு.மோடி அவர்களே..
நாட்டின் நீதிமானாகவும்,கடமை உணர்ச்சியும் தவறாத வங்கிகளிடம் பணத்தை மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தீர்கள்.

ஒரு துணைக்கண்டத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கக்கூடிய திட்டத்தை மின்னலென அறிவித்த  நீங்கள் ..பின்னால் வரக்கூடிய இன்னல்களை யோசித்தீர்களா?

இரண்டு நாள்கள் வங்கிகள் இயங்காது..பின்னர் 2000 வரை ATM களில் எடுத்துக்கொள்ளலாம் என்றீர்கள்.
உங்கள் பேச்சுக்கும் பதவிக்கும் மரியாதை கொடுத்து நாங்களும் ஏற்றுக்கொண்டோம்.

இன்று மதியம் வங்கியிலிருக்கும் பணத்தை எடுத்துத்தான் உண்ண வேண்டும் என்ற நிலையில் நீங்கள் உறுதி கூறிய வங்கிகளின் அனைத்து ATM களையும் தட்டியும்,கெஞ்சியும்,அழுதும் பார்த்தும் ஈவு இரக்கமில்லாமல் வேறொரு காகிதத்தை துப்பிவிட்டு விரட்டியடித்தன.

அய்யா,
வங்கியில் இருப்பது எவன் அப்பன் வீட்டுப்பணமோ,கணக்கில் வராத கருப்புப்பணமோ கிடையாது..என் உழைப்பால் உடலை வருத்தி வந்த பணம்.

அதீத நம்பிக்கையுடனும்,மாதம் அபராதமென வசூல் செய்யும் ஒரு வங்கியில் இருக்கும் என் பணத்தை எடுக்கவிடாமல் செய்தது யார்?

நடுநிசியில் பசியால் உறக்கம் வராமல் உள்நாட்டிலேயே இல்லாத உங்களுக்கு கடிதம் எழுதவைத்தது எது?

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்..."

என்றான் எங்கள் பாரதி.
என்னோடு பணமெடுக்க நின்றவர் அநேகம் பசிக்காகவும்,மருந்துக்காகவும் மட்டுமே எனில் எத்தனை ஜகத்தை எரிக்க?

ஆக..
உழைத்த பணம் எப்போதும் எடுக்கலாமென நினைத்து வங்கியில் பணமிருந்தும்,எடுக்க வழியில்லாமல் நடுரோட்டில் நின்று எழுதிக்கொண்டிருக்கும் என் போன்றோரின் பாவத்தால் தான் கருப்புப்பணம் ஒழியுமென்றால்,

எங்கள் பட்டினியிலும்,பரிதவிப்பிலும் தான் அது நடக்கும் என அரசாங்கமே இருக்கும் போது..
கருப்புப்பணம் இருந்துவிட்டுப்போகட்டுமே...

அன்புடன்..
செல்வக்குமார்.

9 கருத்துகள்:

 1. அவங்க சட்டத்துல
  நாம வாழ்ந்தால் அவங்களுக்கென்ன...?
  நாம செத்தா அவங்களுக்கென்ன...?

  பதிலளிநீக்கு
 2. சொல்லோனா துயரை சாமனியர் படும் பாட்டை
  பாரதியைக் கொண்டு மோடிக்கு உணரவைத்தாய்
  எத்தனை பாரதிகள் புரிய வைக்கவேண்டுமோ
  மோடிக்கு

  பதிலளிநீக்கு
 3. சொல்லோனா துயரை சாமனியர் படும் பாட்டை
  பாரதியைக் கொண்டு மோடிக்கு உணரவைத்தாய்
  எத்தனை பாரதிகள் புரிய வைக்கவேண்டுமோ
  மோடிக்கு

  பதிலளிநீக்கு
 4. Indha kashtangal Ellam avargalukku purindhavai dhan, anal nummal matume unara mudiyum. Yezhai, saamaniyan azhudhal Enna, sethal Enna avragalin kalla kaaliyagava pogiradhu,kavalai pada?? Ellam maanamketta en naatu makkal seidha votupizhai. Idhodu illai,innum thodarum num kashtam endru mattum purigiradhu.

  பதிலளிநீக்கு
 5. நாட்டிற்கு நல்லது செய்ய ஏழைகளிடம் மட்டும் விளையாடுகிறது மோடி அரசு இதை சொன்னால் அவனுக்கு தேச துரோகிபட்டம்

  பதிலளிநீக்கு