புதன், 11 ஜனவரி, 2017

வாசித்த வரலாறு...

சமீபத்தில் வாசித்த மிகக்கடினமாய் எனக்கிருந்த

ஒரு புத்தகத்தை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியோடு கொஞ்சம் பழிவாங்கலும் தான்...

இந்திய வரலாற்று எச்சங்களில் அசோக ஸ்தூபிக்கு ஒரு மறுக்க முடியாத இடமுண்டுதான்.

போன மாதம் புதுக்கோட்டையில் நடந்த புத்தக கண்காட்சியில் வாங்கிய நூல்களில் ஒன்றுதான் இது...
மற்ற புத்தக வாசிப்பில் இதை ஓரங்கட்டி இருந்தேன்..

சில நாள்களுக்கு முன்னால் எஸ்.ரா பரிந்துரைத்த புத்தகங்களுக்குள் இதன் பெயரும் இருந்ததை படித்துவிட்டு வாசிக்க எடுத்தேன்.

*பேரரசன் அசோகன்..
மறைக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு*

சார்லஸ் ஆலன் என்பாரால் எழுதப்பட்டு தருமி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது..
ஐநூறு பக்கங்கள் கொண்ட எதிர் வெளியீடு...
விலை 400 ரூபாய்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளின் குறிப்புகள் சிந்திக்கிடக்கிறது பக்கங்கள் யாவும்..

அசோகர் என்பவர் யாரென்பதில் ஆரம்பமாகும் தேடல்..
ஸ்தூபிகள் தோறும் ஆதாரம் தேடும் பொறுமையும் ...முயற்சியும் பாராட்டி மெச்சுமளவிற்கு உள்ளது.

கிழக்கிந்தியக்கம்பெனி தன் வியாபார நோக்கத்தின் ஒரு கிளையாக இந்தியாவின் பழமையை ஆராய்ச்சியும் செய்ய ஊக்குவித்தது..

ஐரோப்பாவிலிருந்து வந்த போர்வீரர்களுள் சிலரும்..அதிகாரிகளில் சிலரும் மிகுந்த தன்னெழுச்சியோடு ஆராயப்புகுந்தனர்.
வங்காளத்தை மையமாக்கிக்கொண்டு வரலாற்றை தேடி இருக்கின்றனர்.

புத்தர் என்றும் சாக்கிய முனியென்றும் வழங்கப்பட்ட கவுதமரின் பழமை தேடி பல்வேறு தகவல்களின் அடிப்படையில் அன்றைய மகத ,இன்றைய பீகாரின் நிலையை தெளிந்த விதம் அப்படி ஒரு கடினம்..

ஆராய்ச்சியாளர்களுக்கே என வரும் பிரச்சனைகள்...மோதல்கள் என அசோகனின் வரலாற்றை விடவும் அவர்கள் வரலாறு அத்தனை இருக்கிறது..

சந்திர குப்த வாரிசில் பிந்துசாரனின் மகனாய் அவதரித்ததாக சொல்லப்படும் அசோகர் பற்றிய ஆதாரத்தகவல்களே அத்தனை குளறுபடி.
இடையில் ஆராய்ச்சி காபூல்,காந்தகார்,இலங்கையின் மகாவம்சமென விரிந்து பரவுகிறது..

புத்தகம் முழுவதும் தேடிப்பார்த்தும் எனக்கு ஒன்றும் தெளிவு ஏற்படவில்லை..

உண்மையான ஆராய்ச்சி அறிவும்.மிக தெளிவான உள்ளமும்,நிறைய நினைவாற்றலும் உள்ளவர்களுக்கு இது பொக்கிஷம்..

பவுத்தம் பற்றிய அடிப்படை அறிவுள்ளோரின் மேலதிக தேடலுக்கு இது ஏணியாயிருக்கும்..

எனக்குப்பட்டதெல்லாம் இந்தியா எனும் நம் நாடு பழமைகள் ஊறிக்கிடக்கும் பொன்னான பூமி...
வெளிவந்தது குறைவே..

கீழடி போல இன்னும் காலடி படாத பல தகவல்கள் புதைந்துதான் இருக்கின்றன..

ஆங்கிலேயன் நம் விலைமதிப்பில்லா பொருட்களோடு...பழமையான எல்லாவற்றையும் அவனோடு எடுத்துப்போய் காட்சியகத்தில் வைத்தாலும் இன்னும் இருக்கத்தான் செய்கிறது ஏராளம்..

புத்தகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்களின் பெயர்கள்..சில இடங்களின் படங்கள் பிரமிக்க வைக்கிறது..

என் ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூலின் முழுமையான முதல் வாசிப்பு இது என்பதால் சிறுபிள்ளைத்தனமான சில வார்த்தைகள் இருக்கலாம்..
நீங்கள் இதை வாசித்து இன்னும் பல கருத்துகளை கூறுவீர்களாயின் இன்னும் மகிழ்வேன்.

6 கருத்துகள்:

  1. உங்களின் ஆராய்ச்சி / தேடல் சிறப்பாக அமையும்...

    வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. "கீழடி போல இன்னும் காலடி படாத பல தகவல்கள் புதைந்து தான் இருக்கின்றன..." என்பதும் உண்மையே!
    நாளைய தலைமுறைக்கு எத்தனையோ தெரியாமல் போகலாம்.

    பதிலளிநீக்கு
  3. இன்னும் மறு முறை ஆழமாக படி

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு அறிமுகம். நன்றி செல்வா....

    பதிலளிநீக்கு
  5. மிகச் சிறப்பான அறிமுகம்! எத்தனையோ அகழ்வாராய்ச்சிகள் வெளிவந்தாலும் அனைத்தும் மீண்டும் புதைக்கப்பட்டு ...என்ன ரகசியமோ தெரியவில்லை. நம் நாட்டில் பொக்கிஷங்கள் மட்டுமல்ல ரகசியங்களும் மர்மங்களும் புதைக்கப்பட்டிருக்கின்றதோ??!!!! ஏனென்றால் சில அகழ்வாராய்ச்சிகள் மீண்டும் புதைக்கப்படுவதன் காரணம்??!!! இப்படித்தானே எண்ண வைக்கிறது.

    பதிலளிநீக்கு