சனி, 16 ஜனவரி, 2016

கண்ணாமூச்சி ஏனடி?


இரவுப்பூவே.
ஏன்
மலர்ந்தாய்?

உணர்வு
உப்புகள்
குறையும்
என்
வாழ்க்கையில்
அப்படி
என்ன
பரிகாசம்?
வாசம்
காட்டி
மறைந்து
கொள்கிறாய்?

மலைதாண்டி
வரும்
நிலவே..
உன்
வெளிச்ச
விசாரணைகளுக்காய்
நான்
குறுகி
நிற்கிறேன்..
நீயோ
மேகங்களுக்குள்
மறைந்து
விளையாட்டு
காட்டுகின்றாய்.

மோகங்கள்
தொலைத்து
நான்
பரதேசியானேன்..

என்
வண்ணம்கூட்டி
நீ
உபதேசியாகிறாய்.

வார்த்தைகள்
பிடித்து
விளையாடும்
சிறுபிள்ளை
நான்..

பூக்களில்
தாவினால்
பிடித்துக்கொள்ளலாம்
பூவே
தாண்டினால்?

நடந்து
கால்
சோர்ந்து
தனித்திருப்பேன்..
நீ
வாழ்வின்
வழிசொல்லி
ஓடவைக்கிறாய்.

தவழத்
தொடங்குகிறேன்.

நடைபழக
விரல் கொடு.

ஓடிடும்
என்
பாதைக்கு
கோடிடு..

உயிரோடிருந்தால்
ஒரு
நாள்
பார்ப்பேன்..

இறைவன்
எனக்கொரு
வரம்
தந்தால்
இதைத்தான்
கேட்பேன்...













8 கருத்துகள்:

  1. வாவ்! அருமை செல்வா! சில வரிகள் ரசிக்கவைத்தன உணர்வு
    உப்புகள்
    குறையும்
    என்
    வாழ்க்கையில்
    அப்படி
    என்ன
    பரிகாசம்?
    வாசம்
    காட்டி
    மறைந்து
    கொள்கிறாய்?//

    பதிலளிநீக்கு
  2. அதானே?யார் அப்படி கண்ணாமுச்சி ஆட்டம் காட்டுவது? உப்புக்கள் குறையும் போது தான் வாழ்க்கையில் உப்பின் அருமை தெரிகின்றது என்பதனால் இரவுப்பூ வும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகின்றதோ என்னமோ?

    நடந்து கால் சோர்ந்து தனித்திருப்பவர்களுக்கு ஓட கற்றுத்தர வேண்டும் என அந்த இரவுப்பூவுக்கும் புரிந்திருக்கின்றதோ என்னமோ?

    கவிதை வரிகள் உணர்ந்து எழுதப்பட்டதாய் தோன்றுவது அருமை. எதற்கும் முடிவொன்றுஇல்லை. எல்லாமே ஆரம்பம் தானே....?

    தவழ்தலும், நடை பயில்தலும் அதனுள் அங்கமாய்.... வேகமாய் ஓட என் மனமார்ந்த நல் வாழ்த்துகள் செல்வா சார்!

    பதிலளிநீக்கு
  3. வார்த்தைகளை பிடித்து விளையாடுவதை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  4. அருமை ஐயா..நிலாவை நானும் இரசித்தேன் தங்களின் பார்வையில் புதிய வார்த்தைகளோடு..

    நன்றி ..

    பதிலளிநீக்கு
  5. எனக்குபிடித்த வரிகள்....ஓடிடும்
    என்
    பாதைக்கு
    கோடிடு..

    பதிலளிநீக்கு