வியாழன், 21 ஜனவரி, 2016

தேடுங்கள்...தெரியும்..

என்
வரமொன்றைக்
காணவில்லை..

எனக்கு
உதவுங்கள்..

கண்களை மூடி
தேடிப்பாருங்கள்.

தூரத்தில்
ஒளிப்புள்ளியாய்
தெரியும்.
துரத்தி ஓடாதீர்கள்.

சில நேரம்
உங்கள்
அருகிலும்
திரியும்.

மூடி மறைக்கலாம்
என
முட்டாளாகாதீர்கள்
மூன்று
நொடிகள் போதும்..
முளைவெடித்து
கிளை பரப்பி
மரமாய்
மாறும்.


ஆறு

குளங்களென

அதை
தேடிப்பார்க்காதீர்கள்..

அது
எப்போதும்
சாகாது...

நல்ல வாசமென்று
நாசமாகாதீர்கள்
எந்த
வாசமும்
பிடிக்காமல்
போவீர்கள்.

அலைபேசி,
குறுஞ்செய்தி,
இணையவழி
விசாரிக்காதீர்கள்.
அதன்
தொடர்பு எல்லை
இன்னும்
அறுதியிட்டு
முடியவில்லை.

கடல் தாண்டிய
நண்பர்களும்
என்
கவலையில்
பங்கு கொள்ளலாம்.

களவு போனதுக்கு
கால்கள்
இருக்காது..
இறக்கைகள்
இருக்கும்.

விசாக்கள்
இல்லாத
வெளிநாட்டுப்பறவை
போல
உலாவித்திரியும்..
உற்றுப்பாருங்கள்
நிமிர்ந்தே
நடக்கும்.

கண்கள்
திறந்து மூடும்.
நாசிகள்
மூச்சும் விடும்.
அதன்
வாயருகில்
காது கொண்டு
கேளுங்கள்..

சில நேரம்
கவிதைகள்
சொல்லிக்
கொண்டிருக்கும்.

அது
எப்போதும்
ஒளியைச்
சிந்திக்
கொண்டிருக்கும்.

ஓராயிர
அடையாளம்
அதைப்பற்றிச்
சொல்லலாம்..
ஒருவேளை
அதைப்பார்த்தால்..

நான்
தேடுவதைச்
சொன்னாலும்....

அது குறித்து
கவிதை
எழுதுவதை
சொல்லாதீர்கள்....

8 கருத்துகள்:

  1. உங்கள் கண்களில் அதைத் தேடலாம் என்றால் கண்ணாடி போட்டு மூடி வைத்திருக்கிறீர்கள் . அது எங்குமில்லை உங்களிடமே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல ரசனையாக இருந்தது கவிஞரே... தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. நான்
    தேடுவதைச்
    சொன்னாலும்....

    அது குறித்து
    கவிதை
    எழுதுவதை
    சொல்லாதீர்கள்....

    சரிங்க சார்!

    பதிலளிநீக்கு
  4. அட! உங்கள் வரம் அதை இப்போதுதானே பார்த்தோம்...அது உங்கள் கண்கள் மூடித் திறக்கும் போது உங்களுக்குள்ளே நுழைந்தது தெரியவில்லையா? அறியவில்லையா? அறியதது போல் மயக்கத்தில் கவிதையா?!!!! உங்களுக்குள்ளேயே தேடுங்கள்.. செல்வா?!!! ....

    பதிலளிநீக்கு
  5. இருங்கள்....யாரப்பா அது அந்த வரத்தைப் பற்றிப் பேச வந்தால் முன்னரே மொழிந்தது??!!!ஹஹஹஹஹ் முதலில் வந்த மறுமொழியைத்தான் சொல்கின்றோம்....நன்றி சார்லஸ்....

    பதிலளிநீக்கு
  6. அருமை ஐயா..உங்கள் கவிதைக்கு நான் இரசிகை ஐயா..

    பதிலளிநீக்கு