வெள்ளி, 23 செப்டம்பர், 2016

என்னங்கடா உங்க கல்வி..

சின்ன பிளாஸ்பேக் சொல்லனும்.




90 களில் திருப்பூரில் ஒரு பனியன் கம்பெனியியில் வேலை பார்த்தேன்..

நிறுவனத்தின் முதலாளி ஒரு பார்ஸி இனக்காரர்.கம்பெனிக்காக ஒரு மேலாளர் தேர்வு நடத்தி MBA படித்த ஒருவரை நியமித்தார்.முதலாளியின் அறையில் மட்டும் ஏசி இருந்தது மாறி அவர் அறைக்கும் ஏசி போட்டார்கள்.பலவேளைகளில் மேலாளர் அறையில் முதலாளி நின்றுகொண்டிருப்பார்.மேலாளர் உட்கார்ந்திருப்பார்..
முதலாளியிடமே ஒரு நாள் கேட்டேன்..
நீங்கள் ஏன் நிற்கிறீர்கள்  என.
அவர் சொன்னார் அவர் MBA படிச்சுருக்கார்...
அவ்வளவு தான் பிளாஸ்பேக்.

நேற்று ஒரு நிறுவனத்தின் நேர்முகத்தேர்வில் நானும் கேள்வியாளனாக இருந்தேன்.

சரி..சரி...
சொல்லிடுறேன்..
ஒரு கடைக்கு சாமான் விற்க ஆள் எடுத்தாங்க...
என்னையும் உதவிக்கு கூப்பிட்டுருந்தாங்க..

மிகத்தெளிவாக சம்பளம் 7000 என ஆரம்பத்திலேயே சொல்லியும் கிட்டத்தட்ட 40 MBA,ME,BE, படித்தவர்கள் வந்திருந்தார்கள்.

முதல்வகுப்பில் தேர்ச்சி அடைந்தவர்கள். பெரும்பாலும் பெண்கள்.
முதலில் இந்த சம்பளத்திற்கு வருகிறார்களே என்ற ஆச்சர்யமும் வருத்தமும் இருந்தது.
சில கேள்விகள் கேட்ட பொழுது அவர்களின் அறிவு அய்யோ பாவம் என்றிருந்தது.

வாழ்க்கையின், சமூகத்தின் சின்ன அறிவும் அவர்களிடம் இல்லை.சமயோஜிதம் என்பது அறவே இல்லை.
குறும்பு இருந்த அளவு ஞானமில்லை.
ஒருவர் முகநூலும்,வலைகளில் மேய்வதும் பிடிக்குமென்றார்.

அத்தனை பேர்களில் ஐவர் கூட எனக்கு திருப்தி இல்லை..
இத்தனைக்கும் அவர்கள் படிப்பு இதற்குத்தேவையே இல்லை.

முடிந்தபின் வீட்டிற்கு வந்தும் மனசு ஆறவில்லை.

அய்யோ...
என் தேசத்துப் பிள்ளைகளே..உங்களை எப்படியெல்லாம் இந்த கல்விமுறை சேதப்படுத்தியிருக்கிறது.

வீதிக்கு ஏழு இஞ்சினியர்கள் வாழும் தேசமாய்ப்போன என் நாட்டில் புத்தம் புதிய கண்டுபிடிப்புகள் ஏன் வராமல் போனது.?

இந்த கல்வி உங்களுக்கு என்னதான் சொல்லிக்கொடுக்கிறது?

மிக உறுதியாக ஒன்று சொல்வேன்..
மிகத்திறமையான பிள்ளைகளாக போற்றப்படுபவர்கள் இந்தக்கல்விக்கூடங்களால் வந்திருக்கமாட்டார்கள்.
அது அவர்களின் மரபணுக்களில் இருந்திருக்கும்,அல்லது அவர்களின் புத்தி கிரகித்திருக்கும்.

நம் கல்விக்கூடங்கள் பட்டதாரிகளை மட்டும் உருவாக்குகிறது.
புத்திசாலிகளை அல்ல.

சக மனிதர்களை புரிந்துகொள்ளவிடாமல், சமூகத்தோடு எப்படி வாழ்வது எனச் சொல்லிக்கொடுக்காமல் எப்படி இருந்துவிடப்போகிறது உங்கள் கல்வி?

லட்சக்கணக்கில் காசையும்,பெற்றோர்களின் கனவுகளையும் அடகுவைத்து பெறும் கல்வி..
வடநாட்டிலிருந்து ஹோட்டல்களின் மேசை துடைப்பவனின் வருமானத்தைவிட குறைந்த சம்பளம் வாங்கவா இத்தனை கல்வி நிலையங்கள்?

இழுத்து மூடுங்கள் உங்கள் கல்விச்சாலைகளை..
கற்றுக்கொடுங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு மேசை துடைப்பதை.

அல்ஜிப்ராவும்,பின்னங்களும் தேவையான அளவு  மனித முகங்களைப்படிப்பது அவசியமல்லவா?

மதிப்பெண் குறைவதற்காகவும்,
சக தோழி காதலிக்கவில்லை என்பதற்காகவும் உயிர்களில் முடியும் வன்மம் சமூகத்தில் இல்லை.
கல்விச்சாலைகளில் ஆரம்பிக்கிறது.

மனப்பாட படிப்புகள் மடையர்களைத்தான் உருவாக்குகிறது.மனிதர்களை அல்ல.

ஆயிரக்கணக்கானவர்களில் சிலர் புத்திசாலிகளாக வெல்வதில் மகிழ்ச்சியில்லை.

காவேரிக்காக போராடும்
அரசியல் வாதிகளின் அத்தியாவசியத்தேவை கல்வி முறைகளில் வேண்டும்.

ஆரம்பபடிப்புகளில் இருந்து செய்யவேண்டி இருக்கிறது ஆபரேஷன்.

கல்வி என்னும் அடிவயிற்றில் புற்றை வைத்துக்கொண்டு புணுகு பூசி நடிப்பது அழகுமல்ல..நல்லதுமல்ல.

அறிவார்ந்த அறிஞர்கள் கூட்டமும் அதிகாரத்துக்கு பயந்து வாய்மூடிக்கிடந்தால்,அல்லது மேலோட்டமாக எதிர்ப்பு சொல்லிவிட்டு மறைந்து போனால் நாம் நம் எதிர்கால சக்திகளை நெட்டை மரங்களாகவே வளர்த்தெடுப்போம்.

இந்திய தேசம் வறட்டுத்தனமான வேதாந்திகளாலும்,
பொது அறிவுமில்லாத குருட்டுப்பிறவிகளை
கொண்டதாகவே இருக்கும்.

இந்த விசயத்திலேனும் அரசியல்வாதிகளை எதிர்பார்க்காமல் அறிவாளிகள் வீதியில் இறங்கவேண்டும்.
ஏனெனில் இந்த நாட்டில் கல்விக்கூடங்கள் இல்லாத அரசியல் வாதிகள் இல்லை..
அவர்களுக்குஇத்தகைய அடிமைகள் தான் தேவை.

அவசரச் சிகிச்சைக்கான அவசிய நேரமிது.


18 கருத்துகள்:

  1. உங்கள் ரௌத்திரம் சரியே .ஆனால் பிரச்சினையின் ஆணிவேர் எது என்பது ஆராய வேண்டிய விஷயம். பின்னூட்டம் நீளும் என்பதால் பின்னர் எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. Aha!aha!!ahaa!!! Idhu dhan ayya nangal ungalidam edhirparpadhu. Azhagana kobam. Niyaayamana sindhanai. Miga sariyana konathil alasi irukireergal.

    Arasiyalvadhigalidam irundhu kalvi koodangalai meetu eduthale Ellam sariyagi vidum. Kalvi membaatirku kalviyaalargalin alosanaiyai madhikkamal angum arasiyal irupadhu idhan mukkiya karanam. Padikkadha, padippin arumai theriyadha avargal epadi kalviyin tharathai theermanikka mudiyum??

    Indraiya kalvi koodathil thodangum edhirmarai ennangal indha Kaala thalaimuraiyai eppadi kaavu vangugiradhu endru rombave nermaiyaga vilaasi irukireergal. Ungal athanai varthaiyum arasiyalvadhikko, kalvikoodangaluko mattumalla, perasaiyaal mark muttai poda pillaigalai palli pannaiyil serkum petrorukkum sariyaana savukkadi. Ungal theervai pinpatrinal edhirkala thalaimuraiyai kaapatralam. Appo dhan Vallarasu. Illenna......nan ennatha solla??? Idhuku velinaatukarane nammai aandu irukkalam.

    பதிலளிநீக்கு
  3. அனைத்துத் திறன் மலர்த்தும் மக்கள் மையக் கல்வி முறை வந்தாலொழிய இப்போதுள்ள செக்குமாட்டுச் சிந்தனைகள் மாறாது. புறையோடிய புண்ணுக்குப் புனுகு தடவும் போக்குதான் தொடரும்.

    பதிலளிநீக்கு
  4. இன்றைய கல்வி பணத்தின் பின்னே அண்ணா...
    நாமும் பகட்டுக்காக கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்...
    இந்த நிலை மாறாது.... இனி இதுதான் தலைவிதி....
    படிப்பு என்பது பட்டத்துக்கு மட்டுமே...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் !

    காலத்துக்கு ஏற்ற பதிவு !
    நன்றி

    பதிலளிநீக்கு
  6. இதத்தானய்யா நா ஊர் ஊராக் கத்திக்கிட்டிருக்கேன்...
    எனது “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” கட்டுரை நூலின் மையமே இதுதானே? ”படிப்பு இருக்கிறது அறிவு இல்லை. பட்டம் பெற்றிருக்கிறார்கள் தகுதி இல்லை. முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு உலகம் தெரியவில்லை” நேரில் பார்த்த அதிர்ச்சி உங்கள் வரிகளில் கொப்பளிக்கிறது. இதில் புதிய கல்விக்கொள்கை வேறு! ஏற்கெனவே வாய்கோணலாம், இதுல கொட்டாயி வேறயாம்..என்னத்தச் சொல்ல செல்வா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முத்து நிலவன்நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் இப்படி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போலத்தான்

      நீக்கு
    2. நான் தேர்ந்திருக்கும் தலைவர்கள் நல்லவர்கள்தான். அவர்கள் வல்லவரில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த ஊடகப் போராட்டம்தான் எங்கள் மேடைகள் தமிழரே! விடுவமா? “உண்மை ஒருநாள் புலனாகும்.-அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும். பொறுமை ஒருநாள் புலியாகும் - அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்” னு நம்ம ப.கோ. இத ஏற்கெனவே சொல்லி வச்சிருக்காரு தலைவா!

      நீக்கு
  7. இந்த படிப்பில் இருந்துதான் அப்துல்காலாம் மற்றும் சுந்தர் பிச்சைகளும் வெளிவருகின்றார்கள் அது எப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது விஜயன்,ஆனால் நமக்கு ஒரு கலாம் போதுமா என்பதே கேள்வி..

      நீக்கு
    2. கலாம் சுந்தர் பிச்சை போன்றவர்கள் படித்தது அந்த கால கல்விமுறையில் அவர்கள் இந்த கால கல்வி முறையில் படித்து பட்டம் பெற்றவர்களாக இருந்தால் அவர்களும் இந்த இண்டர்வீயூவில் கலந்து இருந்து நண்பர் செல்வாவிற்கும் திருப்தி ஏற்பட்டு இருக்காது என்பதுதான் உண்மையாக இருந்திருக்கும்

      நீக்கு
    3. அப்துல் கலாமும், சுந்தர் பிச்சையும் ஒன்றல்ல...

      நீக்கு
  8. ///மிகத்தெளிவாக சம்பளம் 7000 என ஆரம்பத்திலேயே சொல்லியும் கிட்டத்தட்ட 40 MBA,ME,BE, படித்தவர்கள் வந்திருந்தார்கள்.///

    செல்வா இந்த வரியில் ஒரு தவறு இருக்கிறது. இதில் படித்தவர்கள் வந்து இருந்தார்கள் என எழுதி இருப்பது எனக்கு தவறாகப்படுகிறது காசு கொடுத்து பட்டம் வாங்கியவர்கள் வந்திருந்தார்கள் என்றல்லவா வந்து இருக்க வேண்டும், படித்தவர்கள் வந்து இருந்தால் உங்களின் கேள்விகளுக்கு நல்ல பதிலை தந்து இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  9. இன்றைய கல்வி மதிப்பெண்களை மட்டும்தானே தருகிறது
    வாழ்வியலைக் கற்றுத்துருவதில்லையே

    பதிலளிநீக்கு
  10. //நம் கல்விக்கூடங்கள் பட்டதாரிகளை மட்டும் உருவாக்குகிறது.
    புத்திசாலிகளை அல்ல.//

    வேதனை. ஆதங்கம் சொன்ன கட்டுரை.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. செல்வா நமது கல்விமுறை ஊழல்கள் நிறைந்து இருக்கும் போது எப்படி நல்ல மாணாக்கர்களை உருவாக்க முடியும்? பணமும் அதிகாரமும் விளையாடும் கல்வித்துறை எப்படிப் புனிதமாக இருக்கும்? நாட்டின் கல்வித்துறை என்பது புனிதமானது இல்லையா? நல்ல சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டுமல்லவா? இப்போது தலைவறைவராக இருக்கிறாரே ஒருவர் அவர் யார் ஹாஅன் நினைவுக்கு வந்து விட்டது மதன்...எத்தனையோ கோடி அடித்தாரே மருத்த்வ சீட் வாங்கித்தருகிறேன் என்று அதில் விழிந்தார்களே மக்கள் இப்படி முட்டாள்கள் இருக்கும் வரை நம் நாட்டி என்ன கல்வியை எதிர்ப்பார்க்கின்றீர்கள்? சீட்டே பணம் கொடுத்து எனும் போது ஒரு பட்டத்தை காசு கொடுத்து வாங்க முடியாதா என்ன? அந்த அளவிற்கு ஊழல் மலிந்து கிடக்கிறது இங்கே. இங்கு வெறும் பட்டத் தாள்கள்தான் பிறப்பிக்கப்படுகிறதே அல்லாமல் நல்ல அறிவுள்ளவர்களையோ, சிந்தனையாளர்க்ளையோ, அல்லது படிப்பதை பரீட்ச்சார்த்தமாக உபயோகிக்கும் திறன் உடைய மாணவர்களையோ நமது கல்விக் கூடங்கள் உருவாக்குவதில்லை. எவ்வளவோ எழுதலாம்...எனக்கு மனம் வெம்பி விடும் நமது கல்வி முறையை நினைத்துவிட்டால்...ஆதங்கம் கோபமாக வெளிப்பட்டுவிடும்...

    கீதா

    பதிலளிநீக்கு